என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    செம்பனார்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீர்காழி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே கிடங்கல் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகள் ரேணுகாதேவி (வயது 21). கீழையூர் கிராமம் உடையார் இருப்பு தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் முருகன் (30). கொத்தனாரான இவருக்கும் ரேணுகாதேவிக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    கணவன் வீட்டில் வசித்து வந்த ரேணுகாதேவி நேற்று முன்தினம் மதியம் தூங்குவதற்காக அறைக்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் வீட்டில் இருந்தவர்கள் அறையின் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ரேணுகாதேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேணுகா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட ரேணுகாதேவிக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆவதால் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் விசாரணை செய்து வருகிறார்.
    தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிர்கள் பயிரிடப்படுகிறது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்டவைகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலைக்காய்கறிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

    கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது. இதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.

    தியாகி குமரன் மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    நாட்டு தக்காளி-ரூ.100, ஆப்பிள் தக்காளி- ரூ.90, புடலைங்காய்- ரூ.35, மாங்காய்- ரூ.60, எலுமிச்சை- ரூ.40, தேங்காய்- ரூ.35, கத்தரி- ரூ.80, வெண்டைக்காய்- ரூ.70, அவரை-ரூ.70, மிளகாய்-ரூ.40, பீன்ஸ்-ரூ.80, பாகற்காய்-ரூ.60, முட்டைக்கோஸ்-ரூ.60, வெள்ளரி-ரூ.20, பீட்ரூட்-ரூ.60, சவ்சவ்-ரூ.20, கேரட்-ரூ.80, பச்சை பட்டாணி-ரூ.180, சுரைக்காய்-ரூ.50, பீர்க்கங்காய்-ரூ.80, முள்ளங்கி-ரூ.50, இஞ்சி-ரூ.40, கருணை கிழங்கு-ரூ.40, சேனை கிழங்கு-ரூ.25, சேப்ப கிழங்கு-ரூ.30, உருளை கிழங்கு-ரூ.40, பெரிய வெங்காயம்-ரூ.40, சின்னவெங்காயம்-ரூ.30, காலிபிளவர்-ரூ.50, பூண்டு-ரூ.160க்கு விற்பனையாகி வருகிறது.

    தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிர்கள் பயிரிடப்படுகிறது. விளையும் பயிர்களை பூலுவப்பட்டி, தொண்டாமுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 14 கிலோ எடையுள்ள டிப்பர் தக்காளி நேற்று முன்தினம் 950 ரூபாய்க்கும், நேற்று 1,200 ரூபாய்க்கு விற்பனையானது.

    மழை குறைந்தாலும் தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். அதுவரை விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
    செம்பனார்கோவில் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வீட்டின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகுமார் (வயது 29) என்பதும், வீட்டின் அருகே சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    முகமது சிராஜ் காயம் காரணமாக இடம் பெறாத நிலையில், ஐ.பி.எல். தொடரில் அசத்திய ஹர்ஷல் பட்டேலுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றும்.

    இந்திய அணி விவரம்:

    1. கே.எல். ராகுல், 2, ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ரிஷாப் பண்ட், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. வெங்கடேஷ் அய்யர், 7. அக்சார் பட்டேல், 8. அஸ்வின், 9. புவனேஷ்வர் குமார், 10. தீபக் சாஹர், 11. ஹர்சல் பட்டேல்.

    நியூசிலாந்து அணி விவரம்:

    1. மார்ட்டின் கப்தில், 2. டேரில் மிட்செல், 3. மார்க் சாப்மேன், 4. கிளென் பிலிப்ஸ், 5. டிம் செய்பெர்ட், 6. ஜேம்ஸ் நீஷம், 7. இஷ் சோதி, 8. மிட்செல் சான்ட்னர், 9. டிம் சவுத்தி, 10. ஆடம் மில்னே, 11. டிரென்ட் பவுல்ட்.
    சீர்காழியில் சொகுசு கார், ஆட்டோவில் மதுபானம் கடத்தி வந்தது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அர்ஜுனன், தில்லை நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் சீர்காழி பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சீர்காழி நோக்கி வந்த இனோவா சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 180 மில்லி அளவு கொண்ட புதுச்சேரி மாநில 140 மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த சட்டநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா (28), சீர்காழி தென்பாதி வவுசி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), தென்பாதி எம் ஆர் ராதா நகரைச் சேர்ந்த வினோத் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தப்பி ஓடிய திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த நபரை தேடி வருகின்றனர். இதேபோல் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் புதுச்சேரி மாநிலம் மதுபான பாட்டில்கள் 148 இருந்ததை கைப்பற்றி ஆட்டோவில் வந்த சீர்காழி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த சங்கர் (26) அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (68) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அணிக்கடவு- வாகன தொழுவு இடையே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அணிக்கடவு- வாகன தொழுவு இடையே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி  வெள்ளம் சென்றது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமார் அவரது தந்தை சின்னச்சாமியுடன் தரைப்பாலத்தை ஆட்டோவில் கடந்து செல்ல முயன்றார். 

