என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் இளம்பெண் மீது சரமாரி தாக்குதல்
    X

    நடுரோட்டில் இளம்பெண் மீது சரமாரி தாக்குதல்

    • நடுரோட்டில் இளம்பெண் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தன்னுடன் வருமாறு அந்த வாலிபர் கட்டாயப்படுத்தினார்.

    மதுரை

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் மோனிஷா. இவர் மதுரையில் தங்கியிருந்து நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை மோனிஷா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார்.

    லேடிடோக் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் மோனிஷா செல்ல மறுத்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மோனிஷாவை ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இதைப்பார்த்த வக்கீல் முத்துக்குமார் என்பவர் உடனடியாக தல்லாகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோனிஷாவையும், வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணை தாக்கியது கரூரை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது. இவர் மதுரையில் தங்கி மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். எதற்காக மணிகண்டன் மோனிஷாவை தாக்கினார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×