என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் லலிதா.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் நிவாரணம் பெற மனு செய்யலாம் - கலெக்டர் தகவல்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் நிவாரணம் பெற மனு செய்யலாம் என மயிலாடுதுறை கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைதொகை வழங்குவதற்கு என்ற இணை-யதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில்
அமைக்கப்பட்டு உள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்-கப்பட்டு வருகிறது. இதுவரை 791 மனுக்கள் பெறப்பட்டு 597 இனங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை
வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 155 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 20-ந் தேதி வழங்கிய
தீர்ப்பில், 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.5.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்பிக்க வேண்டும்.
20&3&2022 முதல் ஏற்படும் கோவிட்&19 இறப்பு-களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்பிக்க வேண்டும்.
சமர்பிக்க மனுக்கள் மீது சம்பந்தபட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள கால கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்பிக்க இயலாதவர்கள்
அது குறித்து மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலு-லரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பெறப்படும் மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
எனவே கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்-பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டு-தல்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






