என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • மாவட்டத்தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி யில் புறநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் ேசாலை மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் பேசினார். இதில் மாநில பொருளாதார பிரிவு தலைவரும், அன்னை பாத்திமா கல்லூரி சேர்மனுமான எம்.எஸ்.ஷா, முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், நிர்வாகிகள் காயத்திரி, ஞானேஸ்வரன், அர்ச்சனா தேவி, சுரேஷ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பயிற்சியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அதிபர் ஜான் பிரகாசம் வாழ்த்திப் பேசினார். கல்லூரி செயலர் அந்தோணிசாமி பேசுகையில் உடல்நலம், மனநலம் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல், உள்ளம், ஆன்மா இவைகளை பாதுகாக்கலாம் என்றார்.

    செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் புனிதா, செல்வக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை நடத்தினர். இதில் உடற்கல்வியியல் துறை, தேசிய மாணவர் படை மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • மதுரையில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை அடுத்துள்ள கே.வெள்ளா குளத்தை சேர்ந்தவர் கண் ணன். இவரது மகன் கதிரவன் (வயது 19). இவர் மதுரையில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடிந்து விட்டு ஊருக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ் நிலையத் தில் பஸ்சுக்காக கதிரவன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், அவசரமாக பேச வேண்டும் என்று கூறி, கதிரவனிடம் செல்போன் கேட்டுள்ளனர்.

    அதற்கு அவரும் தனது செல்போனை அவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கதிரவனிடம் செல்போனை வாங்கிய மர்ம நபர்கள், பேசுவது போல் நடித்து அங்கிருந்து ைநசாக செல்போனை திருப்பி கொடுக்காமல் சென்று விட்டனர். தன்னிடம் செல்போனை வாங்கிய நபர்களை கதிரவன் தேடினார்.

    ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. உதவி கேட்பது போல் நடித்து தனது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்த கதிரவன், அதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருமங்கலத்தை சேர்ந்த அறிவு (59) என்பவரை பணம் கேட்டு மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி யுள்ளனர். அது தொடர் பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வி. ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மணிமாலா (வயது 28).

    இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் 100 நாள் வேலைக்குச் சென்ற மணிமாலா வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி ஊராட்சி சின்ன ராமேஸ்வரம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் 2500 மரக் கன்றுகள் நடப்பட்டது. அலங்காநல்லூர் பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, அத்தி உள்ளிட்ட 20 வகையான மர கன்றுகள் நட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பி னர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, பேரூராட்சி தலை வர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரமேஷ்பாபு, சாலை ஆய்வாளர்கள் பாஸ்கர், பாண்டி கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில்கள் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
    • கீழக்குயில்குடி சமணர்மலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் கீழக்குயில்குடி சமணர்மலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து சோதனை செய்ததில் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த கீழக்குயில்குடியை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்த 40 மது பாட்டில்கள், விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. முருகனிடம் மதுபாட்டில்களை வாங்கி வருமாறு கூறிய அமிர்த வள்ளி (52) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    • வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சி சந்தைக்கு அடுத்தப்படியாக பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாத புரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமங்கலம் ஆட்டுச்சந்தை தொடங்கியது. வழக்கத்தை விட இன்று வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். இதனால் சந்தை கடுமையான கூட்டத்துடன் காணப்பட்டது.

    இதனால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. வழக்கமாக ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் இன்று கடும் கிராக்கி இருந்ததால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின. 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்க்கும் ஆடுகளை தவிர்த்து இந்திய அளவில் நாட்டினம் குறும்பை கொங்கு ஆந்திரா கிடா, ராஜஸ்தான் கிடா உள்ளிட்ட கிடாக்கள் இந்த சந்தையில் பார்க்கலாம். சண்டைக்கு வளர்க்கும் குட்டிகள் இங்கு கிடைக்கும். இந்த சந்தையில் கடந்த வாரத்தை விட விலை அதிகமாக இருந்தாலும், ஆடுகளின் வரத்து அதிகமாக உள்ளது.

    மேலும் வியாபாரிகளும் அதிகளவில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். இன்று அதிகப்படியாக 90 ஆயிரம் ரூபாய்க்கு கிடாக்கள் வந்துள்ளது. இது 60 கிலோ கறி உள்ளதாகும். ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள சண்டை செய்யும் கிடாக்கள் விற்பனைக்கு உள்ளது.

