என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
மயிலாடுதுறையில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலைய வளாகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்போல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் பன்னீர்செல்வம் (வயது46) என்பவரை பிடித்து சோதனையிட்டனர்.
சோதனையில் அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






