என் மலர்
மயிலாடுதுறை
ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 வாகனங்ள் சிறைபிடிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை வட்டாரபோக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கடந்த 13-ம் தேதி முதல் 17&ம் தேதி வரை சிறப்பு விடுமுறை
நாட்களில் சீர்காழி புறவழிச்சாலையில் வாகனதணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது 48 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.1லட்சத்து73ஆயிரத்து500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அதேபோல் சாலை வரி ரூ.1லட்சத்து 24ஆயிரத்து 470 வசூலிக்கப்பட்டது.
வாகனதணிக்கையின் போது விதிமுறைகள் மீறல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அபராதமாக ரூ.1லட்சத்து37ஆயிரத்து100 விதிக்கப்பட்டது.
வாகன தணிக்கையின்போது முறையாக ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.
கவர்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு 27-வது குருமகா சன்னிதான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு இன்று தமிழக கவர்னர் ஆர். என்.ரவி வந்தார். அப்போது அவரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிசா, தென்மன்டல கட்டளை தம்பிரான் திருஞானசம்பந்த மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் கணேச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கஜ பூஜையும், கோபூஜையும் நடைபெற்றது.
இதையடுத்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது.
இதையடுத்து கவர்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு 27-வது குருமகா சன்னிதான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார். சிறிது நேரம் அவர்கள் பேசி கொண்டிருந்தனர்.
முன்னதாக திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்து விட்டு ஆதீன மடத்துக்கு கவர்னர் என்.ஆர்.ரவி காரில் சென்றபோது செல்லும் வழியில் கம்யூனிஸ்ட், மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டது உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக கூறி கோஷங்கள் எழுப்பினர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு இன்று தமிழக கவர்னர் ஆர். என்.ரவி வந்தார். அப்போது அவரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிசா, தென்மன்டல கட்டளை தம்பிரான் திருஞானசம்பந்த மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் கணேச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கஜ பூஜையும், கோபூஜையும் நடைபெற்றது.
இதையடுத்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது.
இதையடுத்து கவர்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு 27-வது குருமகா சன்னிதான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார். சிறிது நேரம் அவர்கள் பேசி கொண்டிருந்தனர்.
முன்னதாக திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்து விட்டு ஆதீன மடத்துக்கு கவர்னர் என்.ஆர்.ரவி காரில் சென்றபோது செல்லும் வழியில் கம்யூனிஸ்ட், மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டது உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக கூறி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து போலீசார் பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... சினிமாவை மிஞ்சும் சம்பவம்: தனது ஜோடியை கொன்றவரை 7 முறை தீண்டிய பாம்பு...
திருக்கடையூரில் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநாடு நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி திருக்கடையூரில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் மேகநாதன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சிம்சன், மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினர்.
தமிழ்நாடு அனைத்து சமநிலையை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பாளர் நடராஜன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிவித்து நிறைவுயாற்றினார். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வேண்டும், குடியிருப்பு வாசிகளுக்கு ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருக்கும் மற்றும் சாகுபடி விவசாயிகளுக்கு நியாயமான விலையை தீர்மானிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும், ஆக்கிரமிப்பாளர்கள் யார்? என்று அடையாளப்படுத்தப்படும் பயனாளிகள் மீது யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அதன் மீது அவர்களை கைது செய்து ஜாமீனில் வெளியில் வர முடியாதப்படி சிறையில் அடைக்கலாம் என்று உள்ள 79 பி திருத்தச்சட்டத்தை உடனடியாக ரத்து செய்திடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக ராயர், துணைத் தலைவர்களாக ராஜகோபால், தங்கப்பன், செயலாளராக ஏ.ஆர்.விஜய், இணை செயலாளர்களாக விஜயா பாலையா, பொருளாளராக ராமலிங்கம் உள்ளிட்டோரும், 7 பேர் கொண்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலாம் ஆண்டு டேக்வாண்டோ அறிமுகப் போட்டி நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் டேக்வாண்டோ போட்டியானது மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலாம் ஆண்டு அறிமுக போட்டியாக நடைபெற்றது.
இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 12 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் உடல் எடை வாரியாக பிரிக்கப்பட்டு 36 பிரிவுகளின்கீழ் போட்டி நடத்தப்பட்டது, ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சீர்காழி டி.எஸ்.பி லாமேக் பதக்கங்களை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்ட டேக்வாண்டோ சங்கத் தலைவர் ராஜ்கமல் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளரும், தலைமை பயிற்சியாளருமான கலைவேந்தன், பொது செயலாளர் செல்வமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாந்தி, உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் ஸ்டாலின் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி அருகே காவிரிப்பூம்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகள் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளனர். அவர்களை பாராட்டி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவிரிப்பூம்பட்டிணம் மீனவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி
பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் மாணவ, மாணவிகள் இணைந்து யோகாவில் தேசிய சாதனை நிகழ்த்தும் விழா இன்று நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், பூம்புகார் கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற சாதனை முயற்சியை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின்
நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆய்வு செய்து ஊக்கப்-படுத்தினர். இப்பள்ளியை சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக 100 மீட்டர் நீளத்திற்கு இணைந்து டிராகன் வடிவில் யோகா
சனத்தில் புஜங்காசனம் செய்து 12 நிமிடங்கள் 12 வினாடிகள் அசைவின்றி தொடர்ந்தனர்.5 நிமிடங்கள் செய்தாலே தேசிய சாதனையாக அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் 12 நிமிடங்கள் 12 வினாடிகள்
யோகாசனத்தை தொடர்ந்த மாணவர்களின் சாதனையை மாபெரும் தேசிய சாதனையாக அங்கீகரித்த ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் சான்றிதழ்கள் மற்றும் அனைத்து
மாணவ, மாணவி-களுக்கும் பதக்கங்களும் வழங்கி பாராட்டினர்.விழாவில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன்,
தலைமை ஆசிரியை செல்வாம்பிகை மற்றும் கல்வி துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினர். ஏற்பாடுகளை பூம்புகார் கிராம
பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் அறம்வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் கோயில் பெரிய கண்ணார தெருவில் அமைந்துள்ளது. இக்கோவில் அப்பர் பெருமானால் போற்றப் பெற்று, திருவையாறு ஐயாறப்பர்
தீவிர சிவபக்தர்களான நாதசன்மா அவரது மனைவியான அநவித்தை ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று அறம்வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் மேற்கு திசையை நோக்கி எழுந்தருளினார்.
இக்கோவிலில் சிவபெருமானை மனமுருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இதனையொட்டி சித்திரைத் திருவிழாவில் திருத்தேர் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தேர் வீதி உலா
நடைபெற்றது. 24 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பாடசாலை நிறுவனர் சிவஸ்ரீ சுவாமிநாதன்
சிவாச்சாரியார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத தேர் 4 வீதிகளை சுற்றி வலம் வந்து சன்னதியை அடைந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, உதவி கண்காணிப்பாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேசன், 100 வருடங்களுக்குப் பிறகு சொந்த செலவில் பழமை மாறாமல் புதியதாக கட்டப்பட்ட
தேரை வழங்கிய ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ். கனகசபை, சபதியர் விவேகானந்தன், நகரமன்ற உறுப்பினர்கள் ஆனந்தி ஆனந்தகுமார், வளர்மதி தெய்வநாயகம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்
ஆர்.கே. சங்கர், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை டவுன் சேந்தங்குடி ஞானாம்பிகை உடனாகிய வதாரன்-யேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜைக்கு தர்மபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல் ஆசியுடன், சிவகுருநாத தம்பிரான் முன்னிலையில் தலைமை
அர்ச்சகர் சிவஸ்ரீ பாலச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.சித்ரா பவுர்ணமி என்பது மயிலாடுதுறை மாவட்டத்திற்க்கே
பெருமை பெற்றது. சித்ரா பவுர்ணமி அன்று இந்திர விழா தனி சிறப்பானது. அதனடிப்படையில் துர்கா, சரஸ்வதி, தீப பூஜை சுமங்கலி பெண்கள் நடத்தியுள்ளனர். இது உலக நன்மைக்காகவும்,
குடும்பங்கள் வளம் பெறவும் மகிழ்ச்சி அடையவும் கூட்டுப் பிரார்த்தனை வழிபாடு செய்யப்பட்டுள்ளது.இதில் ஏ.ஆர்.சி. சண்முகம் ஜுவல்லரி உரிமையாளர் கீதா மோகன், சேலை உள்ளிட்ட மங்களப்
பொருட்கள் அடங்கிய பேக்கை திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலிகளுக்கு வழங்கினார். கோவில் கண்காணிப்பாளர் அகோரம், நகரமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவில் அருகே மேலையூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ரேஷன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜேந்திரன் வரவேற்றார். முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி திருத்தம், குடும்ப தலைவர் மாற்றம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் கஞ்சாநகரம், கருவாழக்கரை, மேலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் ரேஷன் கார்டில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மனு செய்து உடனடியாக தீர்வு பெற்றனர்.
