என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    தரங்கம்பாடி அருகே ‘தில்லையாடியின் வரலாறு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லையாடியில் பொதுநலச்சங்க மண்டபத்தில் தில்லை-யாடியின் வரலாறு என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தில்லையாடியின் சிறப்-புகள் குறித்தும், வரலாற்று பெருமைகள் குறித்தும், பலரும் அறிந்திராத வர-லாற்று உண்மைகளை தில்லை-யாடியை சேர்ந்த ஓய்வுப்பெற்ற உடற்கல்வி

    ஆசிரியர் சா.ஜெகதீசன் என்பவர் தில்லையாடியின் வரலாறு என்கிற நூலில் ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

    அந்நூலின் வெளியீட்டு விழாவிற்கு நிவேதா.முருகன் எம்.எல்.ஏ.தலைமை தாங்-கினார். தரங்கம்பாடி வட்ட ஓய்வுப்பெற்ற அலுவ-லர்கள் சங்க தலைவர் சு.ராஜமா-ணிக்கம் வரவேற்றார்.

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ஓய்வு-பெற்ற இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் நூலை வெளியிட அதனை எஸ்.ராஜகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி.க்கள் கோகுல-கிருஷ்ணன்,

    அம்பேத்ராஜன், பூம்புகார் கல்லூரி தமிழ் துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் த.அகரமு-தல்வன், திண்டிவனம் சரஸ்-வதி கல்லூரியின் முன்னாள் முதல்வர் சத்தியமூர்த்தி ஆகியோர்

     பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நூலை அச்சிட்ட சிதம்பரம் மணிபாரதி அச்சகத்தின் ச.மணிவண்ணன், ஊராட்சி தலைவர் ரெங்கராஜ், தரங்-கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி உள்ளிட்-டோர் கலந்துக்கொண்டனர்.

    நிறைவாக நூலின் ஆசிரியர் சா.ஜெகதீசன் நன்றி கூறி ஏற்புரை வழங்கினார்.
    சீர்காழியில் இருதயம், குடல் இரைப்பை, புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கான இருதய நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழிச.மு.இ.மேல்நிலைப்பள்ளியில், சீர்காழி ரோட்டரி சங்கம், சென்னை பில்ராத் மருத்துவமனை, பரஞ்ஜோதி ஜூவல்லரி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் நித்யாதேவி பாலமுருகன் ஆகியோர்

    இணைந்து பொதுமக்களுக்கான இருதயம், குடல் இரைப்பை, புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கான இருதய நோய் ஆகிய சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர்

    ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன், செல்வக்குமார், சுடர்.கல்யாணசுந்தரம்,

    சாமி.செழியன், சோலை, சிவகுரு, வக்கீல்.சுந்தரய்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.குடல் இரைப்பை முகாமை தொடங்கி வைத்து பேசினார். இருதய பரிசோதனை

    முகாமினை சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபர-மேஸ்வரி-ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.  முகாமில் பில்ராத் மருத்துவமனை இருதயம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்கள்

    பங்கேற்று பொதுமக்களுக்கு ஈசிஜி, எக்கோ, பரிசோதனைகள் மற்றும் வயிறு, இருதய பிரச்சனைகளுக்கான பரிசோதனகளை மேற்கொண்டனர்.

    பரிசோதனையில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்திட பரிந்துரை செய்தனர். அப்போது இருதய சிறப்பு மருத்துவர் மகாதேவன் பேசுகையில்,

    மற்றவர்களுடன் நம்மையும், நமதுவாழ்வு, நமது உணவுபழக்கவழங்கங்களுடன் ஒப்பிட்டு அடுத்தவர்கள் போல் நாம் வசதியாக வாழவேண்டும் என நினைத்து மனஅழுத்தம் ஏற்படுவதால்தான்

    ஹார்ட்அட்டாக் அதிகளவு வர வாய்ப்புள்ளது.அதிகபட்சம் இரவு 11மணியிலிருந்து காலை 5மணி வரையிலாவது உறங்கவேண்டும். இந்த உறக்கம் குறைவதால் தான் தற்போது இளம் வயதிலேயே

    அதிகளவு ஹார்ட்அட்டாக் வருகிறது. முன்பு பசிக்கு சாப்பிட்டது போய், தற்போது எந்த கடையில் எந்த உணவு பிரதானம் என தெரிந்து அதனை தேடி சென்று சாப்பிடுவதும் இருதய பிரச்சனைக்கு

    வழிவகுக்கிறது என்றார்.இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்-டவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ரோட்டரி செயலாளர் கணேஷ் மற்றும் நகரமன்ற துணை தலைவர் சுப்பராயன், பாஸ்கரன், ராஜசேகரன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக நகர்மன்ற உறுப்பினர்

    நித்யாதேவிபால-முருகன் வரவேற்றார். நிறைவில் முகாம் ஒருங்கி-ணைப்பாளர் பரஞ்ஜோதி.பழனியப்பன் நன்றி கூறினார்.
    நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி ஒன்றியம் நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா விளையாட்டு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவில் வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி தலைமை வகித்தார்.

    வட்டார கல்வி அலுவலர் நாகராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் துரைராஜ், வட்டார வளமைய மேற்பார்-வையாளர் கா. ஜெய்சங்கர், பள்ளியின் சண்முகவேல், பள்ளி மேலாண்மை

    குழு தலைவர் தேவி, வார்டு உறுப்பினர்கள் சுஜாதா, சத்யா, ராமு வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் வரவேற்-புரை நிகழ்த்தினார்.
     
    நிகழ்ச்சியினை ஆசிரியர் சீனிவாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளை ஆங்கில ஆசிரியர் செல்வராஜ் ஒருங்கணத்து வழங்கினர்.

    கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் அமுதா, வேதநாயகம், கனிமொழி, ச.பாலகுமாரி ஆகியோர் வழங்கினர். விளையாட்டு நிகழ்ச்சிகளை சிறப்பு ஆசிரியர்கள் சாமிநாதன், ராஜா, சத்துணவு

     அமைப்பாளர் பரணிதேவி ஆகி-யோர் வழிநடத்த இறுதியில் அறி-வியல் ஆசிரியர் சரவணன் நன்றியுரை வழங்கினார்.
    சீர்காழி தென்பாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    சீர்காழி தென்பாதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் புகார் செய்தனர்.

    அதன்பேரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சீர்காழி நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் டாக்டர் கனிமொழியிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
     
    அப்போது  கூடுதலாக கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர், சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு டாக்டர் கோரிக்கை விடுத்தார்
    .
    இதனைத் தொடர்ந்து சர்வமானிய தெருவில் சேதமடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டு, சேதமடைந்த மழைநீர் வடிகாலை சீரமைக்க பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியனிடம் கேட்டுக்கொண்டார்.
    இந்த ஆய்வின்போது நகரசபை துணை தலைவர் சுப்பராயன், கவுன்சிலர்கள் ராஜசேகரன், வேல்முருகன், ரம்யா தன்ராஜ், ரேணுகாதேவி திருச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என குடிநீர் தேக்க தொட்டி இயக்குனர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    சீர்காழி:

    கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என குடிநீர் தேக்க தொட்டி இயக்குனர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

     கொள்ளிடம் பயணியர் விடுதியில் கொள்ளிடம் வட்டார அளவிலான ஊராட்சிகளை சேர்ந்த நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் சங்கம், தூய்மை பணியாளர் சங்கம் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய தலைவர் சபீர் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் பாலையா கலந்துகொண்டு பேசினார்.

     முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும்.

    தூய்மை காவலர்களுக்கு பணிப்பதிவேடு தொடங்கி மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் மற்றும் பொங்கல் கருணை தொகை ரூ.1000 வழங்க வேண்டும்.

    ஓய்வுபெறும் தூய்மை பணியாளர்களுக்கு பணி கொடையாக ரூ.50 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கிட வேண்டும்.

    தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியத்தை 5-ந் தேதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் பொருளாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

    வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் புதுபட்டினம் இன்ஸ்பெக்டருக்கு ‘பிடிவாரண்டு’ பிறப்பித்து சீர்காழி நீதிமன்றம் உத்தவிட்டது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொது இடத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகியான ரவி என்பவர் மீது புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

    இந்த வழக்கு விசாரணை சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் புதுப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணைக்கு ஆஜராக-வில்லை. 

    மீண்டும் மீண்டும் அழைத்தும் 3 வாய்தாவிற்கு இன்ஸ்பெக்டர் சந்திரா ஆஜராகாததால் நீதிபதி அலெக்ஸ்ராஜ் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். 

    தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்குள் இன்ஸ்பெக்டர் ஆஜராகவில்லை என்றால் பிணையில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா திருப்பணிகளையொட்டி எளிமையாக நடந்தது
    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார்.

    இக்கோவிலில் மலை மீது தோணியப்பர், உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தருக்கு 7ம் நூற்றாண்டில் உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் இக்கோவிலில் 10 நாள் பிரமோற்சவமாக கொடியேற்றத்துடன் தொடங்கி 2-ம் நாள், திரு-முலைப்பால் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருமுலைப்பால் திருவிழா பக்தர்கள் மிகக்-குறைவாக கலந்து கொண்ட நிலையில் எளிமையாக நடைபெற்றது.

    சட்டைநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டின்படி திருப்பணிகள் தொடங்கப்பட்டு பாலஸ்தாபனம் செய்-யப்பட்டு உள்ளது. இதனால் உற்சவங்கள் ஆகம விதிப்படி நடைபெறாது.
     
    இதனிடையே ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்வு தடைபடக் கூடாது என்பதற்காக மிக எளிமையாக விழா நடைபெற்றது.
    முன்னதாக எதாஸ்தானத்திலிருந்து திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதி அருகில் எழுந்தருளி அங்கு திருஞானசம்பந்தருக்கு 21 வகையான நறுமண திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், செய்யப்பட்டு மலர்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து மலைமீது எழுந்தருளி உமையம்மையிடமிருந்து ஞானப்பாலை சிவாச்சாரியர்கள் திருஞானசம்பந்தருக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
    இதில் மிகக் குறைவான பக்தர்கள் பங்கேற்று தங்கள் இல்லங்களில் இருந்து எடுத்து வந்த பாலை திருஞானசம்பந்தருக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் திருஞான-சம்பந்தர் எதாஸ்தானம் திரும்பினார்.
    செம்பனார்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கினார்.
    தரங்கம்பாடி

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு கலெக்டர் லலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    அப்போது அவர் கூறியதாவது:-

    மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் துறையை சேர்ந்த 51 நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் 554 ஆண்கள், 976 பெண்கள் உட்பட மொத்தமாக 1530 வேலைநாடுபவர்கள் கலந்து கொண்டனர். 110 வேலைதேடுபவர்களுக்கு  பணிநியமன ஆணை வழங்கப்பட்டது, 
    மீதமுள்ளவர்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் உரிய பயிற்சிக்குப் பின் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இணை இயக்குநர் கவிதப்பிரியா, தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி, காளகஸ்தினாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, துணைத் தலைவர் சரவணன் மற்றும் தனியார் கல்லூரி நிர்வா-கிகள், அரசு அலுவலர்கள் மற்றும் திரளானோர் கலந்துக் கொண்டனர்.
    செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டத்தில் ராட்சத குழாய்களை மலைபோல் குவித்து வைத்துள்ள ஓ.என்.ஜி.சி&யை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவி-ளையாட்டம் கிராமத்தில் ஆயிரக்கணக்காக ராட்சத குழாய்களை ஓ.என்.ஜி.சி நிறுவனம் இரவோடு, இரவாக மலைப்போல் குவித்து வைத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்-தியுள்ளது.

    குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிடங்கின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், 
    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வெண்ணிலா, விஜயகாந்த், மாவட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், கலைச்செல்வி, அம்மையப்பன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், வாலிபர் சங்கம், மாதர் சங்க நிர்வா-கிகள், விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

    போராட்டம் குறித்து மாவட்ட செயலாளரும், திருவிளையாட்டம் ஊராட்-சியின் முன்னாள் தலைவருமான பி.சீனிவாசன் கூறும் போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தும் விளைநிலங்களை அழிக்கும் வகையில் பல்வேறு பணிகள் நடந்த வண்ணம் உள்ளது.

    திருவிளை-யாட்டம் கிராமத்--தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. குழாய்--களை பதித்தபோது 3 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே விவசாயிகளிடமிருந்தும், குடியிருப்புவாசிகளிடமிருந்து பெற்ற நிலையில் தற்போது அதே இடங்களில் 13 மீட்டர் வரை இடங்களை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது.பல இடங்களில் குடியிருப்புகளை காலிசெய்ய சொல்லி மிரட்டுவதாகவும் தகவல் வருகிறது. 

    இச்சூழலில் தான் ஓரிரு நாட்களாக ராட்சத குழாய்களை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மலைபோல இங்கு குவித்து வைத்துள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்ற பிறகு அப்புறப்படுத்திய ஓ.என்.ஜி.சி நிறுவனம். அந்த குழாய்களை திருவிளையாட்டம் கிராமத்தில் வந்து இறக்கி வைத்துள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    போராட்டத்தையடுத்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் குழாய்களை அப்புறப்படுத்தி விடுவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம். ஒரு வாரத்திற்-குள்ளாக குழாய்களை அப்புறப்படுத்தவில்லை எனில் மீண்டும் போராட்-டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
    நள்ளிரவில் கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவை வாங்க வந்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நள்ளிரவில் கீழநாஞ்சில்நாட்டை சேர்ந்த தொழிலாளி ஜீவா (வயது 24) கள்ளத்தனமாக விற்கப்படும் மதுபாட்டில் வாங்க வந்துள்ளார்.

    அப்போது கூறைநாட்டைச் சேர்ந்த தமிழ்மணி (28), என்பவர் அங்கு டாஸ்மாக் பூட்டிய பிறகு கள்ளத்தனமாக மது விற்று வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் சென்று ஜீவா மது பாட்டில் கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். இந்நிலையில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தமிழ்மணி தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜீவா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் செல்வம் அங்கு விரைந்து வந்தார். அப்போது ஜீவாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் பரிசோதனைக்குப்பின் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிணவறைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்மணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் பூட்டிய பிறகு கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அவ்வப்போது பல அசம்பாவித சம்பவங்கள் நடப்பதாக வேதனை தெரிவித்தனர்.

    நள்ளிரவில் கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவை வாங்க வந்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி உடனாகிய அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாளான நேற்று அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளினார். இதனையடுத்து மங்கள வாத்தியங்கள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க, கனேச குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சித்திரை திருவிழா பஞ்சமுக கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9-ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 12-ம் தேதி இரவு எமன் சம்காரமும், 14-ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்ட திருவிழாவும் நடைபெறுகிறது.
    மயிலாடுதுறை அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (45) கூலித்தொழி-லாளி.

    இவரது குடும்பத்தினருக்கும், அருகே வசிக்கும் சண்முகம் (42) என்பவரது குடும்பத்திற்கும் இடையே ஆடு, மாடு மேய்ப்பது மற்றும் பொதுக் குழாயில் தண்ணீர்

    பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த 2020&ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முன்விரோதம் காரணமாக சாமிதுரைக்கும், சண்மு-கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனை அருகில் இருந்த-வர்கள் சமாதானம் செய்து வைத்த நிலையில் இரவு தனியாக நின்றிருந்த சாமிது-ரையை, சண்முகம், அவரது மனைவி ராஜேஸ்வரி (37)

    ஆகிய இருவரும் சேர்ந்து கட்டையால் அடித்தும், கத்தரிக்-கோலால் குத்தியும் கொலை செய்ததாக பாகசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    இவ்வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம்

    சண்முகம் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1200 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளதாக அறிவித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இதுவரை 3 ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது மேல்முறையீடுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    ×