என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    வைத்தீஸ்வரன்கோவிலில் 26-ந்தேதி நகரத்தாரின் பாரம்பரிய வழிபாடு நடைபெறுகிறது. இதில் பல ஆண்டுகளாக மாட்டு வண்டிகளில் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் செல்வமுத்துக்குமார சுவாமி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

    கோயிலில் அருள்பாலிக்கும் வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்மனை குலதெய்வமாக கொண்டு வழிபடும் பக்தர்கள் ஆண்டுதோறும் தைமாதம் செவ்வாய்கிழமை தங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபடுவர்.

    காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருவர். இந்த பாதயாத்திரை பக்தர்கள் ஆண்டாண்டு காலமாக பல பல நூறு கிலோ மீட்டர் நடை பயணமாக வந்து வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் தேவையான பொருட்கள், உடைகள் போன்றவைகளை ஒரு மாட்டு வண்டியில் வைத்து அவர்கள் பாதயாத்திரையாக வருவர்.

    பாதயாத்திரை பக்தர்கள் ஒரு புறம் சாலையோரம் வரிசையாகவும், அவர்களை எடுத்து வரும் மாட்டு வண்டிகள் வரிசையாக வரும். சாலையில் வருவதை ஆங்கங்கே உள்ள பொதுமக்கள் பார்த்து மகிழலாம். பாதயாத்திரையாக வரும் மக்கள் மஞ்சள் தடவி வேப்பிலை செருகிய வழிபாடு குச்சியை கையில் எடுத்து வந்து சுவாமி முன்பு வழிபட்டு அங்குள்ள கோயில் கொடிமரம் முன்பு விட்டுச் செல்வர். பாரம்பரியமாக தொடரும் இந்த வழிபாடு நிகழ்ச்சி நாளை மறுதினம் 26&ந்தே¤ செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
     
    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி டி.எஸ்.பி லாமெக் தலைமையில். போலீசார் செய்து வருகின்றனர் பாதயாத்திரை பக்தர்கள் மீண்டும் ஊர் திரும்புவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதிகளும், சிறப்பு அரசு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில்அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்த 4 பேர் போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகே பட்டாசு விற்பனைக்கான அனுமதி பெற்று தனியார் வாணவெடி பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து மூலப்பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக வைத்தீஸ்வரன்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் சீர்காழி டி.எஸ்.பி லாமேக் தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமாறன், வைத்தீஸ்வரன் கோவில் சப்&இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் சென்று கடையை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கடை கீழ்த்தளத்தில் அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட பயங்கர சத்தத்துடன் வெடிக்கக் கூடிய நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து கடையின் மேல் தளத்தில் ஆய்வு செய்தபோது நாட்டு வெடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கரித்துகள்கள், இரும்பு பைப்புகள், அமோனியா சல்பர், வெடிமருந்து உள்ளிட்ட மூலப் பொருட்கள் ஏராளமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் சுமார் 50 கிலோ எடையுள்ள பயங்கர சத்தத்துடன் வெடிக்கக்கூடிய நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். 

    இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிகளை சேர்ந்த ரமேஷ்குமார், ஆனந்தன், பழனிச்சாமி, மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், ஆகிய 4 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சீர்காழியில் அரசு இசைப்பள்ளியில் ரூ.99 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை - எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
     சீர்காழி:

    சீர்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது சொந்த கட்டிடம் இல்லாததால் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. 

    குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்ததால், இசை கருவிகள் இசைக்கும் போது அருகில் உள்ள  குடியிருப்பு வாதிகளும் சிரமம் ஏற்பட்டது. 
    அதனால் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு  புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சீர்காழி ரயில்வே ரோடு  ஸ்ரீநகரில் ரூ.99 லட்சத்தில்  புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  பூமி பூஜை நிகழ்ச்சி சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தலைமை வகித்து புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
     
    இதில் திமுக நகர செயலாளர் சுப்பராயன்,பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர்கட்டிடம் நாகவேல், உதவி பொறியாளர் ஜான் டி ரோஸ்ட், இசைப் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், நாதஸ்வர ஆசிரியர் சிவசுப்பிரமணியன், ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஒப்பந்தக்காரர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    குத்தாலம் அருகே கதண்டு கடித்ததில் நூறு நாள் திட்டப் பணியாளர்கள் 26 பேர் படுகாயமடைந்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பேராவூர் கரூப்பூர் கிரா-மத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வருபவர் ஜெனிபர்ராஜ் (வயது-32). இவரது கண்காணிப்பில் 125 விவசாய

    தொழிலாளர்கள், நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்தனர். இதில் சில பேர், பெரம்படி வாய்க்காலிலுள்ள நாணல்,  கோரைகளை சுத்தம் செய்வதற்காக அவற்றை அகற்றும் போது, அதிலிருந்த

    கதண்டுகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த 26- பேர், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 10- பேர் முதலுதவி  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

    மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது குறித்து குத்தாலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சீர்காழியில் பன்றி வளர்ப்போர் 7 நாட்களில் பன்றிகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் பன்றி வளர்போர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபர-மேஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி

    ஆணையர் (பொ) இப்ராஹிம், மேலாளர் காதர்கான், வருவாய்-ஆய்வாளர் ராஜகணேஷ், சுகாதா-ரஆய்வாளர் பிச்சமுத்து முன்னிலை வகித்தனர். களபணியாளர் சீதாலெட்சுமி வரவேற்றார்.

    கூட்டத்தில் சீர்காழி நகரில் பன்றிவளர்போர்கள் பன்றிகளை திரியவிடுவதால் வாகனவிபத்துக்களும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அதனால் பன்றி வளர்போர், தாங்கள் வளர்க்கும் பன்றிகளை

    அப்புறப்படுத்தவேண்டும் இல்லை-யென்றால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தநவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. 

    இதில் பணிதளமேற்பார்வையாளர் பாலசுப்-பிரமணியன், காசாளர் சார்லஸ் கலந்துக்கொண்டனர்.
    சீர்காழியில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காஅலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம்

    நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இராமபத்ரன், கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் 7வது ஊதிய குழு அறிக்கையில்

    கொடுக்கப்பட்டுள்ள சத்துணவு அங்கன்வாடி, ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.7, 850 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாநில அளவில் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும்

    மேற்பட்ட மனுக்களை தீர்வு செய்து புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வயது வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்

    எழுப்பினர். இதில் நூற்-றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பிற்பகல் வரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
    கீழையூரில் நடந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பள்ளி பருவத்திலேயே அம்பேத்கர் புத்தகங்களை படிக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில், ஆறுபாதி, கீழையூர், நடுக்கரை ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின்

    நிறுவன தலைவருமான தொல் திருமாவளவன் எம்.பி. வருகை தந்தார். அப்போது கீழையூர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலை--யிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்கள் குறைகளையும்

    அவ்வபோது நிறைவேற்றி வருகிறார். பா.ஜ.க ஒன்றிய அரசு தமிழகத்தில் உள்புகுந்து ஆட்களை விலைக்கு வாங்கும் நோக்கில் பல்வேறு செயல்பாட்டை நிகழ்த்தி வருகிறது.

    இந்த சதிவேலையை திமுக அரசு தகர்க்க வேண்டும். மயிலாடுதுறைக்கு வந்த கவர்னர் கார்மீது கல்லெறிந்த தாகக்கூறி ஒரு அபாண்-டமான குற்றச்சாட்டை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை

    என்று கூறி வருகிறார்கள். உண்மையில் அப்படி ஒரு குற்றச்சாற்று நடைபெற-வில்லை. தமிழகத்-திற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருவதாக கூறி தான் கண்டனத்தை பதிவு செய்யவே

