search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Protest"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    மின்சார சட்டத்திருத்த மசோதா 2021 ஐ திரும்பப் பெற வேண்டும், 3 வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தின் மூலம் திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும்.

    வங்கி, இன்சூரன்ஸ், மின்வாரியம், போக்குவரத்து, நிலக்கரி, ரெயில்வே, விமானம், பெல் மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியாருக்குதாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொ.மு.ச. திட்ட செயலாளர் தியாகராஜன், ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டசெயலாளர் செல்வராஜ், பொறியாளர் கழக மண்டல செயலாளர் விக்ரமன், இன்ஜினியர் சங்க ராஜேஷ், எம்ப்ளாய்ஸ் பெடரே‌ஷன் திட்டசெயலாளர் சிவசெல்வன் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    துறையூர்:

    துறையூர் அருகே உப்புலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காமாட்சிபுரம் ஊராட்சியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து காமாட்சிபுரம்கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும், புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் துறையூர்- புளியஞ்சோலை சாலையில் காமாட்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்தும் உப்புலியபுரம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளாச்சி அலுவலர் ரேவதி, மனோகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருச்சியில் விவசாயிகள், பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PollachiAbuseCase
    திருச்சி:

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருச்சியில் விவசாயிகள், பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இதில் சமூகநீதி பேரவையை சேர்ந்த ரவிகுமார், மக்கள் பாதுகாப்பு மைய வக்கீல் கென்னடி, தமிழ்தேசிய பேரியக்க நிர்வாகி கவித்துவன், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த செழியன், ராஜா, மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி ஜீவா, பெண்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகி அருள் ஆக்னஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மாயமான சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் , பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் பின்னணியில் எந்த அரசியல் கட்சியினர் இருந்தாலும் அவர்களையும் போலீசார் கைது செய்திட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது. விவசாயிகள் சிலர் கருப்பு கொடியுடன் பங்கேற்றனர்.

    இதேபோல, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு முற்போக்கு பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவி பானுமதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விஜயலட்சுமி, பிரியா, பாரதி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது, பாலியல் வன்கொடுமையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண் வக்கீல்கள் கோ‌ஷமிட்டனர்.

    அப்போது வக்கீல் சங்க தலைவி பானுமதி கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க தேவையில்லை. ஏனென்றால், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அமைப்பு. எனவே, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார் பெறுதல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்களை கைப்பற்றுதல் குற்றவாளியின் பெயர் விவரங்கள் தவிர, ஏனைய விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

    புலன் விசாரணைக் குழுவில் திறமையான பெண் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பாலியல் வன்கொடுமை காட்சிகள், ஆபாச வீடியோக்கள் வெளியாவதை தடை செய்ய வேண்டும். இச்சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் .

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #PollachiAbuseCase
    திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அமைச்சர் அறிவித்தபடி தினக்கூலியாக ரூ.380 வழங்கிட வேண்டும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற அமைச்சர் உத்தரவினை நிறைவேற்ற வேண்டும், பணியின் போது ஏற்படும் விபத்து செலவினை வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நாகை ராஜராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சியில் இன்று 2-ம் வகுப்பு மாணவிக்கு அ.தி.மு.க. செயலாளர் பாலியல் தொந்தரவு அளித்ததை கண்டித்து தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    திருச்சி ஆழ்வார்தோப்பு இதாயத் நகரை சேர்ந்தவர் ரசூல் முகமது. தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 7 வயது மகள் தென்னூர் காயிதே மில்லத் நகரில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மாணவி படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

    இந்த பள்ளியின் செயலாளரும், அ.தி.மு.க. வட்ட செயலாளருமான செக்கடி சலீம் என்பவர், அந்த மாணவியை தனது மடியில் அமர வைத்துள்ளார். அப்போது அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரிடம் இருந்து விடுபட்ட மாணவி பயந்து போய் யாரிடமும் இதுபற்றி கூறவில்லை.

    இந்த நிலையில் நேற்று அந்த மாணவி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தின் போது நடந்த பாலியல் தொந்தரவு குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பெற்றோர் அப்பகுதி பொது மக்களை திரட்டிக் கொண்டு தனியார் பள்ளியை இன்று காலை திடீரென முற்றுகையிட்டனர்.

    மேலும் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமி‌ஷனர் ராமச்சந்திரன், தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே பாலியல் புகார் கூறப்பட்ட அ.தி.மு.க. வட்ட செயலாளர் செக்கடி சலீமை தில்லை நகர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்கள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ×