என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு நிலைய கட்டிடத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அடிக்கல்
ரூ.2.75 கோடியில் தீயணைப்பு நிலைய கட்டிடம்
சீர்காழி அருகே மணிக்கிராமத்தில் ரூ.2.75 கோடியில் தீயணைப்பு நிலைய கட்டிடத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் அப்பகுதிக்கான தீயணைப்பு நிலைய கட்டிடம் வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. பூம்புகார் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டி பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருவெண்காடு அருகே மணிக்கிராமத்தில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதீப்பிட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து நடைபெற்ற விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு, புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், சீர்காழி ஒன்றியக் குழத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சித் துணைத் தலைவர் அப்துல் வகாப், பூம்புகார் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story