    கருப்புக்கொடி காட்டி உள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கிய 32 ஆண்டுகளில் தற்போதுதான் 4 எம்.எல்.ஏ. க்கள், 2 எம்.பி.களை பெற்றுள்ளோம். இந்த 32 ஆண்டுகளில் விடுதலை சிறுத்தைகள்

    கட்சி பல்வேறு இடையூறுகளையும் நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சந்தித்து வந்துயிருக்கிறது. இளைஞர்கள் அம்பேத்கார் புத்தகங்களை பள்ளிப் பருவத்திலேயே படித்து வந்தால் உலகையே

    ஆளும் வல்லமையும், வளிமையும் பெற்றுவிடலாம். இந்த மண்ணில் ஆயுதம் ஏந்தி போராட தேவை இருக்காது. ஒடுக்கப்பட்ட மக்களின் சக்திகளை, எந்த சக்தியாலும் கட்டுபடுத்த முடியாது. 

    அம்பேத்கர் பெயரை சொல்லி இந்த மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.இசையமைப்பாளர் இளையராஜா பற்றி பேசியபோது அவர் பிறந்த காலத்திலிருந்து இன்றைய வரைக்கும்

    அம்பேத்கார் படத்திற்கு மாலை போட்டு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளாரா ?தலித் மக்கள் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட போது குரல் கொடுத்துள்ளாரா?.

    அவருக்கு என்ன தெரியும் அம்பேத்கரை பற்றி. அம்பேத்கார் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்று இளையராஜா சொல்வது எவ்வளவு பெரிய தவறான கூற்று. அவர் இதுபோன்றே

    ஒப்பிட்டு பேசி இருக்கக் கூடாது. இதற்கு பின்னணியில் பாஜக அரசு இருந்து கொண்டு அவரை பிளாக்மெயில் செய்து, மிரட்டி அம்பேத்காரும், மோடியும் இருவரும் ஒரே நிலைப்பாட்டைகொண்டவர்கள்

    என்று சொல்ல வைத்துள்ளார்கள்.மோடியை இயக்குவது ஆர். எஸ். எஸ். அந்த ஆர் எஸ் எஸ்-ஐ இயக்குவது பயங்கரவாத ஆரியர்கள். அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவில் கூட அவருடைய பிறந்த

    நாளை சமத்துவ நாளாக அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் தான் திமுக அரசு சமத்துவ நாளாக அம்பேத்கர் பிறந்த நாளை அறிவித்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதத்தில் இந்துக்கள்

    இல்லை. பௌத்தர்கள் தான் இருந்தனர். அவர்கள் கடவுள் பிரம்மா தான். ஒழுக்கம் தான் உயர்ந்தது என்ற கொள்கையுடையது. இந்தியாவில் 25 சதவீதத்திற்கு மேல் உள்ள தலித் மக்கள் பௌத்தர்களாகமாற்றிவிட்டால், இந்தியாவில் இந்துக்களே இல்லாத நிலைமை ஏற்படும். அதனால் தான் தலித் மக்களை பௌத்தர்களாக மாற்ற வேண்டும் என்று கேட்கி-றோம். அம்பேத்கர் கொள்கையும், பிஜேபிகொள்கையும் ஒன்று என்று பேசி வருவது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் துரை அசோகன்
    ,
    விஜயராணி, திமுக மாவட்ட துணை செயலாளர் ஞான-வேலன், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ரவிச்சந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர்

    ஈழவளவன், மண்டல செயலாளர் வேலு குணவேந்தன் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கதிர்வளவன், தொகுதி செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் அரசகுமாரன், உள்ளிட்ட திரளானவர்கள்கலந்துக்கொண்டனர்.
    சீர்காழியில் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்கை, வரலாற்றை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்துக் கொள்ளும் வகையில் அரசு பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு சென்று வருகிறது.

