என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்பு சாராயம், காரை பறிமுதல் செய்து புகையிலை பொருட்கள் விற்றவரையும் போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் சீர்காழி போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது காரைக்காலிருந்து சீர்காழி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 40 மூட்டைகளில் 2,000 புதுச்சேரி மாநில சாராயம் நிரப்பப்பட்ட பாட்டில்கள் இருந்தது.

    ரூ.2 லட்சம் மொத்த மதிப்பிலான கார் மற்றும் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கார் ஓட்டிவந்த மயிலாடுதுறை தூக்கனாம் குளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை (25) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவத்தில் சீர்காழி அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெட்டிக் கடையில் வைத்து விற்ற தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்த முருகன் (52) என்பவரை கைது செய்த போலீசார், ரூ.2,000 மதிப்புள்ள 240 பாக்கெட்டுகள் புகையிலைபொருட்கள், குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில் அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், புதுச்சேரி மாநில கடத்தல் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த கொடியம்பாளையம் தீவு கிராமம் தனி ஊராட்சி ஆக இருந்து வருகிறது. இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து குடும்பங்களைச் சார்ந்தவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்தத்தீவு கிராமத்துக்கு கொள்ளிடத்திலிருந்து தரை வழியாக செல்வதற்கு வசதி வாய்ப்பு இல்லை.எனவே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலில் படகின் மூலம் அரை மணி நேர பயணத்திற்குப் பின்பு கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சென்று அடைய முடியும். இதனால் கொள்ளிடத்திலிருந்து கடலூர் மாவட்டம், சிதம்பரம் வழியாகச் சென்று இளந்திரைமேடு கிராமத்திலிருந்து கொடியம் பாளையம் தீவு கிராமத்துக்கு தரைவழியாக சென்று வருகின்றனர்.

    கொள்ளிடம் பகுதியிலிருந்து ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்துறை மற்றும் கல்விதுறை சார்ந்த அதிகாரிகள் தரை மார்க்கமாக கொள்ளிடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்குச் சென்று வருகின்றனர். இங்கு இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இங்கு 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த அனைத்து ஆசிரியர்களும் கொள்ளிடத்திலிருந்து சிதம்பரம் வழியாகத்தான் தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில் கொடியம் பாளையம் கிராமத்துக்குச் செல்லும் 500 மீட்டர் தூர தார்சலை மேம்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன இந்த சாலையில் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகளும், சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    வயதான ஆண் மற்றும் பெண்கள் நடந்து செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் மீனவர்கள் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் மீன்களை விற்பனைக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தின் கடற்பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கொடியம் பாளையம் தீவு கிராமத்துக்குரிய 500 மீட்டர் தூர சாலையை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தொடக்கக்கல்வி துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்துள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு படிப்படியாக நிவர்த்தி செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பல்லாண்டு காலமாக வைத்த கோரிக்கையான சி.பி.எஸ்.இ ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்ற கூட்டதொடரில் நிச்சயமாக 110 விதியில் அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நாங்கள் அரசுக்கு வைக்கின்றோம். தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்காக தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கின்றோம்.

    கொரோனா தொற்று நேரத்திலும் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 5 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் சேர்த்திருக் கிறார்கள். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மாவட்ட கலந்தாய்வு தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.

    மாணவர்களின் வருக பதிவு, சத்துணவு, மாத்திரைகள், மாணவர்கள் மருந்து உண்பது, காய்கறிகள் உள்ளிட்ட 21 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இணையதளம் நெட் பிரச்சனையால் புள்ளி விபரத்தை காலையில் கொடுத்து 1 மணிநேரத்தில் வழங்க வேண்டும் என்பது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை குறித்து ஆணையரிடமும் அமைச்ச ரிடமும் பேசியுள்ளோம்.

    ஈராசிரியர் பள்ளிகள், ஓராசியர் பள்ளிகள் ஏராளமாக உள்ளது. இதிலே புள்ளி விபரங்களை எடுக்க சாத்தியமில்லை. புள்ளிவிபரம் தேவை என்றால் கணிணியில் பட்டம்பெற்றவர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு புள்ளிவிபரம் எடுக்கும் பணியை வழங்கலாம். மேல்நிலை பள்ளியில் உள்ள தலைமையாசியர் தலைமையில் 10 பள்ளிகள் குருவளமையமாக நிர்ணயித்து பள்ளி முடிந்தவுடன் மீள் ஆய்வு செய்கிறார்கள்.