    அப்போது ஆட்டோவை வெள்ளம் இழுத்து சென்றது. இதில் செல்வகுமார் அங்குள்ள மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார். சின்னசாமியை வெள்ளம் இழுத்து சென்றது. அவரது நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை. 

    அவரை தேடும் பணியில் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 

    இந்தநிலையில் இன்று காலை சின்னச்சாமி பிணமாக மீட்கப்பட்டார். 
    மூதாட்டியை மீண்டும் பராமரிக்காமல் விரட்டி அடித்தால் அவரிடம் புகார் மனு பெற்று மகன்களிடம் இருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத்பீவி(வயது 90). கணவரை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அஷ்ரப் அலியுடன் வசித்து வந்தார். மகன் வெளிநாடு சென்றதும் தாவூத்பீவியை அவரது மருமகள் கடந்த மாதம் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அதே ஊரில் வசித்து வரும் தனது மூத்த மகன் ஷேக் அலாவுதீனிடம், தாவூத்பீவி சென்றார். அங்கும் அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தன்னை பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் என்றும் பாராது அவரும் தாவூத்பீவியை விரட்டி விட்டுள்ளார். இதனால் வேறுவழியின்றி தாவூத்பீவி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரும் தனது தாயை ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதை அறிந்த வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தார் தாவூத்பீவியை தங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்ளுமாறு கூறியும் மகன்கள் இருவரும் கேட்கவில்லை.

    இதனால் ஆதரவு இல்லாமல் நிர்கதியான தாவூத்பீவி அக்கம், பக்கத்தினர் அளித்த உணவை உண்டு தனது வாழ்நாளை கழித்து வந்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறையில் கடந்த மாதம் 4-ந் தேதி மாவட்ட கலெக்டரின் மனு நீதிநாள் முகாம் நடந்தது. இந்த முகாமில் கலந்துகொண்ட தாவூத்பீவி தனது நிலையை எடுத்துச்சொல்லி தன்னை தனது பிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

    எனது வீட்டை பிடுங்கிக்கொண்டு அதில் அவர்கள் வசித்து வருகின்றனர். ஒருவேளை உணவுகூட கொடுக்க விருப்பம் இல்லாமல் என்னை துரத்தி விட்டுள்ளனர். எனக்கு உரிய சொத்தை அளித்தாலே இறுதி வரை நான் நிம்மதியாக வாழ்வேன். இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறினார்.

    இதனையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் தாவூத்பீவியை அவரது இளைய மகன் அஷரப் அலி வீட்டில் ஒப்படைத்து அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டுச்சென்றனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்து கொண்டு இருந்த நேரத்தில் தாவூத்பீவியை வீட்டை விட்டு வெளியேற்றி வாசற் கதவை பூட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் இருக்க இடம் இல்லாமல் தெருவில் மழையில் நனைந்தபடியே தாவூத்பீவி அக்கம் பக்கத்தினர் கொடுத்த உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இதுகுறித்த தகவல் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கவனத்திற்கு சென்றது.

    இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் மனோகர் மற்றும் குத்தாலம் போலீசார், வாணாதிராஜபுரம் ஊர் ஜமாத்தார்கள் மூதாட்டி தாவூத்பிவீயை அவரது மூத்த மகன் ஷேக் அலாவுதீன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை விட்டுச்சென்ற போலீசார், அவருக்கு அறிவுரைகள் கூறி பெற்ற தாயை இறுதி வரை நல்லமுறையில் பராமரிக்குமாறு கூறினர். இதனால் பல நாட்களாக இருக்க இடமின்றி, சாப்பிட வழியின்றி தவித்து வந்த மூதாட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மீண்டும் மூதாட்டியை பராமரிக்காமல் விரட்டி அடித்தால் மூதாட்டியிடம் புகார் மனு பெற்று மகன்களிடம் இருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கார்த்திகை மாதம் முதல் தை மாதம் மகரவிளக்கு பூஜை வரை குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள். அவ்வாறு வரும்போது தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கும் வந்து செல்வார்கள்.
    பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதத்தை பக்தர்கள் தொடங்குவார்கள். அப்போது புனித தலங்களில் அதிகாலையில் பூஜை செய்து மாலை அணிவார்கள்.

