அரசு பஸ்சில் கைவரிசை காட்டிய பெண் கைது

மதுரையில் அரசு பஸ்சில் கைவரிசை காட்டிய பெண் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ்சில் கைவரிசை காட்டிய பெண் கைது
Published on

மதுரை

மதுரை வடக்கு மாசி வீதி நாகுபிள்ளை தோப்பை சேர்ந்தவர் காளியம்மாள்(வயது57). இவர் சம்பவத்தன்று அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர் காளியம்மாளின் மணிபர்சை திருட முயன்றார். உடனே சுதாரித்த அவர் அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அவர் திருச்சி ரெயில்வே ஸ்டேசன் கேட் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ராதேவி(50) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com