என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை மாவட்டத்தில் “கலைஞர் எழுதுகோல் விருது” பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜுன் 3ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  அவ்வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான இவ்விருது-க்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

    இவ்விருதில் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.  

    விண்ணப்பதாரர் தமிழ்-நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டு-களாக தொடர்ந்து பணி-புரிகிறவராகவும் இருக்க வேண்டும்.  பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்-திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும். 

    விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொது-மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின்பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.  

    இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
     
    மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு 30.4.2022-க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சீர்காழி அருகே சந்தான முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே புளிச்சக்காடு நித்தியவனம் கிராமத்தில் புதிதாக சந்தான முத்துமாரியம்மன் கோவில் நிர்மானிக்கப்பட்டது. அதில் வினாயகர், பாலமுருகன், சந்தானமுத்துமாரியம்மன், பேச்சியம்மன், பலிபீடம் ஆகிய சுவாமி சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    திருப்பணிகள், வர்ணபூச்சு பணிகள் முழுமையடைந்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த (4&ம் தேதி) அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலைபூஜைகள் தொடங்கியது. 

    விழா அன்று 4&ம் கால யாகசாலை பூஜைகள் நிறை-வடைந்து, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடை-பெற்றது. 

    தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்-சாரியார்கள், வேத-விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, மேள, தாளங்களுடன் கோயிலை வலம் வந்து விமான கலசம், மூலஸ்தான விமானம் ஆகியவற்றில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை-பெற்றது.

    தொடர்ந்து அனைத்து சுவாமி சன்னதிகளிலும், சுவாமிகளுக்கு நறுமண பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகம் செய்-விக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 

    இதில் திரளான பக்தர்கள், ஊர்- பிரமுகர்கள், கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.
    சீர்காழி அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிவ சூரிய வழிபாடு நடந்தது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் சொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை சிவ சூரிய பூஜை வழிபாடானது நடந்தது. காலை சூரிய பகவான் ஈசனை முழுவதும் ஆட்-கொண்ட திருக்காட்சி வைபவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்ணபுரீஸ்வரர் பகவானின் அருளை-யும் சூரிய பகவானின் அரு-ளையும் பெற்றனர். இக்-காட்சி நாளை வெள்ளிக்-கிழமை காலை 6 மணி அள-வில் மற்றும் சனிக்-கிழமை காலை 6 மணி அளவில் மீண்டும் தெரியும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    பக்தர்கள் சிவ சூரிய வழிபாட்டு திருவிழாவில் கலந்து கொண்டு இறைவன--னின் பரிபூரண அருளைப் பெற கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சூரிய வழிபாட்டினை கண்டால் சூரிய கிரக தோஷம் நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம். 

    வருடத்தில் பங்குனி மாதத்தில் மூன்று முறை மட்டுமே சூரியன், ஈசனை இவ்வாலயத்தில் வழிபடும் காட்சி வைபவம் ந¬பெறும்.

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
    சீர்காழி:

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட தையல் நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இக்கோவிலில் தனி சன்னதியில் செவ் வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக் குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக் கின்றனர்.

    இங்கு கிருத்திகையை யொட்டி செல்வமுத் துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக் குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, இளநீர் உள்ளிட்ட 21 வகை நறுமண திரவியப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில், தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவா மிகள், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் ஆகியோர் பங் கேற்று தரிசனம் செய்தனர்.
    சீர்காழியில் கார் ஓட்டுனர்கள் சங்க தொடக்க விழாவில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் வாடகை கார், ஓட்டுனர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தலைமை வகித்து சங்க பெயர் பலகை திறந்து வைத்து குத்து விளக் கேற்றினார்.

    தொடர்ந்து பள்ளி மாணவ&மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ், ஜாமின்ட்டரி பாக்ஸ், பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கி சிறப்புறையாற்றினார்.

    தொடர்ந்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப் பட்டது.

