என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில் பயனாளி ஒருவருக்கு தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
    X
    சீர்காழியில் பயனாளி ஒருவருக்கு தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கஜானா காலி அமைச்சர் குற்றச்சாட்டு

    அ.தி.-மு.க ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து சென்றுவிட்டதாக அமைச்சர் மெய்யநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    சீர்காழி:

    சீர்காழியில் சமூக நலத்துறையின் சார்பில் சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த 578 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் தங்கம் வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

    எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா.முருகன், தாசில்தார் செந்தில்குமார், ஒன்றியக்குழு தலைவர்கள் கமலஜோதிதேவேந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மெய்யனாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தினை வழங்கி பேசுகையில், தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக நீதிக்கான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். கடந்த ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து வைத்து விட்டுசென்றனர். 4 லட்சம் கோடி கடன் வாங்கி அதையும் முறையாக செலவிடாமல் முறைகேடு செய்துவிட்டனர்.

    திமுக அரசு கடந்த ஆண்டு மே 7ம் தேதி கடுமையான கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் பொறுப்பேற்று பல சவால்களை சமாளித்து முன் களப்பணியாளராக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு 10 மாத காலத்தில் தமிழகத்தை கடன் சுமையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுத்து முன்மாதிரியாக ஆட்சிபுரிந்து வருகிறார். வேளாண் துறைக்கு 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தனி நிதிநிலை அறிக்கை அளித்து சாதனை படைத்து விவசாயிகளின் நலன் காத்துள்ளார். அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்று திராவிட மாடல் ஆட்சியை திறம்பட செயல்படுத்தி வருகிறார் என்றார்.

    விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், ரெஜினா ராணி, அருள்மொழி (ஊராட்சிகள்), சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்க்கா பரமேஸ்வரி ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி, திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், மலர்விழி பங்கேற்றனர்.
    Next Story
    ×