search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்கு
    X
    குரங்கு

    திருவாலி பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்

    திருவாலி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதை வனத்துறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    திருவெண்காடு:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுற்றித்திரியும் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    குரங்குகள் நாள்தோறும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வி திருமாறனை சந்தித்து குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சீர்காழியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    Next Story
    ×