என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் நூதன நகை திருட்டு
- மதுரை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடப்பட்டது.
- திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்ைத சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கோமதியம்மாள் (வயது 73). இவர் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது கார் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர், கோமதியம்மாளிடம் அவரது மகனை தனக்கு தெரியும் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். அவருக்கு மத்திய அரசு திட்டத்தில் பணம் பெற்று தருவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.
பின்னர் கோமதியம்மாளை காரில் அழைத்து சென்றார். காரை ஒதுக்குப்புறமாக நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், அதற்கு நகை, செல்போனை தனியாக வைத்து விடுங்கள் எனவும் அந்த நபர் கூறி உள்ளார்.
அதை நம்பி நகை, செல்போன், வங்கி புத்தகம் ஆகியவற்றை காரில் வைத்து விட்டு வெளியே போட்டோ எடுப்பதற்காக அவர் வந்தார். ஆனால் அவரை தனியே விட்டு விட்டு அந்த நபர் காரில் ஏறி தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து கோமதியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






