என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்ட மாநாடு
    X
    தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்ட மாநாடு

    அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநாடு

    திருக்கடையூரில் அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநாடு நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி திருக்கடையூரில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் மேகநாதன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சிம்சன், மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினர்.

    தமிழ்நாடு அனைத்து சமநிலையை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பாளர் நடராஜன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிவித்து நிறைவுயாற்றினார். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வேண்டும், குடியிருப்பு வாசிகளுக்கு ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருக்கும் மற்றும் சாகுபடி விவசாயிகளுக்கு நியாயமான விலையை தீர்மானிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும், ஆக்கிரமிப்பாளர்கள் யார்? என்று அடையாளப்படுத்தப்படும் பயனாளிகள் மீது யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அதன் மீது அவர்களை கைது செய்து ஜாமீனில் வெளியில் வர முடியாதப்படி சிறையில் அடைக்கலாம் என்று உள்ள 79 பி திருத்தச்சட்டத்தை உடனடியாக ரத்து செய்திடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக ராயர், துணைத் தலைவர்களாக ராஜகோபால், தங்கப்பன், செயலாளராக ஏ.ஆர்.விஜய், இணை செயலாளர்களாக விஜயா பாலையா, பொருளாளராக ராமலிங்கம் உள்ளிட்டோரும், 7 பேர் கொண்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.
    Next Story
    ×