என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோபூஜை வழிபாடு நடந்தது.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய சட்டைநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் மலை மீது தோணியப்பர், உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர்
ஆகிய சுவாமிகள் அருள் பாலிக்-கின்றனர். திருஞானசம்பந்தருக்கு , உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலம் ஆகும். காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர் இக்கோவில் தெற்கு கோபுர வாசல்
அருகில் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகருக்கு மஞ்சள் ,
திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதன்பின்னர் கொடிமரத்தின் அருகில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோசாலையில் இருந்து
வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஹி பசு மாடு மற்றும் கன்றுக்கு பழங்களை வழங்கி வழி-பட்டுச் சென்றனர்தொடர்ந்து தமிழ் புத்தாண்டு வருட பிறப்பை ஒட்டி அஸ்திர தேவருக்கு
தீர்த்தவாரி வைபவம் நடந்தது.

சீர்காழி அரசு மருத்துவமனையில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ரத்ததான முகாமை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சீர்காழி:
சீர்காழி அரசு மருத்துவமனையில் அம்பேத்கர் பிறந்-தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடை பெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவர்பானுமதி தலைமை தாங்கினார்.
நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், துணைத்-தலைவர் சுப்ப-ராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபா-கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அருண்ராஜ்குமார்
வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை பன்னீர்செல்வம் எம்.எல். ஏ. கலந்துகொண்டு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன்,
மாவட்ட நிர்வாகி சொல்ல முத்துக்குமார், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
முடிவில் லேப் டெக்னீசியன் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். தொடர்ந்து உழவர் சந்தை முன்பு அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அன்னதானம்
வழங்கினார்.

தரங்கம்பாடி அருகே தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அம்பேத்-கர் சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறும்-போது, அம்பேத்கரின் பிறந்த தினத்தை சமத்துவ தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலகம் போற்றப்படும் தலைவராக
விளங்கி வரும் அம்பேத்காரின் பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இந்த தருணத்தில் தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, துணைச் செயலாளர் ஞான-வேலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி
சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தை கட்சியின் கலியமூர்த்தி, ராமலிங்கம், சி.பி.ஐ. கட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம தலைவர் குமார், சுந்தர், நாம் தமிழர் கட்சியினர் செல்வம், மற்றும்
ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை வதான்யேஸ்வரசாமி கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை டவுன் சேந்தங்குடியில் அமைந்துள்ள வதான்யேஸ்வர சாமி கோவிலில் அதிசார குரு பெயர்ச்சி விழா நடை-பெற்றது.
இந்த அதிசார குரு பெயர்ச்சி விழாவிற்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
முன்னிலையில், சிவஸ்ரீ பாலச்சந்திர சிவாச்சாரியார் விஷேச பூஜைகள் செய்தனர். நேற்று அதிகாலை 4. 16 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
இதனை முன்னிட்டு வதான் யேஸ்வரர் கோவிலில் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள அனுக்கிரக தலமான மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க
கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. மகா தீபாராதனை மற்றும் பஞ்சமுக தீபாரதனை செய்யப்பட்டது. குருபெயற்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் வள்ளலார் கோவில் சிவ-குருநாத தம்பிரான் கட்டளை விசா-ரணை, கண்காணிப்பாளர் அகோரம், கோவில் தலைமை அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார், நகரமன்ற உறுப்பினர்
ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் பக்தர்கள் பரிகாரங்களுக்காக லட்சார்ச்சனை பூஜைகளும், யாகங்கள் நடைபெற்றது.
காலமுறை ஊதியம் வழங்ககோரி மயிலாடுதுறையில் 19-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஊரக உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயிலில் ஊரக உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் ஒ.ஹெஜ். ஆப்ரேட்டர்கள், தூய்மை பணி காவலர்கள், துப்புரவு பணியாளர்கள்
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வில்சன், செயலாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தூய்மை பணி
காவலர், துப்புறவு பணியாளர்கள், ஒ.ஹெஜ். ஆப்ரேட்டர், ஆகியோருக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வு பெறுபவர்களுக்கு தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி
தரவேண்டும், பணி பதிவேடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 19- ந்தேதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்தி-ருப்பு
போராட்டம் நடத்தபட உள்ளது. அதில் ஆயிரத்துக்கு மேல் உறுப்பினர்கள் கலந்துக்-கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முடிவில் வனராயன் நன்றி கூறினார்.
மயிலாடுதுறையில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலைய வளாகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்போல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் பன்னீர்செல்வம் (வயது46) என்பவரை பிடித்து சோதனையிட்டனர்.
சோதனையில் அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கடையூர் அருகேயுள்ள காழியப்பநல்லூரில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
திருக்கடையூர் அருகேயுள்ள காழியப்பநல்லூரில் 47,952 சதுரடியில், ரூ.3 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி-கள் நிலையம் அலுவலர் மற்றும்
பணியாளர்கள் குடியிருப்பு வளாகம், கண்கா-ணிப்பு நிலையம் ஆகிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து
மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர் துரை, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணாசங்கரி, திருக்கடையூர்
ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமாலதி சிவராஜ், பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, நிலைய அலுவலர் மொகிசன், சிறப்பு நிலை அலுவலர் அருண்மொழி, நிலைய அலுவலர்கள்
மயிலாடுதுறை முத்துக்குமார், குத்தாலம் சீனுவாசன், சீர்காழி சிறப்பு நிலைய அலு-வலர் ரத்தினவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் நிவாரணம் பெற மனு செய்யலாம் என மயிலாடுதுறை கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைதொகை வழங்குவதற்கு என்ற இணை-யதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில்
அமைக்கப்பட்டு உள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்-கப்பட்டு வருகிறது. இதுவரை 791 மனுக்கள் பெறப்பட்டு 597 இனங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை
வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 155 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 20-ந் தேதி வழங்கிய
தீர்ப்பில், 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.5.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்பிக்க வேண்டும்.