    101 அரசாணை தொடக்கக்கல்வித்துறை தனித்துறை ஆக்கி முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். 101 அரசாணையால் கோப்புகள் தேக்கமடைந்து ஆசிரியர்களின் முழு பணபயன் பெறமுடியாமல் பாதிக்கப்படுகிறது.

    எனவே 101 அரசாணை ரத்து செய்து தொடக்கக் கல்வித் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    விரிவாக்கப் பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு மிகக் குறைந்த விலை நிர்ணயத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் அறிவிப்பை பேச்சுவார்த்தைக்குப்பின் ஒத்தி வைத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகை வரை அமைக்கப்படும் 4 வழிச்சாலை பணிக்காக விளைநிலங்கள், வீட்டு மனைகள், குடியிருப்புகள் என பல்வேறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 

    இந்த நிலங்களுக்கு அரசு வழங்குவதாக உறுதியளித்த தொகையை வழங்காமல் மிகக்குறைந்த தொகை வழங்குவதாக கூறி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதையடுத்து தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உயர்த்தி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், நில உரிமையாளர்களும் மேல்முறையீடு செய்துள்ளனர். ஓராண்டு காலமாக மேல் முறையீட்டின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

    இதனையடுத்து அவர்களுடன் சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் முன்னிலையில் சீர்காழியில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கோட்டாட்சியர் ஒரு மாத காலத்திற்கு போராட்ட அறிவிப்பை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

    இதனையடுத்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    விரிவாக்கப் பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு மிகக் குறைந்த விலை நிர்ணயத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் அறிவிப்பை பேச்சுவார்த்தைக்குப்பின் ஒத்தி வைத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகை வரை அமைக்கப்படும் 4 வழிச்சாலை பணிக்காக விளைநிலங்கள், வீட்டு மனைகள், குடியிருப்புகள் என பல்வேறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலங்களுக்கு அரசு வழங்குவதாக உறுதியளித்த தொகையை வழங்காமல் மிகக்குறைந்த தொகை வழங்குவதாக கூறி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதையடுத்து தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உயர்த்தி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், நில உரிமையாளர்களும் மேல்முறையீடு செய்துள்ளனர். ஓராண்டு காலமாக மேல் முறையீட்டின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

    இதனையடுத்து அவர்களுடன் சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் முன்னிலையில் சீர்காழியில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கோட்டாட்சியர் ஒரு மாத காலத்திற்கு போராட்ட அறிவிப்பை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இதனையடுத்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் சீர்காழியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு பஸ் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கரன் (25) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிவபால்சிங் என்பவர் படுகாயத்துடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தொடர் விபத்து காரணமாக அவ்விடத்தில் தடுப்பு அமைக்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். 

    இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த பாஸ்கரன் உடலை கைப்பற்றிய வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் வழக்கு தொடர்பாக அரசு பேருந்தை பறிமுதல் செய்து அதன் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    மயிலாடுதுறையில் சத்துணவு அமைப்பாளர் சேவைக்கு ஒன்றிய ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம், மன்னிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக முத்துலட்சுமி பணியாற்றி வந்தார். இவர் ஓய்வு பெற்றார். அவருக்கு மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் அன்பரசன் 26 ஆண்டுகள் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் சிறப்பாக தங்கள் சேவையை செயல் ஆற்றியுள்ளார்.

    அவரது சேவைகளை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பன்னீர்செல்வம், சத்துணவு மேலாளர் வாணி உள்ளிட்ட சக ஊழியர்கள் வாழ்த்து கூறி பாராட்டினர்.

    சத்துணவு அமைப்பாளர் முத்துலட்சுமி தனது சேவைக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.2 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்தார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் சாலை ராஜன் தோட்டத்தில் ரூ.2 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட  கலெக்டர் லலிதா  தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது,

    முதலமைச்சர் கடந்த ஆண்டு இளைஞர், குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் பயன்படுத்த கூடிய வகையில் 50 இடங்களில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் ராஜன்தோட்ட பகுதியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் ரூ.2 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இது இளைஞர்கள், மகளிர், குழந்தைகள் அறிவை வளர்க்க கூடிய திட்டமாகும். குழந்தைகளுக்கு அறிவை மேம்படுத்தக்கூடிய தொடுதிரை, ஒலி அமைப்பு போன்ற கருவிகளுடன் இங்கு வர உள்ளது. இளைஞர்களுக்கு போட்டித் தேர்வை எதிர்கொள்ள இது ஒரு பயனுள்ள திட்டமாகும். இளைஞர்கள்
    குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டி தேர்வுகளுக்கு இங்கு படிப்பதற்குரியஅனைத்து புத்தகங்களும் இங்கு கொண்டு வரப்படும்.

