என் மலர்
மதுரை
- மதுரையில் அரசு பஸ்சில் கைவரிசை காட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை வடக்கு மாசி வீதி நாகுபிள்ளை தோப்பை சேர்ந்தவர் காளியம்மாள்(வயது57). இவர் சம்பவத்தன்று அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர் காளியம்மாளின் மணிபர்சை திருட முயன்றார். உடனே சுதாரித்த அவர் அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அவர் திருச்சி ரெயில்வே ஸ்டேசன் கேட் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ராதேவி(50) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலைக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானார்.
- கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேலக்கால் டோக் நகரை சேர்ந்தவர் ரங்கதுரை. இவரது மகள் மீனாட்சி(வயது19). இவர் பி.பி.சாவடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு மீனாட்சி வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- ஜூன் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில்
- இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை
ஜூன் மாதத்தில் 2 வாரங்கள் கடந்த பின்னரும் மதுரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை 38-40 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. சில நேரங்களில் வெப்பம் குறை வாக இருந்தாலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது.
பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ரோட்டில் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளா கின்றனர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.பலர் காற்றுக்காக வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்திருக்கின்றனர். மேலும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை பலர் தவிர்த்து வருகின்றனர்.
காற்று வீசுவது குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலைகள் மற்றும் பாலங்களில் செல்லும்போது அனல் அடிக்கிறது. இந்த நிலையில் குளிர்பானங்கள், பழங்களின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.வழக்கமாக அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும். இந்தமுறை அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தும்கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
இந்த நிலையில் ஜூன் மாதத்தில் ஒரு வாரத்திற்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 வாரங்களை கடந்த பின்னரும் வெயில் அதிகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களில் ஒருமுறை மழை பெய்தும் கூட அது வெப்பத்தை தணிக்க போதுமானதாக இல்லை. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையுமா? என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- நடுரோட்டில் இளம்பெண் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தன்னுடன் வருமாறு அந்த வாலிபர் கட்டாயப்படுத்தினார்.
மதுரை
திண்டுக்கல்லை சேர்ந்தவர் மோனிஷா. இவர் மதுரையில் தங்கியிருந்து நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை மோனிஷா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார்.
லேடிடோக் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் மோனிஷா செல்ல மறுத்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மோனிஷாவை ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இதைப்பார்த்த வக்கீல் முத்துக்குமார் என்பவர் உடனடியாக தல்லாகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோனிஷாவையும், வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணை தாக்கியது கரூரை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது. இவர் மதுரையில் தங்கி மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். எதற்காக மணிகண்டன் மோனிஷாவை தாக்கினார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் மாயமானார்.
- சந்தனராஜ் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் 8-வது தெருவை சேர்ந்தவர் சந்தனராஜ். இவரது மகன் கார்த்திகேயன்(வயது24). இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் ஒத்தக்கடையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் சந்தனராஜ் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த கார்த்திகேயன் வெளியே செல்லவாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் சாலைகளை ஆக்கிரமித்து திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
மதுரை
மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் சில பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் பல்வேறு புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முக்கிய சாலைகளில் நடுரோட்டை ஆக்கிரமித்து மாடுகள் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது.
கே.கே.நகர், பைபாஸ்ரோடு, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி ரோடு, நத்தம் பாலத்தின் கீழ் பகுதி, கோரிப்பாளையம், அண்ணா பஸ் நிலையம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இந்த சாலைகளில் மாடுகள் நடுரோட்டை ஆக்கிரமித்து செல்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
வாகன நெரிசலை கண்டு கொள்ளாமல் மாடுகள் மெதுவாக நடந்து செல்கின்றன. சில இடங்களில் மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடப்பதையும் காண முடிகிறது. மாடுகள் மீது மோதி விடாமல் இருப்ப தற்காக வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில நேரங்களில் வாகன ஓட்டிகளும், ேபாக்குவரத்து போலீசாரும் மாடுகளை துரத்தி விட்டு வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து பாதிப்பு பற்றி உணராமல் மாடுகளின் உரிமையாளர்கள் அவிழ்த்து விடுகின்றனர்.
இது மாடுகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மாநகராட்சியில் இருந்து அவ்வப்போது மாடுகளை பிடித்து சென்று உரிமையாளர்களிடம் எச்சரித்து ஒப்படைக் கின்றனர். இருந்தபோதும் நடுரோட்டில் மாடுகள் திரிவது தொடர்கதையாக உள்ளது.