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் அதிகாலையில் பக்தர்கள் குளித்து அருவிக்கரையில் உள்ள விநாயகர் கோவில் முன்பு மாலை அணிவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த மாரிமுத்து, சுப்புராஜ் உள்ளிட்ட பக்தர்கள் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் நேற்று காலை பூஜை செய்து சன்னிதானத்தில் வைத்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    ஆண்டுதோறும் தென்காசி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து விட்டு செல்வார்கள். கார்த்திகை மாதம் முதல் தை மாதம் மகரவிளக்கு பூஜை வரை குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள். அவ்வாறு வரும்போது தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கும் வந்து செல்வார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள கடைகளில் நல்ல வியாபாரம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் குளிப்பதற்கு அனுமதி இல்லாததால் குற்றாலம் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துஉள்ளனர். எனவே குற்றாலம் அருவிகளில் தற்போது ஐயப்ப பக்தர்களை குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
    மயிலாடுதுறையில் துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் புனித நீராடி பாவங்களில் இருந்து விடப்பட்டதாக ஐதீகம். ஒரு காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுக தீர்த்தவாரி விழா நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டு புனித நீராட வெளியூரை சேர்ந்த நடக்க முடியாத பக்தர் ஒருவர் விரும்பினார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை. அவர் வருவதற்குள் கடைமுக தீர்த்தவாரி விழா முடிவடைந்து விடுகிறது.

    இதனால் மனமுடைந்த பக்தர் இறைவனை நோக்கி வருத்தத்துடன் பிரார்த்தனை செய்ததால், அவருடைய கண் முன்பு தோன்றிய சிவபெருமான் உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனைப் பெறுவார்கள் என்று அருளாசி வழங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல நேற்று மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதையொட்டி மயூரநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு காவிரி துலாகட்டத்தில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் அஸ்திரதேவர் காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
    வெளிப்புறம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட புது ஸ்மார்ட்போனினை ரியல்மி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
      

    அண்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பரவலாக வெளியாக துவங்கிவிட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது ரியல்மி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. 

    ரியல்மி நிறுவன அதிகாரியின் பதிவில் இதனை உணர்த்தும் தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன. அடுத்த ஆண்டு அண்டர் ஸ்கிரீன் கேமரா மற்றும் மடிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் புதிய உச்சத்தை தொடும் என ரியல்மி நிறுவன அதிகாரி பதிவிட்டுள்ளார். ரியல்மி இந்த தொழில்நுட்பம் அடங்கய சாதனங்களை அறிமுகம் செய்வதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

     கோப்புப்படம்

    ரியல்மியின் தாய் நிறுவனமான ஒப்போ வெளிப்புறம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரியல்மி நிறுவனமும் இதை போன்ற சாதனத்தை உருவாக்கலாம் என கூறப்படுகிறது. 

    ஒருவேளை ஒப்போ மற்றும் ரியல்மி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பட்சத்தில், இரு நிறுவனங்களும் ஏற்கனவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் ஹூவாய், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் வரிசையில் இடம்பிடிக்கும்.
    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காவல் நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் அடித்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சீர்காழி:

    நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகப்பட்டினத்திலிருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்த மாணவர்களிடம் ஒவ்வொருவரிடமும் அவர்களது பெயர் மற்றும் முகவரியை விசாரித்தனராம். அதற்கு கல்லூரி மாணவர்கள் ஏன் விசாரிக்கிறார்கள் என்று கேட்டபோது விவரம் ஏதும் கூறாமல் மர்ம நபர்கள் சென்று விட்டனராம். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் நாகப்பட்டினத்தில் இருந்து தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து வந்த மாணவர்கள் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே இறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது சீர்காழி தாடாளன் மேலவீதியை சேர்ந்த பொறியியல் மாணவர் சந்தோஷ் குமார் (18) இதுகுறித்து கேட்டபோது அந்த மாணவரை தகாத வார்தைகளால் திட்டி அடித்த அந்த நபர்கள் அவருடன் இருந்த சக நண்பர்களை கல்லால் அடிக்க முயன்றுள்ளனர். மேலும் கல்லூரி பேருந்தை உடைத்து, கொளுத்தி விடுவேன் என்று மிரட்டி விட்டு இரண்டு இருசக்கர வாகனங்களில் 5 பேர் தப்பிச் சென்றுவிட்டனராம்.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காவல் நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வாறு கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் அடித்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பொதுமக்கள் ஒன்று கூடி விட்டனர். இது குறித்து அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சீர்காழி கல்லூரி மாணவர் சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், அடித்து கல்லூரி பேருந்தை கொளுத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற 5 பேர் குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இருப்பதாகவும், விவாதங்களில் அவை வெளிப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியை மிரட்டும் காற்று மாசு தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

    அவர்கள் தங்கள் வழக்கு மனுவில், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உள்ள விவசாய கழிவுகளை அகற்றுவதற்கு இலவசமாக எந்திரங்களை வழங்குவதற்கு உத்தரவிடும்படி கூறியிருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. 

    காற்று மாசு

    இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

    தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்கள் மற்றவற்றை விட அதிக மாசை உருவாக்குகின்றன. என்ன நடக்கிறது, என்ன பிரச்சினை என்று பேசுபவர்களுக்குப் புரியவில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற விவாதங்களில் அவை வெளிப்படுகின்றன. 

    இவ்வாறு அவர்கள்  கூறினர்.

    டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில், விவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை எரிப்பது காற்று மாசுபாட்டிற்கான காரணங்களில் ஒன்று என கூறப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்தனர். 

    ×