என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் பன்றி வளர்போர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    X
    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் பன்றி வளர்போர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    பன்றி வளர்ப்போர் 7 நாட்களில் பன்றிகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை - நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

    சீர்காழியில் பன்றி வளர்ப்போர் 7 நாட்களில் பன்றிகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் பன்றி வளர்போர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபர-மேஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி

    ஆணையர் (பொ) இப்ராஹிம், மேலாளர் காதர்கான், வருவாய்-ஆய்வாளர் ராஜகணேஷ், சுகாதா-ரஆய்வாளர் பிச்சமுத்து முன்னிலை வகித்தனர். களபணியாளர் சீதாலெட்சுமி வரவேற்றார்.

    கூட்டத்தில் சீர்காழி நகரில் பன்றிவளர்போர்கள் பன்றிகளை திரியவிடுவதால் வாகனவிபத்துக்களும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அதனால் பன்றி வளர்போர், தாங்கள் வளர்க்கும் பன்றிகளை

    அப்புறப்படுத்தவேண்டும் இல்லை-யென்றால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தநவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. 

    இதில் பணிதளமேற்பார்வையாளர் பாலசுப்-பிரமணியன், காசாளர் சார்லஸ் கலந்துக்கொண்டனர்.
    Next Story
    ×