என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மது வாங்க வந்தபோது தகராறு- கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை

    நள்ளிரவில் கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவை வாங்க வந்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நள்ளிரவில் கீழநாஞ்சில்நாட்டை சேர்ந்த தொழிலாளி ஜீவா (வயது 24) கள்ளத்தனமாக விற்கப்படும் மதுபாட்டில் வாங்க வந்துள்ளார்.

    அப்போது கூறைநாட்டைச் சேர்ந்த தமிழ்மணி (28), என்பவர் அங்கு டாஸ்மாக் பூட்டிய பிறகு கள்ளத்தனமாக மது விற்று வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் சென்று ஜீவா மது பாட்டில் கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். இந்நிலையில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தமிழ்மணி தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜீவா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் செல்வம் அங்கு விரைந்து வந்தார். அப்போது ஜீவாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் பரிசோதனைக்குப்பின் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிணவறைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்மணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் பூட்டிய பிறகு கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அவ்வப்போது பல அசம்பாவித சம்பவங்கள் நடப்பதாக வேதனை தெரிவித்தனர்.

    நள்ளிரவில் கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவை வாங்க வந்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×