search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு நான்குசக்கர சைக்கிள் நாற்காலி வழங்கல்.
    X
    மாற்றுத்திறனாளிகளுக்கு நான்குசக்கர சைக்கிள் நாற்காலி வழங்கல்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

    செம்பனார்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்க விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஞானசேகர், சாந்தி, வட்டார கல்வி

    அலுவலர்கள் பூவராகவன், டேவிட் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் நூர்பி வரவேற்றார்.

    இதில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு,

    பேச்சு மற்றும் மொழி திறன் குறைபாடு உள்ளிட்ட குறைபாடு உடைய மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு,

     நான்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதம் உடையோருக்கான நாற்காலி, காது கேளாதோருக்-கான கருவி, மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான உபகரண தொகுப்பு, ரோலேட்டர் உபகரணம்

    (கை-கால் தாங்கி) ஆகியன வழங்கப்பட்டன.

    தொடர்ந்து ஊனத்தின் அளவை பரிசோதனை செய்து, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்பெற்றோருடன் கலந்துகொண்டு

    பயனடைந்தனர்.  இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வரத்தினம், மாவட்ட மறுவாழ்வு துறை நலஅலுவலர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயந்தி, சுப்பிரமணியன், மாவட்ட

    கண்காணிப்பாளர் மாதவன், வட்டாரஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×