20&3&2022 முதல் ஏற்படும் கோவிட்&19 இறப்பு-களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்பிக்க வேண்டும்.
சமர்பிக்க மனுக்கள் மீது சம்பந்தபட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள கால கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்பிக்க இயலாதவர்கள்
அது குறித்து மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலு-லரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பெறப்படும் மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
எனவே கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்-பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டு-தல்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார திருவிழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்த-கடேஷ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
காலசம்ஹார திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்-துடன் தொடங்கி தினமும் வீதி உலா நிகழ்ச்சி
நடைப்பெற்று வந்தன.விழாவில் நேற்று காலசம்ஹார திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வானது சிவபக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16 ல் முடிவடைந்ததை தொடர்ந்து மார்க்கண்டேயரின்
உயிரை பறிக்க எமன் வந்தார். மார்க்கண்டேயர் 107 சிவாலயங்களை வணங்கி விட்டு 108 வதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது மார்க்கண்டேயர்
சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கண்டேயரை நோக்கி எமதர்மன் பாசக்கயிறை வீசும் பொழுது, அது அவர் மீது மட்டும்
விழாமல், சிவலிங்கத்தின் மேலும் விழுந்தது. உடனே கடும் கோபத்துடன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவ பெருமான் எமனை எட்டி உதைத்து, தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார்.
இதன் மூலம் சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என அழைக்கப்படுகிறார். அப்பொழுது மார்க்கண்-டேயருக்கு என்றும் பதினா-றாக இருக்க அருள்பாலித்தார்.இந்த நிலையில் 6ஆம் நாள்
நிகழ்ச்சியாக சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து தருமபுர ஆதினம் மாசிலாமணி தேசிக
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காலனை வதம் செய்யும் நிகழ்சியான எமசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் அமிர்த விஜயகுமார், செம்பனார்கோயில் ஒன்றிய குழுத் தலைவர் துணைத் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ்,
வார்டு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து தொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
குத்தாலம் உத்வாகநாதர் கோவிலில் உள்ள பழமையான உத்தால மரத்தில் பூக்கள் பூத்து குலுங்கியது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உத்வாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக
ஐதீகம். இந்த கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொள்வ-தற்-காக கைலாயத்தில் இருந்து வந்த போது அவருக்கு நிழலாக உத்தால மரம் வந்துள்ளது. திருக்கல்யாணம்
முடிந்து சுவாமி, அம்பாள் கைலாயம் செல்லும் போது சுவாமி உத்தால மரத்தையும், தனது பாதரட்சையையும் விட்டுச் சென்றதாக வரலாறு கூறு-கிறது. 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்
இன்றளவும் இந்த மரம் பசுமையுடன் காணப்படுகிறது. இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசியிலும், சித்திரை மாத முதல் வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம். இவ்வாண்டு
இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்த்து தரிசித்து சென்றனர். இந்த உத்தாலம் மலர் ஐந்து விதமான இதழ்களையும்,
ஐந்து வகையான சுவையையும் உடையது.மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் மனிதர்கள் உண்ண உகந்தது. இந்த உத்தால மரம் உலகில் வேறு எங்கும் இல்லாதது தனிச் சிறப்பு வாய்ந்தது.
செம்பனார்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்க விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஞானசேகர், சாந்தி, வட்டார கல்வி
அலுவலர்கள் பூவராகவன், டேவிட் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் நூர்பி வரவேற்றார்.
இதில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு,
பேச்சு மற்றும் மொழி திறன் குறைபாடு உள்ளிட்ட குறைபாடு உடைய மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு,
நான்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதம் உடையோருக்கான நாற்காலி, காது கேளாதோருக்-கான கருவி, மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான உபகரண தொகுப்பு, ரோலேட்டர் உபகரணம்
(கை-கால் தாங்கி) ஆகியன வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஊனத்தின் அளவை பரிசோதனை செய்து, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்பெற்றோருடன் கலந்துகொண்டு
பயனடைந்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வரத்தினம், மாவட்ட மறுவாழ்வு துறை நலஅலுவலர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயந்தி, சுப்பிரமணியன், மாவட்ட
கண்காணிப்பாளர் மாதவன், வட்டாரஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீர்காழி பகுதியில் உரிமம் இன்றி இயங்கிய 2 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி ஈசானிய தெருவில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு உரிமம் இன்றி பார் செயல்ப-டுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக்
மேலாளரும் துணை கலெக்டருமான வாசுதேவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார் நடத்திய-வர்கள் இரண்டு கடைகளையும் பூட்டி விட்டு
தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து மாவட்ட மேலாளர் வாசுதேவன் முன்னிலையில் பார் செயல்-பட்ட இரண்டு அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் புத்தூர் பகுதியில் இயங்கிவரும்
டாஸ்மாக் கடையில் சோ-தனை நடத்தியபோது அருகே உரிமம் இன்றி இயங்கிவந்த பாருக்கு சீல் வைத்ததுடன், அங்கு பொருட்கள் விற்ப-னையில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த
கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.