மேலும் 2 பேருக்கு, ஆவணங்களை சரிபார்த்து புதிய மின்னணு ரேஷன் கார்டு பெறுவதற்கான அனுமதி சான்று வழங்கப்பட்டது. முகாமில் வட்ட வழங்கல் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் ஜோசப் ராஜ், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் குமார், வட்ட பொறியாளர் ஐயப்பன், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீர்காழியில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் மதநல்லிணக்கமாக நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளருமான முபாரக், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர்மன்றத் தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ பங்கேற்று இப்தார் நோன்பு திறப்பை தொடங்கி வைத்தார். இதில் சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மணல்மேடு அருகே மினி வாட்டர் டேங்க் பழுதடைந்ததால் தண்ணீர் இன்றி தவித்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
மணல்மேடு:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த கொண்டல் ஆற்றங்கரை தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆற்றங்கரை தெருவில் மினி வாட்டர் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த மினி வாட்டர் டேங்கின் மோட்டார் பழுதடைந்தது. தொடர்ந்து அந்த மோட்டாரை பழுது நீக்கம் செய்து தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டி பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டியிருந்தது.
மேலும் சுகாதாரமற்ற முறையில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பம்புசெட் குடிநீரை பருகி வந்தனர் இந்நிலையில் மோட்டாரை பழுது நீக்கம் செய்து மீண்டும் தங்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி கொண்டல் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென கொண்டல் கடைவீதியில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்தை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.
இதனால் மணல்மேடு - மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மணல்மேடு போலீசார் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
சீர்காழி நகராட்சியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில், நகராட்சி ஆணையர் இப்ராகிம், மேலாளர்காதர் கான், பணி மேற் பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு
ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ், சுகாதார அலுவலர் செல்லதுரை, மற்றும் அலுவலர்கள் ,பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில், நகராட்சி ஆணையர் இப்ராகிம், மேலாளர்காதர் கான், பணி மேற் பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு
ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ், சுகாதார அலுவலர் செல்லதுரை, மற்றும் அலுவலர்கள் ,பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:
திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி கோவிலுக்கு தனது மனைவி மற்றும் மகள்களுடன் வந்தார்.
கோவிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் புனித நீரை தெளித்துக் கொண்டு கற்பகவிநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய
சுவாமி சன்னதிகளில் அர்ச்சனைகள் செய்து வழிபாடு மேற்கொண்டார். அப்போது வேல்முருகன் பக்தி பாடல்களை பாடிய-வாறு சுவாமி தரிசனம் செய்தார் சமீபத்தில் பின்னணி பாடகர் வேல்முருகன்
5-ம் வகுப்பு படிக்கும் மகள் ரக்ஷா கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். ஒரு நிமிடத்தில் ஐம்பத்தொரு பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு அவை எந்த பல்கலைக்கழகம் என கூறி
இந்த சாதனையை புரிந்தார். இந்த சாதனை புரிந்த ரக்ஷாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சாதனை புரிந்த தன் மகளுக்காக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்த வேல்முருகன் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் கோவிலில் வெளியில்
தனது குடும்பத்தினருடன் சிலம்பம் கற்று வரும் மாணவர்கள் சந்தித்து சிலம்ப கலையை ஊக்குவிக்-கும் வகையில் அவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினார்.