    அவ்வகையில் சீர்காழி ச.மு.இ மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் வருகை புரிந்தது.கண்காட்சி வாகனத்தை சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரிராஜசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ச.மு.இ.பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உடற்கல்விஇயக்குனர் முரளிதரன், உடல் கல்வி ஆசிரியர் முரளி நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, தனியார் பள்ளிகள் என 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புகைப்பட கண்காட்சியை கண்டு கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் சுதந்திரம் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்று முறைகள் குறித்து ஆசிரியர்கள் விவரிக்க தெரிந்து கொண்டனர்.

    கண்காட்சி வாகனத்தில் அமைக்கப் பட்ட இந்த ஊசி உருவச் சிலையை மாணவ மாணவிகள் வணங்கி உருவச் சிலையுடன் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.அதன்பின்னர் நகர் மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், நித்தியாதேவி, நாகரத்தினம், ரோட்டரி சங்கத்தினர், டெம்பிள்டவுன் ரோட்டரி சங்கத்தினர், லயன்ஸ் சங்கத்தினர் கண்காட்சியை கண்டுரசித்தனர்.
    கொள்ளிடம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் துளசேந்-திரபுரம் அரசு மேனிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கொள்ளிடம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

    முகாமினை மாவட்டக்கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.வட்டார வள மைய மேற்பார்-வையாளர் ஞானபுகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். 

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கொள்ளிடம் காவல் துறை ஆய்வாளர் அமுதாராணி மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் பழனிவேல் வட்டார கவ்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனிவாசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சீர்காழி வட்டார வளமைய” மேற்பார்வையாளர் ஜெய்சங்கர் மயிலாடுதுறை மேற்பார்வையாளர் முருகையன் ஒன்றிய குழு துணைத் தலைவர் பானுசேகர் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் குத்துவிளக்கி ஏற்றி துவக்கி வைத்தார்கள்.மாற்றுத்திறானாளி மாணவர்கள் மரக்-கன்றுகளை நட்டனர்.

    முகாமிற்கு, எலும்பு முறிவு மருத்துவர் அறிவழகன், காது மருத்துவர் ஜான்சிராணி, கண் மருத்துவர் பூபேஸ் தர்மேந்திரா, மனநல மருத்துவர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவ-ர்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐசக்ஞானராஜ் பாக்ய லெட்சுமி அபூர்வராணி கவிதா அறிவரசு தலைமை ஆசிறியர்கள் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    உணவினை கொள்ளிடம், ரோட்டரி சங்கம் சீர்காழி ரோட்டரி டெம்புள் டவுன் கொள்ளிடம் கண்காணிப்பாளர் இளங்காவன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சீர்காழி டெம்பிள்டன் ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறன்.

     குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் உணவு பொட்டலங்களை அதன் தலைவர் ஆறுமுகம் நிர்வாகிகள் துரை, மோகனசுந்தரம், ரவிச்சந்திரன் மலர் கண்ணன் உள்ளிட்டோர் வழங்கினர். 

    முகாமில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்துகொண்ட 124 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

    இறுதியாக பிசியோதெரபி இயன்முறை மருத்துவர் மலர்கண்ணன் நன்றி கூறினார்.
    விழுப்புரம்& நாகை சாலை விரிவாக்க பணிக்காக பழமையான கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் காத்திருப்பு கிராமத்தில் அமைந்துள்ள சின்னந்தி மாரியம்மன் கோவில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. விழுப்புரம் &நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இந்த கோவில் அமைந்துள்ள இடம் கிராமவாசிகளின் கடும் எதிர்ப்பிற்கிடையே கையகப்படுத்தப்பட்டது.

    இதற்கான இழப்பீட்டு தொகை கடந்த மாதம் சின்னந்தி மாரியம்மன் பெயரில் திருவெண்காடு உள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதோடு இதற்கான காசோலை புத்தகம் கோயில் தக்கார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளதாக கிராமமக்களால் கூறப்படு-கிறது.

