என் மலர்
உள்ளூர் செய்திகள்

தம்பதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரும் போலீசார்.
கொலை வழக்கில் தம்பதிக்கு ஆயுள்
மயிலாடுதுறை அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (45) கூலித்தொழி-லாளி.
இவரது குடும்பத்தினருக்கும், அருகே வசிக்கும் சண்முகம் (42) என்பவரது குடும்பத்திற்கும் இடையே ஆடு, மாடு மேய்ப்பது மற்றும் பொதுக் குழாயில் தண்ணீர்
பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2020&ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முன்விரோதம் காரணமாக சாமிதுரைக்கும், சண்மு-கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அருகில் இருந்த-வர்கள் சமாதானம் செய்து வைத்த நிலையில் இரவு தனியாக நின்றிருந்த சாமிது-ரையை, சண்முகம், அவரது மனைவி ராஜேஸ்வரி (37)
ஆகிய இருவரும் சேர்ந்து கட்டையால் அடித்தும், கத்தரிக்-கோலால் குத்தியும் கொலை செய்ததாக பாகசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம்
சண்முகம் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1200 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளதாக அறிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இதுவரை 3 ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது மேல்முறையீடுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Next Story






