search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜூன் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில்
    X

    ஜூன் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில்

    • ஜூன் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில்
    • இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    ஜூன் மாதத்தில் 2 வாரங்கள் கடந்த பின்னரும் மதுரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை 38-40 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. சில நேரங்களில் வெப்பம் குறை வாக இருந்தாலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது.

    பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ரோட்டில் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளா கின்றனர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.பலர் காற்றுக்காக வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்திருக்கின்றனர். மேலும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை பலர் தவிர்த்து வருகின்றனர்.

    காற்று வீசுவது குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலைகள் மற்றும் பாலங்களில் செல்லும்போது அனல் அடிக்கிறது. இந்த நிலையில் குளிர்பானங்கள், பழங்களின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.வழக்கமாக அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும். இந்தமுறை அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தும்கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

    இந்த நிலையில் ஜூன் மாதத்தில் ஒரு வாரத்திற்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 வாரங்களை கடந்த பின்னரும் வெயில் அதிகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களில் ஒருமுறை மழை பெய்தும் கூட அது வெப்பத்தை தணிக்க போதுமானதாக இல்லை. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையுமா? என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    Next Story
    ×