search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார விழா நடைபெற்றது.
    X
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார விழா நடைபெற்றது.

    அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார விழா

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார திருவிழா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான  அபிராமி உடனாகிய அமிர்த-கடேஷ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு

      காலசம்ஹார திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்-துடன் தொடங்கி தினமும் வீதி உலா நிகழ்ச்சி

     நடைப்பெற்று வந்தன.விழாவில் நேற்று காலசம்ஹார திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வானது  சிவபக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16 ல் முடிவடைந்ததை தொடர்ந்து மார்க்கண்டேயரின் 

    உயிரை பறிக்க எமன் வந்தார். மார்க்கண்டேயர் 107 சிவாலயங்களை வணங்கி விட்டு 108 வதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது மார்க்கண்டேயர்

    சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கண்டேயரை நோக்கி எமதர்மன் பாசக்கயிறை வீசும் பொழுது, அது அவர் மீது மட்டும்

    விழாமல், சிவலிங்கத்தின் மேலும் விழுந்தது. உடனே கடும் கோபத்துடன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவ பெருமான் எமனை எட்டி உதைத்து, தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். 

    இதன் மூலம் சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என அழைக்கப்படுகிறார். அப்பொழுது மார்க்கண்-டேயருக்கு என்றும் பதினா-றாக இருக்க அருள்பாலித்தார்.இந்த நிலையில் 6ஆம் நாள்

    நிகழ்ச்சியாக சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து தருமபுர ஆதினம் மாசிலாமணி தேசிக

     ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காலனை வதம் செய்யும் நிகழ்சியான எமசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    இதில் தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் அமிர்த விஜயகுமார், செம்பனார்கோயில் ஒன்றிய குழுத் தலைவர் துணைத் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், 

    வார்டு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட  திரளான பக்தர்கள் கலந்து தொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×