என் மலர்tooltip icon

    மதுரை

    • மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.
    • சூரியஒளி மின் சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைப்பதன் மூலமாக வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் கருத்தபிள்ளையூரைச் சேர்ந்த வின்சென்ட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தியாளர் குழுத்தலைவராக உள்ளேன். கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்த மலை, செழிப்பான பல்லுயிர் மற்றும் பன்முக சொர்க்கமாக கருதப்படுகிறது. அங்கு பல்வேறு வகையான தாவரங்களும், விலங்கினங்களும் உள்ளன.

    இந்த மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். விவசாயத்துக்கு நீர்ப்பாசனமாக கடனா அணை, ராமநதி அணை, அனுமன் ஆறு, கருப்பா நதி ஆகியவற்றில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.

    வனப்பகுதியும், நிலப்பகுதியும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால், அடிக்கடி மனிதர்கள், வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் கரடி தாக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல தொடர்ந்து விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அளவில்லாதது.

    எனவே வனவிலங்குகளால் பாதிக்கப்படும் கிராமவாசிகளுக்கு அதிநவீன மருத்துவ உதவி, உரிய நிவாரணம் மற்றும் வனவிலங்குகளால் அழிக்கப்பட்ட மரங்கள், விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். கிராமப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வன எல்லைப்பகுதியில் சூரியஒளியில் இயங்கக்கூடிய மின்வேலிகளை அமைக்க வேண்டும். இதன்மூலம் வனவிலங்குகளால் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கடையம், குற்றாலம், கடையநல்லூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி வன எல்லைப்பகுதிகளில் சூரியஒளியில் இயங்கும் மின்வேலிகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சமீபத்தில் கூட மின்வேலிகளில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன என்றனர்.

    அதற்கு மனுதாரர் வக்கீல் ஆனந்த் ராஜேஷ் ஆஜராகி, சூரியஒளி மின் சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைப்பதன் மூலமாக வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும். சூரியஒளி மின்வேலியினால் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாது என தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் வனத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ரெயில்வே வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினர்.
    • தென் மாவட்டங்களில் இருந்து ஹைதராபாத்துக்கு தினசரி நேரடி ரெயில் சேவை இல்லை.

    மதுரை:

    மதுரையில் இன்று தென்னக ரெயில்வே வளர்ச்சி ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள் வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருது நகர்), ரவீந்திரநாத்குமார் (தேனி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), திருநாவுக்கரசர் (திருச்சி), வேலுச்சாமி (திண்டுக்கல்), சண்முக சுந்தரம் (பொள்ளாச்சி), தனுஷ்குமார் (தென்காசி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ரெயில்வே வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினர். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:

    மதுரை கோட்டத்தில் விருதுநகர்-செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றப்பட்டபோது, கரிவலம் வந்தநல்லூர், சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட 2 ரெயில் நிலையங்களையும் திறக்க வேண்டும்.

    தெற்கு ரெயில்வேயின் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு திருவனந்தபுரம் ரெயில்வே தேர்வு வாரியம் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணி முடிந்துவிட்டது. எனவே கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் வகையில் 4 ஜோடி ரெயில்களை இயக்க வேண்டும். அதனை சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடை ரோடு வழியாக இயக்கினால் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் அடைவர்.

    நெல்லை-மும்பை இடையே கொங்கன் ரெயில்வே வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்ற வேண்டும். சேரன்மகாதேவி, கல்லிடை க்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எனவே நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டையில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ரெயில் இயக்க வேண்டும்.

    சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சிவகாசியில் நிற்பது இல்லை. அங்கு நிறுத்தம் கொண்டு வர வேண்டும். நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்ல வேண்டும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இரு மார்க்கங்களிலும் திருமங்கலத்தில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும்.

