search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swami Vivekananda"

    • சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • சமூகத்தை பிளவுபடுத்துவது பாஜகவால் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை.

    லக்னோ:

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,

    "சமூகத்தை பிளவுபடுத்துவது பாஜகவால் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை. பாஜகவின் பாதை சகிப்புத்தன்மையும் அல்ல, உலகளாவிய அங்கீகாரமும் அல்ல.

    இன்று சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும்போது, அவர் காட்டிய பாதையில் செல்ல உறுதியேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரங்களை உலக அரங்கில் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று. இதனைத் தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரங்களை உலக அரங்கில் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர். முழு ஆற்றல் மற்றும் சுறுசுறுப்புபான சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்குவிக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி வருடந்தோறும் நடத்தப்படுகிறது. உலகின் பல் இடங்களில் இருந்து இளைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.

    ×