    விழாவில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, துணைத் தலைவர் சுப்பராயன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சந்திர மோகன், சங்க தலைவர் தினேஷ்குமார், செயலாளர் சந்திரமோகன், பொருளாளர் சதிஸ்பாபு பங்கேற்றனர்.
    அ.தி.-மு.க ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து சென்றுவிட்டதாக அமைச்சர் மெய்யநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    சீர்காழி:

    சீர்காழியில் சமூக நலத்துறையின் சார்பில் சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த 578 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் தங்கம் வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

    எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா.முருகன், தாசில்தார் செந்தில்குமார், ஒன்றியக்குழு தலைவர்கள் கமலஜோதிதேவேந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மெய்யனாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தினை வழங்கி பேசுகையில், தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக நீதிக்கான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். கடந்த ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து வைத்து விட்டுசென்றனர். 4 லட்சம் கோடி கடன் வாங்கி அதையும் முறையாக செலவிடாமல் முறைகேடு செய்துவிட்டனர்.

    திமுக அரசு கடந்த ஆண்டு மே 7ம் தேதி கடுமையான கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் பொறுப்பேற்று பல சவால்களை சமாளித்து முன் களப்பணியாளராக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு 10 மாத காலத்தில் தமிழகத்தை கடன் சுமையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுத்து முன்மாதிரியாக ஆட்சிபுரிந்து வருகிறார். வேளாண் துறைக்கு 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தனி நிதிநிலை அறிக்கை அளித்து சாதனை படைத்து விவசாயிகளின் நலன் காத்துள்ளார். அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்று திராவிட மாடல் ஆட்சியை திறம்பட செயல்படுத்தி வருகிறார் என்றார்.

    விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், ரெஜினா ராணி, அருள்மொழி (ஊராட்சிகள்), சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்க்கா பரமேஸ்வரி ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி, திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், மலர்விழி பங்கேற்றனர்.
    காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் சாராயம்& மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    குத்தாலம்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து மது பாட்டில்கள் கடத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது.

    இந்நிலை யில், மயிலாடுதுறை மாவட் டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக என்.எஸ்.நிஷா நேற்று பொறுப்பேற் றார். வெளிமாநில மது கடத்தலை தடுக்க அவர் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று இரவு பெரம்பூர் இன்ஸ்பெக்டர் (பொ) விசித்திராமேரி தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் இளைராஜா மற்றும் போலீ சார் மங்கநல்லூர் கடைவீ தியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் 800 லிட்டர் பாண்டிச்சாராயம், 480 குவார்ட்டர் மதுபாட் டில்கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத் தலில் ஈடுபட்ட கார் டிரைவர் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42), உதவியாக இருந்த பால முருகன் (46) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சாராயம், மதுபாட்டில்கள் ஆகிய வற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். மாவட்ட சூப்பிரண்டாக நிஷா பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மது கடத்தல் கும்பலை பிடித்ததால் இனி குற்ற செயல் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஒன்றியக்குழு தலைவர் நந்தினி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் சிலம்பம், இரட்டை சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, சுருள்வாள், மான்கொம்பு, கட்டைக்கால் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500&க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

    நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ரவி, கலைமகள் கல்வி குழும தாளாளர் நெடுஞ்செழியன், மருத்துவர் வீரபாண்டியன், மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
    புங்கனூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் அருகே உள்ள மேலவரவ க்குடி கிராமத்தில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சார்பில் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங் கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் மேலவரவக்குடி பகுதியைசேர்ந்த மாணவ-மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக் கள் பலர் கலந்து கொண்ட னர்.
    இதில் வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ் பெக்டர் காயத்ரி மற்றும் தனிப்பிரிவு போலீசார் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ& மாணவிகள் மற்றும் அப்ப குதி பெண்களுக்கு அறிவுரை களை வழங்கினார்.

    மேலும் குடும்ப உறவுகள் தவிர்த்து யாரேனும் அழைத் தால் தனியாக செல்ல வேண் டாம், யாராவது தவ றாக நடக்க முயற்சி செய்தால் உடனடியாக தங்களின் பெற் றோர் மற்றும் ஆசிரியர் களிடம் சொல்ல வேண்டும், குழந்தைகள் யாரையும் கண்டு அச்சம் கொள்ளாமல் தைரியமாக இருக்க வேண் டும், என்றும் குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் பற்றி போலீசார் சார்பில் விரிவாக விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம் பங்கேற்றார்.
    திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் 
    அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற 
    வரலாற்று சிறப்மிக்க பிரம்மபுரீஸ்வரர் பெரிய கோவில் 
    அமைந்துள்ளது. மார்க்கண்டேயர், திருக்கடையூர் 
    அமிர்தக டேஸ்வரருக்கு நாள்தோறும் சிவபூஜை செய்ய காசி 
    கங்கை தீர்த்தத்தை திருக்கடவூர் மயானத்துப் பெரிய 
    பெருமான் திருமெய்ஞானம் திருத் தலத்தில் 
    வரவழைத்துக் கொடுத்து அருளினார்.