    சென்னை-ஐதராபாத் இடையே 3 ஜோடி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து ஹைதராபாத்துக்கு தினசரி நேரடி ரெயில் சேவை இல்லை. எனவே மேற்கண்ட ரயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், மும்பை-புனே சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பயணிகளுக்கு சீசன் டிக்கெட் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே போல மதுரை-திருச்சி, மதுரை-நெல்லை ஆகிய பகுதிகளை சிறப்பு மண்டலமாக அறிவித்து, பயணிகளுக்கு சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். மேட்டுப்பாளையம்-மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாரம் 3 நாட்கள் ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவம் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்கள் எடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதன புண்ணிய சேத்திரம் ஆகும். அருளாளர் நால்வரால் பாடல் பெற்றது. மூர்த்தி, தலம், விருட்சம் என்ற பெருமை பெற்றது. புதனுக்கு அதிபதியாக விளங்கும் தலம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் நடக்கும் கோடை வசந்த உற்சவ திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திரம் அன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளு கிறார்கள். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்படும்.

    அதன் பிறகு மாலையில் சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோவிலுக்கு செல்கிறார்கள். சுவாமி சன்னதி, பேச்சி கால் மண்டபத்தில் பாத பிட்சாடனம், தீபாராதனை முடிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருள்வார்கள். அதன் பிறகு அங்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    கோடைகால வசந்த உற்சவ திருவிழா நடக்கும் மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில்வே ஆய்வு கூட்டத்தில் வைகோ எம்.பி. வலியுறுத்தினார்.
    • சென்னை- ஐதராபாத் இடையே 3 ஜோடி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    மதுரை

    மதுரையில் இன்று தென்னக ரெயில்வே வளர்ச்சி ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள் வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருது நகர்), ரவீந்திரநாத்குமார் (தேனி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), திருநாவுக்கரசர் (திருச்சி), வேலுச்சாமி (திண்டுக்கல்), சண்முக சுந்தரம் (பொள்ளாச்சி), தனுஷ்குமார் (தென்காசி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் நிறை வேற்றப்பட வேண்டிய ரெயில்வே வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினர். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:-

    மதுரை கோட்டத்தில் விருதுநகர்- செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றப்பட்டபோது, கரிவலம் வந்தநல்லூர், சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட 2 ரெயில் நிலை யங்களையும் திறக்க வேண்டும்.

    தெற்கு ரெயில்வேயின் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு திருவனந்தபுரம் ரெயில்வே தேர்வு வாரியம் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணி முடிந்துவிட்டது. எனவே கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் வகையில் 4 ஜோடி டெமு ரெயில்களை இயக்க வேண்டும். அதனை சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்கு ன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடை ரோடு வழியாக இயக்கினால் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் அடைவர்.

    நெல்லை-மும்பை இடையே கொங்கன் ரெயில்வே வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்ற வேண்டும். சேரன்மகாதேவி, கல்லிடை க்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ஆகிய பகுதி களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கி ன்றனர். எனவே நெல்லை யில் இருந்து தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டை யில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ரெயில் இயக்க வேண்டும்.

    சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சிவகாசியில் நிற்பது இல்லை. அங்கு நிறுத்தம் கொண்டு வர வேண்டும். நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்ல வேண்டும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இரு மார்க்கங்களிலும் திருமங்க லத்தில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும்.

    சென்னை- ஐதராபாத் இடையே 3 ஜோடி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தென் மாவட்டங்க ளில் இருந்து ஹைதரா பாத்துக்கு தினசரி நேரடி ரெயில் சேவை இல்லை. எனவே மேற்கண்ட ரயில் சேவையை நாகர்கோ வில் வரை நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து வெங்க டேசன் எம்.பி. பேசுகையில், மும்பை-புனே சிறப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டு, பயணிகளுக்கு சீசன் டிக்கெட் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே போல மதுரை- திருச்சி, மதுரை - நெல்லை ஆகிய பகுதி களை சிறப்பு மண்டலமாக அறிவித்து, பயணிகளுக்கு சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். மேட்டுப்பாளை யம்-மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாரம் 3 நாட்கள் ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    • போலி அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்சில் ஓராண்டாக இலவச பயணம் செய்தார்.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அரசு விரைவு பேருந்து டிக்கெட் பரிசோதகர் ராமகி ருஷ்ணன் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    திருமங்கலம் அப்பக்க ரையிலிருந்து இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் ராமகிருஷ்ணன் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது பஸ்சில் இருந்த 52 வயதுடைய நபர் தான் தேனி மாவட்டத்தில் கண்டக்டராக வேலை பார்ப்பதாகவும், எனவே டிக்கெட் எடுக்கவில்லை எனக்கூறி அடையாள அட்டையை காண்பி த்துள்ளார்.

