என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
சீர்காழியில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காஅலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம்
நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இராமபத்ரன், கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் 7வது ஊதிய குழு அறிக்கையில்
கொடுக்கப்பட்டுள்ள சத்துணவு அங்கன்வாடி, ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.7, 850 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாநில அளவில் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மனுக்களை தீர்வு செய்து புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வயது வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்
எழுப்பினர். இதில் நூற்-றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பிற்பகல் வரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
Next Story






