search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யோகாவில் உலக சாதனை முயற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு.
    X
    யோகாவில் உலக சாதனை முயற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு.

    யோகாவில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை

    சீர்காழி அருகே காவிரிப்பூம்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகள் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளனர். அவர்களை பாராட்டி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவிரிப்பூம்பட்டிணம் மீனவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி

    பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் மாணவ, மாணவிகள் இணைந்து யோகாவில் தேசிய சாதனை நிகழ்த்தும் விழா இன்று நடைபெற்றது.

    பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், பூம்புகார் கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற சாதனை முயற்சியை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின்

    நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆய்வு செய்து ஊக்கப்-படுத்தினர். இப்பள்ளியை சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக 100 மீட்டர் நீளத்திற்கு இணைந்து டிராகன் வடிவில் யோகா

    சனத்தில் புஜங்காசனம் செய்து 12 நிமிடங்கள் 12 வினாடிகள் அசைவின்றி தொடர்ந்தனர்.5 நிமிடங்கள் செய்தாலே தேசிய சாதனையாக அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் 12 நிமிடங்கள் 12 வினாடிகள்

    யோகாசனத்தை தொடர்ந்த மாணவர்களின் சாதனையை மாபெரும் தேசிய சாதனையாக அங்கீகரித்த ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் சான்றிதழ்கள் மற்றும் அனைத்து

    மாணவ, மாணவி-களுக்கும் பதக்கங்களும் வழங்கி பாராட்டினர்.விழாவில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன்,

    தலைமை ஆசிரியை செல்வாம்பிகை மற்றும் கல்வி துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினர். ஏற்பாடுகளை பூம்புகார் கிராம 

    பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×