search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமி விவேகானந்தர்"

    • மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
    • பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கலாச்சார வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    சுவாமி விவேகானந்தர் ஒரு பிரபல ஆன்மீகத் தலைவர், இந்து துறவி, தத்துவ வாதி, எழுத்தாளர். 1863-இல் நரேந்திரநாத் தத்தாவாகப் பிறந்த விவேகானந்தர், பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மாணவராகவும், வேதாந்தம் மற்றும் யோகா போன்ற இந்தியக் கருத்துகளின் உலகளாவிய செய்தித் தொடர்பாளராகவும் ஆனார். சுவாமி விவேகானந்தர் 19 ஆம் நூற்றாண்டில் கொல்கத்தாவில் தனது குருவின் போதனைகளின் அடிப்படையில் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

    ராமகிருஷ்ணா மிஷன் என்று அழைக்கப்படும் ஆன்மீக இயக்கம், வேதாந்தத்தின் பண்டைய இந்து தத்துவத்தின் அடிப்படையில் நடைபெற்றது. இந்தியா ,1984 ஆம் ஆண்டு விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்தது, அதன்பிறகு ஜனவரி 12, 1985 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. விவேகானந்தரின் தத்துவம் மற்றும் அவர் வாழ்ந்த நாட்களில் செய்த செயல், பிரசாரம், கொள்கைகள் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் என்று அரசாங்கம் அவர் பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்தது.

    பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் போது, விவேகானந்தர் தற்கால இந்து மதத்தை மீண்டும் கொண்டு வர உதவியதற்காகவும், தேசியவாத உணர்வை ஊக்குவிப்பதற்காகவும் புகழ் பெற்றார். அவர் 1893 இல் சிகாகோவில் தனது புகழ்பெற்ற உரைக்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். அங்கும் அவர் மேற்கத்திய உலகிற்கு இந்து மதத்தை அறிமுகப்படுத்தினார். சிகாகோவில் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது, அவர் பார்வையாளர்களை "அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள்" என்று குறிப்பிட்டார். இது இந்திய கலாச்சாரத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்வதில் ஒரு முக்கியமான தருணமாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் ஜூலை 4, 1902 இல் இறந்தார்.

    விவேகானந்தர் தனது புத்தகத்தில் "இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது" என்று குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திர போஸ் விவேகானந்தரை "நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என்று குறிக்கிறார் மற்றும் மகாத்மா காந்தி விவேகானந்தரின் புத்தகங்களைப் படித்த பிறகு, நாட்டின் மீதான அன்பு அவருக்கு ஆயிரம் மடங்கு வளர்ந்ததாகக் கூறுகிறார்.


    இந்த நாளில் சுவாரஸ்யமான உரைகள், இசை நிகழ்ச்சிகள் முதல் தகவல் கருத்தரங்குகள் மற்றும் மாணவர் மாநாடுகள் வரை நாடு முழுவதும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. யோகா பயிற்சி, விளக்கக்காட்சிகள் மற்றும் எழுத்துப் போட்டிகள் போன்ற கல்வி கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் இளம் மனங்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்த நடைபெறுகிறது. இன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் நாட்டு இளைஞர்களிடையே உரையாற்றுவார். இந்த ஆண்டின் ஐந்து நாள் திருவிழாவின் கருப்பொருள் "இளைஞர்களால், இளைஞர்களுக்காக" என்பதே, இதில் பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கலாச்சார வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும்.
    • இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது.

    சென்னை:

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ந்தேதி தேசிய இளைஞர் நாள் என்றும் விவேகானந்தர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    • சுவாமி விவேகானந்தர் உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.
    • காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்.

    சென்னை :

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இந்திய தேசியவாதத்தின் உச்சபட்ச அடையாளமாகவும், இளைஞர்களுக்கு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய உத்வேகமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தர், உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.

    அவருடனான தொடர்பை எந்தளவுக்கு அதிகமாக கொள்கிறீர்களோ அந்தளவுக்கு, சுயத்துக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டிய பணிகள் மூலம் தேசத்துக்கான கடமைகளை ஆற்றுவதில் நீங்கள் அதிக உற்சாகம் பெறுவீர்கள்.

    காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்" என கூறியுள்ளார்.

    • இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரங்களை உலக அரங்கில் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று. இதனைத் தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரங்களை உலக அரங்கில் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர். முழு ஆற்றல் மற்றும் சுறுசுறுப்புபான சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்குவிக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி வருடந்தோறும் நடத்தப்படுகிறது. உலகின் பல் இடங்களில் இருந்து இளைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.

    • 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அன்ன பூஜை நடத்தப்பட்டது.
    • திரளான பெண்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி இன்று காலை கன்னியாகுமரியில் அரிசியை மலைபோல் குவித்து வைத்து அன்ன பூஜை நடந்தது.இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    "வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 120-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் இன்று காலை அன்ன பூஜை நடந்தது.

    இதையொட்டி காலை 10 மணிக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட21டன்அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலேஅன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்துமலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, மற்றும்விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுஇருந்தது.

    இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பத்மாவதி ஜெயராமன்,

    அகிலாண்டேஸ்வரி சிவசந்திர கணேஷ், காந்தா பாய் லலித்குமார், கௌரி ராஜசேகர், அய்யம்மாள் மாரியப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி அன்னபூஜையைத் தொடங்கி வைத்தனர். கேந்திர சகோதரி குமாரி ராதா தேவி ஐக்கிய மந்திரம் பாடினார்.

    விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வரவேற்று பேசினார். கேந்திர சகோதரி சாந்தி அன்னபூர்ண ஸ்தோத்திரம் பாடினார். கேந்திர சகோதரிலீலா பகவத் கீதையை தமிழில்பாடினார். பின்னர் அனைவரும் இணைந்து பகவத் கீதையை சமஸ்கிருதத்தில் பாடினார்கள்.

    கேந்திர அன்பர் இந்திராணி மங்கள ஆரத்தி காட்டினார். அதன்பிறகு அன்ன பூஜை அரிசியை அன்னையா பாண்டியன், மாது ஜி பட்டேல், பாபு ஆகியோர் விவேகானந்தகேந்திர துணைத் தலைவர் நிவேதிதாவிடம் வழங்கினார்கள்.

    வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச்சேர்ந்த சுவாமி சைதன்யானந்தாஜி மகராஜ், விவேகானந்த கேந்திர மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆசிரியரை வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்பட்டது.

    முடிவில் விவேகானந்த கேந்திர ஊழியர் பரமகுரு நன்றி கூறினார்.

    இந்த அன்ன பூஜை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    இந்த அன்னபூஜைக்காக குமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து 21 டன் அரிசி சேகரிக்கப்பட்டது.

    ×