    அதனை பார்த்த ராம கிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போலி அடையாள அட்டையை காண்பித்து இலவச பயணம் செய்தது மதுரை திருநகர் முல்லை நகரை சேர்ந்த பாண்டித்துரை எனவும், இவர் அப்பக்கரையில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் கடந்த ஓராண்டாக அரசு பஸ்சில் மோசடி செய்து இலவச பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • தென்னை சாகுபடி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்யலாம்.
    • மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவைக் கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 860 என்ற குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விலை ஆதார திட்டத்தின் கீழ் வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு உத்தர விட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுப்பு செய்தமைக்கான அசல் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நக லுடன் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இப்பொதே பதிவு செய்யலாம்.

    பதிவு செய்த விவசாயி களிடம் இருந்து மட்டுமே அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ள அரவைக் கொப்ப ரையில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு குறைவா கவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதத்திற்கு குறைவாகவும் சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சில்லுகள் 10 சதவீ தத்திற்கு குறைவாகவும், ஈரப்பதமானது 6 சதவீ தத்திற்கு குறைவா கவும்இருக்க வேண்டும்.

    ஆய்வகத் தரப்பரி சோதனை செய்து மேற்கண்ட நியாயமான சராசரி தரத்தின்படி உள்ள அரவைக் கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட அரவைக் கொப்பரைக்கான தொகை விவசாயியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கொள்முதல் பணியை செய்ய அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளதால், வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதி விவசாயிகள் விரைவாக செயல்பட்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட பொருள் தொடர்பாக வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் 87789 81501 என்ற எண்ணிலும், மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விவசாயிகள் தங்களது வட்டார விற்ப னைத்துறை உதவி வேளாண் அலுவலர்களிடமும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவ லத்திலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் நகரி சாலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான டெலிபோன் மற்றும் இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வந்தது. 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துவந்தனர். ஆனால் தற்போது இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்போது ஒரே ஒரு பணியாளர் வாரம் ஒருமுறை மட்டும் வந்து செல்லும் நிலை உள்ளது. மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பிஎஸ்என்எல் சிம்கார்டு மற்றும் இணைய இணைப்புகளை பெறுவது இப்பகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளது. இதனால் இந்த அலுவலகத்தை மீண்டும் முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இது குறித்து ஓய்வு பெற்ற தொலைதொடர்பு துறை பணியாளர் மகாராஜன் கூறுகையில், ஆரம்பகாலங்களில் லேண்ட்லைனுக்குரிய எக்ஸ்சேன்ச் மட்டுமே செயல்பட்டு வந்தநிலையில், பின்னர் 2ஜி மற்றும் 3ஜி அலைகற்றை கூடுதல் வசதிகள் பெற்று டவர் மூலம் தொலைதொடர்பு சேவையை அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனத்தினர் மற்றும் பயனீட்டாளர்கள் என பலர் பெற்று வந்தனர். இந்த நிலையில் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை உரிமம் கிடைக்காத நிலை தொடர்வதால் பயன்பாட்டாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்கி சோழவந்தான் பி.எஸ்.என்.எல். அலுவலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • முப்புலிசாமி கோவில் உற்சவத்தையொட்டி ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது.
    • அமைச்சர்கள் மூர்த்தி, பெரிய கருப்பன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்கின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் முப்புலி கோவில் உற்சவத்தை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நாளை நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள் களத்தில் இறங்குகின்றன. ஏராளமான மாடுபிடி வீரர்களும் மாடுகளைப் பிடிக்க முன்பதிவு செய்துள்ளனர்.

