என் மலர்
செய்திகள்

ஸ்மிருதி இரானி
பணக்கார குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்: ஸ்மிருதி இரானி
பலம்வாய்ந்த அமைப்புகள், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றிலும் பாலியல்ரீதியாக துன்புறுத்தல்கள் நடக்கின்றன. இதற்கு நிர்வாகிகளாக அல்லாமல், குடிமக்களாக நாம் தீர்வு காண வேண்டும்.
புதுடெல்லி :
குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிற்சி முகாம், டெல்லியில் நடந்தது. அதில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
ஏழை குடும்பங்களில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக துன்புறுத்தல்கள் நடப்பதாக பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.
பணக்கார குடும்பங்களிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. பலம்வாய்ந்த அமைப்புகள், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றிலும் நடக்கின்றன. இதற்கு நிர்வாகிகளாக அல்லாமல், குடிமக்களாக நாம் தீர்வு காண வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story