    கோயிலை அகற்றக் கூடாது என கிராமமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள் பல்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதிகாரி-களிடமும் கோரிக்கையாக முன்வைத்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அழுத்தத்தால் உடனடியாக கோயிலை இடிக்க முயற்சி செய்வதாக கிராமத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
     
    புதிதாக வேறு இடத்தில் கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தாலும் புதிதாக கோயில் கட்டுவதற்கு வந்துள்ள இழப்பீட்டு தொகையை கட்டுமானப்-பணிகளுக்கு தரமறுக்கும் அதிகாரிகளை கண்டித்தும், கோயிலை இடிக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தினை கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் ஒன்று கூடி அறிவித்தனர்.

    இதனிடையே சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு சீர்காழி தாசில்தார் அழைப்பின்பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், விஎச்பி பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் திருக்கோயில் உபயதாரர்கள் வழிபாட்டுகாரர்கள் குலதெய்வ காரர்கள், கிராமத்தினர் பங்கேற்றனர். 

    கூட்டத்தில் புதிய கோயில் கட்டுவது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அனுமதி பெற்று 15 தினங்களில் அறிவிக்கப்-படும்,எனவும், டெண்டர் விடப்பட்டு பின்னர் கோயில் உள்ள சுவாமி சிலை அப்புறப்படுத்தப்படும் எனவும் அதுவரையில் கோயில் சாலை விரிவாக்கப் பணிக்காக இடிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது மேலும் சின்ன மாரியம்மன் பெயரில் உள்ள வங்கிகணக்கு பரிவர்த்தனை பெற்று செயல் அலுவலர் கிராம மக்களிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது இதனை அடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
    மயிலாடுதுறையில் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு பற்றிநகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை செயின் பால்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய

    வாழ்க்கை வரலாறு குறித்து நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ-மாணவிகள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்-கையை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நகரும் புகைப்படக்

    கண்காட்சி மயிலாடுதுறை செயின் பால்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டு தெடர்ந்து மயிலாடுதுறை டி.ஜி.என் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட

    பல்வேறு பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும்.தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்-பட்டுள்ளது. இதன்மூலம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சுதந்திர

    போராட்டம் குறித்து எளிய முறையில் விளக்கப்படும்.
     
    முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்ப ரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்-காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளஅவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின்சார்பில் கலெக்டர்

    லலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ராஜகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர்-செல்வராஜ், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய தலைவர் காமாட்சி மூர்த்தி,

    பள்ளி தலைமை ஆசிரியர் லீமா ரோஸ், தமிழ்நாடு மாநில வ.உ.சி. பேரவை தலைவர் பண்ணை சொக்கலிங்கம் மற்றும் திரளான பள்ளி மாணவி-யர்கள் கலந்துக் கொண்டனர்.
    சீர்காழியில் சுதந்திரபவள விழா ஆண்டையொட்டி சிறப்பு அரங்க கூட்டம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழியில் சுதந்திரபவள விழா ஆண்டையொட்டி சுவாமி விவேகானந்தர் தேசியப் பேரவையின் சார்பில் சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் சிறப்பு அரங்க கூட்டம் நடந்தது. 

    சுதந்திர போராட்ட வீரர், புரட்சியாளர் நீலகண்ட பிரம்மச்சாரியின் பேரன் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கடவாசல் ரமணன், விஸ்வ ஹிந்து

    பரிஷத் தமிழ்நாடு மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுவாமி விவேகானந்தர் தேசியப் பேரவையின் தலைவரும், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளருமான கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தொடக்க உரையாற்றினார். 

    பாரதிய பண்பாட்டு பேரவையின் தலைவர் எம்.ஜி.பி.எஸ்.மணியன் , சுதந்திர போராட்ட வரலாறு குறித்தும், வீரர்களின் தியாகம் மற்றும் தற்போதைய பாரதத்தின் நிலை குறித்தும் விளக்கி

     சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி, தமிழ்நாடு பிராமணர் சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி, இந்து புரட்சி முன்னணி, பூசாரிகள் பேரவை நிர்வாகிகளும்

    கல்வியாளர்கள்,  ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

    ×