    நாளை (11-ந் தேதி) சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி.மூர்த்தி, கே. ஆர்.பெரிய கருப்பன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். முன்னதாக காளைக ளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே களத்தில் இறங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், டேபிள் சேர் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளும் வழங்கப்படு கிறது. பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடு களை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில தலைவர் பி.ராஜசே கரன் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சங்கையா சந்தி வீரப்பன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் சங்கையா சந்தி வீரப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மதுரை கணபதி பட்டர் தலைமையில் யாகவேள்வி நடந்தது. திருப்பணி கமிட்டி தலைவர் பிரசன்னா மூர்த்தி, செயலாளர் பரந்தாமன், பொருளாளர் நீதிவளவன், பரம்பரை பூசாரி தினகரன், ரமணன் ஆகியோர் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து சங்கையா சந்திவீரப்பன் உள்பட அங்காள பரமேசுவரி சங்கிலி கருப்பன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • ஆட்டோவில் 5 பேர் கும்பல் வந்தது. அவர்களைப் பார்த்ததும் வாசுதேவன் வீட்டுக்குள் ஓடி சென்று அறை கதவை மூடிக்கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை:

    மதுரை யாகப்பா நகர், மீனாட்சி தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது27).கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு அகன்சா ஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் வாசுதேவன் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஆட்டோவில் 5 பேர் கும்பல் வந்தது. அவர்களைப் பார்த்ததும் வாசுதேவன் வீட்டுக்குள் ஓடி சென்று அறை கதவை மூடிக்கொண்டார். இருந்த போதிலும் அந்த கும்பல் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வாசுதேவன் வீட்டின் வெளியே ஓடினார். அவர் அருகில் உள்ள லாண்டரி கடைக்கு சென்று ஒளிந்து கொண்டார்.

    ஆனால் அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேரும் கடைக்குள் புகுந்து கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த வாசுதேவனை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அண்ணாநகர் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

    வாசுதேவனின் தங்கை பூபதி. இவருக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். பூபதியின் நெருங்கிய நண்பர் அரவிந்தன். இவர் அடிக்கடி பூபதி வீட்டுக்கு வருவாராம். அப்போது அவர் பூபதியை கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி பூபதி தனது சகோதரர் வாசுதேவனிடம் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து வாசுதேவன், அரவிந்தனிடம் தட்டி கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வாசுதேவன் குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்ற அங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அங்கு சரியாக வேலை கிடைக்காததால் வாசுதேவன் மீண்டும் குடும்பத்துடன் மதுரைக்கு திரும்பினார்.

    இது அரவிந்தனுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர் வாசுதேவனை கொலை செய்ய திட்டமிட்டார். இதுபற்றி தனது நண்பர்கள் லப்பர் என்ற முத்துக்குமார், கணேண் பாண்டி, இந்து குமார் மற்றும் ஒருவருடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதன் பின்னர் 5 பேரும் சேர்ந்து நேற்று வாசுதேவனை கொலை செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் வாசுதேவனை கொலை செய்த கொலையாளிகள் லப்பர் என்ற முத்துக்குமார், கணேஷ்பாண்டி, இந்து குமார் ஆகிய 3 பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அரவிந்தன் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

    • தேவக்கோட்டை தாலுகா கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த கருப்பையா வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
    • வேலை செய்ததாக பெய்யாக கணக்கு காட்டி ஊராட்சி நிதியில் மோசடியில் செய்ததாக குற்றச்சாட்டு

    மதுரை:

    வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பெயர்களை சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக கண்டதேவி ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் கருப்பையா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் பெயர், தாயார், உடன்பிறந்தவர்கள் பெயர் மற்றும் வெளிநாட்டில் வாழும் நபர்கள், கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் நபர்களின் பெயர்களும் சேக்கப்பட்டுள்ளன. அவர்கள் வேலை செய்ததாக பெய்யாக கணக்கு காட்டி ஊராட்சி நிதியில் மோசடியில் செய்துள்ளனர். ஊராட்சி தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீடுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 12 வாரங்களுக்குள் சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு உத்தரவிட்டார். 

    • மதுரை கே.புதூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர்.
    • கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை:

    மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 46). இவர் கே.புதூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அழகுராஜாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்கொலைக்கு முயன்ற ஓட்டல் அதிபர் அழகுராஜா போலீசாரிடம் கூறுகையில், "நான் கே.புதூரில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் அபிவிருத்திக்காக மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரிடமும் ரூ.6 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கான வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்டி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் என்னிடம் மேலும் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் கந்து வட்டிக்கு ஈடாக, மதுரை கே.புதூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமார் மேற்பார்வையில் கே. புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுராஜாவிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×