    இதே திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் வர உள்ளது. ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில் அமைந்துள்ளது. இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அறிவுசார் மையம் 5000 ச.அடி பரப்பளவில் அமையவுள்ளது.

    தரைத்தளம் மற்றும் முதல்தளம் போன்ற வசதிகளுடன் அமையவுள்ளது. மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை திறம்பட அமைத்திட இந்நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் பயனுள்ளதாக இருக்கும். அருகிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு வகையில் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.

    இந்த அறிவுசார் மையத்தில் மாணவ, மாணவிகள், சிறுவர்கள், பொதுமக்கள் படிக்கும் அறைகள், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை, கணினி உபகரணங்கள் மூலம் பயிற்சி வழங்கும் அறை, சிறுவர்கள் விளையாட வசதிகள், போன்ற வசதிகளுடன் இங்கு அமைய உள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் விரைவில் வர உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகராட்சி பொறியாளர் சனல்குமார், ஒப்பந்ததாரர் உத்திராபதி ஆகியோர் உடனிருந்தனர்.
    கடும் வெயில் தாக்கத்தினால் சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு விடுமுறை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.
    சீர்காழி:

    சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கி.செல்வராசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கு.விஜயகுமார், மாவட்ட பொருளாளர் வீ.ராஜம் முன்னிலை வகித்தனர்.


    கூட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதி பிரதி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு 1&ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும். ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கிவரும் உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை உதவிப்பெறும் பணி புரிய ஆணை வழங்கவேண்டும்.

    இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக மாற்றுபணிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு பதிலாக அவ்விடத்தில் உபரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவேண்டும். பணிவரன்முறை, தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வேண்டி விண்ணப் பிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டாரத்தில் முகாம் நடத்தி உடனுக்குடன் ஆணை வழங்க மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் நல்லமணி, சூரியமூர்த்தி, ராஜேஷ், ஜெயபாரதி, தேன்மொழி, ரவிச்சந்திரன், வேல்முருகன், சங்கர், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
    கொள்ளிடத்தில் புகையிலை பொருள் விற்ற பெட்டிக் கடைக்காரை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் திராவிடமணி (61) இவர் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் மாவட்ட எஸ்.பி தனி படைப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் திடீரென சோதனையிட்டபோது தடை செய்யப்பட்ட 86 புகையிலை பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து பெட்டிக்கடைக்காரர் திராவிடமணியை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ 2000 இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்ற 3 தனியார் பஸ்கள் மீது மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்குபதிவு செய்தார்.
    சீர்காழி:

    சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலைவழியாக சென்ற 3 தனியார் பஸ்களை வாகன தணிக்கையின்போது ஆய்வு செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்குபதிவு செய்தார்.

    சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதோடு, பயணிகளையும் புறவழிச்சாலையிலேயே இறக்கிவிட்டு செல்வதால் பயணிகள் அவதியடைந்து வந்தனர்.

    இது குறித்து அறிந்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவின்படி, சீர்காழி கோட்டாட்சியர் ஜி.நாராயணன் அறிவுறுத்தலின்படி, மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் மேற்பார்வையில், சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.விஸ்வநாதன் சீர்காழி புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டார்.

    அப்போது மயிலாடுதுறையிலிருந்து புதுச்சேரி சென்ற தனியார் பஸ், கடலூரிலிருந்து மயிலாடுதுறை சென்ற தனியார் பஸ் உள்ளிட்ட 3 தனியார் பஸ்களை நிறுத்தி ஆய்வு செய்தார். இந்த பஸ்கள் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்றுவந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து 3 பஸ்களுக்கும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, வழக்குபதிவு செய்யப்பட்டதோடு, மேல் நடவடிக்கைகாக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவ்வாறு நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்லும் தனியார், அரசு பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
    சீர்காழி அருகே மணிக்கிராமத்தில் ரூ.2.75 கோடியில் தீயணைப்பு நிலைய கட்டிடத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் அப்பகுதிக்கான தீயணைப்பு நிலைய கட்டிடம் வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. பூம்புகார் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டி பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் திருவெண்காடு அருகே மணிக்கிராமத்தில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதீப்பிட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து நடைபெற்ற விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு, புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், சீர்காழி ஒன்றியக் குழத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சித் துணைத் தலைவர் அப்துல் வகாப், பூம்புகார் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×