    பங்குனி மாதம் அமாவாசை கழித்து 3ம் நாள் வளர்பிறை அசுபதி நட்சத்திரத்தில் அசுபதி தீர்த்த கிணறு தோன்றியததாக புராணம். 
    அசுபதி தீர்த்தம் உருவாகிய தினத்தில் வருடந்தோறும் அசுபதி 
    நட்சத்திரத்தில் அசுபதி தீர்த்தவாரி திருவிழா கொண்டாடப்பட்டு 
    வருகிறது. அந்த வகையில் நேற்று அசுபதி தீர்த்தவாரி 
    நடைபெற்றது. தீர்த்தவாரி யை முன்னிட்டு பக்த மார்க்கண்டேயர் 
    அஸ்வினி தீர்த்தத்திற்கு பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து 
    தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி 
    தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கணேஷ், மகேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத 
    மந்திரங்கள் ஓத அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம், 
    ஆராதனைகள் செய்தனர்.

    தொடர்ந்து பக்த மார்க்கண்டேயர் தீர்த்தவாரி நடைபெற்றது. 
    இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அசுபதி தீர்த்த 
    கிணற்று நீரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். 
    இந்த கிணற்று நீரில் தீர்த்தவாரி அன்று மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர்
    அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற
    வரலாற்று சிறப்மிக்க பிரம்மபுரீஸ்வரர் பெரிய கோவில்
    அமைந்துள்ளது. மார்க்கண்டேயர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு நாள்தோறும் சிவபூஜை செய்ய காசி கங்கை தீர்த்தத்தை திருக்கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் திருமெய்ஞானம் திருத் தலத்தில்
    வரவழைத்துக் கொடுத்து அருளினார்.

    பங்குனி மாதம் அமாவாசை கழித்து 3ம் நாள் வளர்பிறை அசுபதி
    நட்சத்திரத்தில் அசுபதி தீர்த்த கிணறு தோன்றியததாக புராணம்.
    அசுபதி தீர்த்தம் உருவாகிய தினத்தில் வருடந்தோறும் அசுபதி
    நட்சத்திரத்தில் அசுபதி தீர்த்தவாரி திருவிழா கொண்டாடப்பட்டு
    வருகிறது. அந்த வகையில் நேற்று அசுபதி தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி யை முன்னிட்டு பக்த மார்க்கண்டேயர் அஸ்வினி
    தீர்த்தத்திற்கு பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து தருமபுரம்
    ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக
    ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கணேஷ்,
    மகேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத
     மந்திரங்கள் ஓத அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம்,
    ஆராதனைகள் செய்தனர்.

    தொடர்ந்து பக்த மார்க்கண்டேயர் தீர்த்தவாரி நடைபெற்றது.
     இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அசுபதி தீர்த்த
    கிணற்று நீரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
    இந்த கிணற்று நீரில் தீர்த்தவாரி அன்று மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழியில் காலி மதுபாட்டில்களுடன் வீட்டின் முன்பு கிடந்த அட்டை பெட்டியை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி ஈசான்ய தெருவை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டின் முன்பு மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்து 2 அட்டைப் பெட்டிகளை வைத்து விட்டு சென்றுள்ளார். பல மணி நேரம் கழித்து வெளியே வந்த வீட்டின் உரிமையாளர் 2 அட்டைப் பெட்டிகள் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெட்டியில் வெடி பொருட்கள் இருக்குமோ என்று அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

    போலீசார் விரைந்து சென்று வீட்டில் வைக்கப் பட்டிருந்த அட்டைப் பெட்டியை பாதுகாப்பாக கொண்டு சென்று திறந்து பார்த்தனர். உள்ளே 2 அட்டை பெட்டிகளிலும் காலி மது பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இருக்கும் பணி சுமையில் இது வேறா என நொந்துக் கொண்டனர்.

    மர்ம நபர் காலி மதுபான பாட்டில்களை ஏன் இங்கு வைத்து போலீசாரின் நேரத்தை வீணடிக்க வேண்டும் என நொந்து கொண்ட போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலி மதுபான பாட்டில் களை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து வீட்டின் முன்பு வைத்து சாவகாசமாக வைத்து செல்லும் நபரின் சிசிடிவி காட்சி பொது மக்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
    ×