என் மலர்
மயிலாடுதுறை
குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிற்சி முகாம், டெல்லியில் நடந்தது. அதில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
ஏழை குடும்பங்களில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக துன்புறுத்தல்கள் நடப்பதாக பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.
பணக்கார குடும்பங்களிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. பலம்வாய்ந்த அமைப்புகள், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றிலும் நடக்கின்றன. இதற்கு நிர்வாகிகளாக அல்லாமல், குடிமக்களாக நாம் தீர்வு காண வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சோழபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரது மனைவி ஹாஜா நாச்சியார். இவர்களின் இரண்டு மகள்களுக்கும் திருமணமானதால் இருவர் மட்டும் சோழபுரத்தில் வசிக்கின்றனர். சம்பவத்தன்று சிக்கல் நாயக்கன் பேட்டை மற்றும் பந்தநல்லூரில் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்ட நிலையில் நிலை கதவு திறந்து இருப்பதை பார்த்த அதே தெருவைச் சேர்ந்த அவரது உறவினர் நிஜாம் அகமது இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சாதிக் அலி அங்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு மற்றும் உள்ளே உள்ள பீரோக்களை மர்ம நபர்கள் உடைத்து பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