வாகன நெரிசலை குறைக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரியாமல் இருப்பதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமங்கலம் அருகே தொழிலாளி-இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள எட்டிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 56), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வீட்டுக்கு அருகே உள்ள ஆட்டுத் தொழுவத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சுந்தரத்தின் மகன் சுந்தரலிங்கம் கள்ளிக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர் அருகே உள்ள பேரையம்பட்டியை சேர்ந்த வர் பாண்டி. இவரது மகள் செல்வி (30). இவர் 9 ஆண்டு களுக்கு முன்பு மெய்ய னூத்தன்பட்டியை சேர்ந்த ராஜாராம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் ராஜா ராம் வௌயூர் சென்றி ருந்தபோது செல்வி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டி கொடுத்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- விளாச்சேரி பொம்மைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில்
- கொல்கத்தா காளி சிலைகளுக்கு ‘மவுசு’ அதிகரித்துள்ளது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொம்மை தயாரிப்பு தொழிலாளர்கள் உள்ளனர். சிறிய அளவிலான சிலைகளில் இருந்து மிகப்பெரிய அளவிலான சிலைகள் வரை செய்து விற்பனை செய்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகளின் போது பல்வேறு விதமான கொலு பொம்மைகள், புதிய சாமி சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளையும் விற்பனை செய்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பொம்மை விற்பனையாளர்கள் வந்து வாங்கி செல்கின்றனர். மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேரடியாக இந்த பகுதிக்கு வந்து பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகள், பொதுநல அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் காட்சிப் படுத்தப்படுகின்றன. அதனால் பொம்மை தேவை அதிகரித்துள்ளதுடன், வித்தியாசமான பொம்மை களையும் எதிர்ப்பார்க் கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு விற்பனையை அதிகரிப்பதற்காக விளாச்சேரியில் உள்ள தொழிலாளர்கள் கொல்கத்தாவில் இருந்து கொல்கத்தா காளி சிலைகள், விநாயகர் சிலைகள், சிறிய அளவிலான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சிலைகளையும் வாங்கி வந்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
கொல்கத்தா சிலை களுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு உள்ளதாக தொழிலா ளர்கள் தெரி விக்கின்றனர். இதுகுறித்து விளாச்சேரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற பொம்மை தொழிலாளி கூறியதாவது:-
விளாச்சேரியில் செய்யப்படும் பொம்மைகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் பலரும் கடைகள் வைத்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது வாடிக்கையாளர்கள் புது விதமான பொம்மைகளை எதிர்பார்க்கின்றனர்.
அதனை கருத்தில் கொண்டு நாங்களும் புது விதமான பொம்மைகளை தயாரிக்கிறோம். இருப்பி னும் பொம்மைகளின் தேவை அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்கிறோம்.
அந்த வகையில் கொல்கத்தா சிலைகளை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ரூ.35 முதல் ரூ.2500 வரையான சிலைகள் விற்பனைக்கு உள்ளன. இது தவிர துளசி மாடம், வாஸ்து பானைகள், மண்ணால் செய்யப்பட்ட அலங்கார கைவினைப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் விற்பனைக்கு வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை சமயநல்லூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- விக்கிரமங்கலத்தில் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
- செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் விக்கிரமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் பாண்டி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் உசிலம்பட்டி நகர்மன்ற உறுப்பினருமான பிரகதீஸ்வரன், அம்மா தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் நிலையரசி, மாவட்ட பேரவை தலைவர் செந்தில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தமிழ்ச்செல்வன், பால்சாமி, ராஜா, வாலிப்பாண்டி, மணிகண்டன், சீர்காளன், மலேசியா பாண்டியன், குணசேகர பாண்டியன், ராமகிருஷ்ணன், ரகுபதி, ஜெயக்கொடி, பெரியகருப்பன், மணிமாறன், முத்தையா, பிரபு, பாலசுப்பிரமணியன் மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடப்பட்டது.
- திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்ைத சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கோமதியம்மாள் (வயது 73). இவர் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது கார் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர், கோமதியம்மாளிடம் அவரது மகனை தனக்கு தெரியும் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். அவருக்கு மத்திய அரசு திட்டத்தில் பணம் பெற்று தருவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.
பின்னர் கோமதியம்மாளை காரில் அழைத்து சென்றார். காரை ஒதுக்குப்புறமாக நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், அதற்கு நகை, செல்போனை தனியாக வைத்து விடுங்கள் எனவும் அந்த நபர் கூறி உள்ளார்.
அதை நம்பி நகை, செல்போன், வங்கி புத்தகம் ஆகியவற்றை காரில் வைத்து விட்டு வெளியே போட்டோ எடுப்பதற்காக அவர் வந்தார். ஆனால் அவரை தனியே விட்டு விட்டு அந்த நபர் காரில் ஏறி தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து கோமதியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சோழவந்தான் அருகே காடுபட்டியில் ஊராட்சி செயலக கட்டுமான பணி தொடக்கப்பட்டது.
- தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊராட்சி வளாக கட்டுமான பணிகள் தொடங்கியது.
இதில் பி.டி.ஓ. கதிரவன், உதவிப் பொறியாளர் பூம்பாண்டி, வி.ஏ.ஓ., மணிவேல், ஊரா.சி தலைவர் ஆனந்தன்.செயலர் ஓய்யணன். பணியாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் போலீசார் காடுபட்டியில் பயன்பாடின்றி இருந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டிடங்களை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.