    பக்ரீத்திற்கு இதுபோல கிடாக்கள் வாங்குவதில் எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. திருமங்கலம் சந்தையை பொறுத்தவரை திருப்தி அடைந்து தான் சென்றுள்ளனர். ஆடுகளின் விலை வழக்கத்தை விட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக உள்ளது. தற்போது ஆட்டுக்கறி விலை 800 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் சந்தையில் ஒரு கிலோ 1,200 ரூபாய் கறி அளவுக்கு மதிப்பு கூடுதலாக விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
    • கோவிலானது பாதுகாப்பிற்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவிலை சுற்றிலும், மேற்பரப்பிலும் டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலுக்குள், மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மற்றும் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வெளியேயும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவில் கோபுரத்தின் மேற்பரப்பில் டிரோன் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் மேற்கு கோபுரம் எதிரே உள்ள கோவிலுக்கான பிர்லா விடுதியில் தங்கியிருந்தனர். நேற்று மதியம் அங்கிருந்தபடி அவர்கள் வைத்திருந்த டிரோனை இயக்கினர்.

    அந்த டிரோன் எதிர்பாராத விதமாக மேற்கு கோபுரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து அந்த டிரோன் பாகங்களை கைப்பற்றினர். பின்னர் அதனை இயக்கிய 2 பெண் என்ஜினீயர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவிலானது பாதுகாப்பிற்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவிலை சுற்றிலும், மேற்பரப்பிலும் டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி நீங்கள் எப்படி இயக்கினீர்கள்? போலீசாரிடம் அனுமதி வாங்கி இருக்கிறீர்களா? என அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதற்கு அவர்கள் தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது எனவும், 4 ஆண்டுகளாக பல்வேறு கோவில்களுக்கு சென்று டிரோன் மூலம் படம் எடுத்து வருவதாகவும், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் டிரோன் இயக்கியபோது அது தவறி விழுந்து நொறுங்கியதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் வைத்திருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களில் டிரோன் மூலம் எதுவும் பதிவு செய்துள்ளார்களா? என்று ஆய்வு செய்தனர்.

    அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரையில் அங்கன்வாடி மையத்துக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் பீரோ-நாற்காலி வழங்கினர்.
    • சதீஷ்குமார், சதீஷ், விஜய் விக்கி, தளபதி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    இளைய தளபதி நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஏழை, எளிய மக்க ளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தொகுதி, பகுதி வாரியா கவும், கிராம பகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு நல உதவிகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்.

    உசிலம்பட்டி நகர தலைவர் எஸ்.ஓ.பிம்.விஜய் ஏற்பாட்டில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா நடந்தது. தெற்கு மாவட்ட பொருளா ளர் விக்கி ஏற்பாட்டில் மதுரை வடக்கு மாசி வீதி யில் அன்னதானம் வழங்கப் பட்டது.

    திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பகுதியில் அமைந்துள்ள மனநிலை வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் கைத்தறிநகர் சூர்யா விஜய் ஏற்பாட்டில் அன்னதான விழா நடந்தது.

    மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி தலைமையில் மதுரை மாவட்டம் கொடிமங்கலம் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் படித்து வரும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

    மேலும் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான பீரோ மற்றும் நாற்காலி களையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சி யில் நிர்வாகிகள் ஷாம், திலகர், சதீஷ்குமார், சதீஷ், விஜய் விக்கி, தளபதி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை வந்த வடமாநில தம்பதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் செல்ல உள்ளோம் என்றனர்.

    மதுரை

    மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோகித். இவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இருவரும் உலக அமைதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.

    மராட்டிய மாநிலத்தில் தொடங்கிய இவர்களது சைக்கிள் பயணம் கர்நாடகா வழியாக தமிழகத்தை வந்தடைந்தது. கோவைக்கு வந்த ரோகித்-அஞ்சலி அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சென்றனர். பின்னர் தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக மதுரை வந்தடைந்தனர்.

    காந்தி மியூசியத்தில் அவர்களுக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மற்றும் காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்று மாலை அணிவித்தனர். தம்பதிக்கு மகாத்மா காந்தியின் சுய சரிதை புத்தகம் வழங்கி கவுரவித்தனர்.

    இது குறித்து ரோகித்-அஞ்சலி தம்பதி கூறுகையில், மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கி னோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிள் ஓட்டியப்படியே செல்ல திட்டமிட்டுள்ளோம். லடாக்கில் எங்கள் பயணத்தை முடிக்க உள்ளோம்.

    ராமேசுவரம், தனுஷ்கோடி வரை சென்று விட்டு மீண்டும் மதுரை வந்துள்ளோம். ராஜபா ளையம், தென்காசி வழியாக கேரளா சென்று அங்கிருந்து மீண்டும் தமிழகம் வழியாக தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் செல்ல உள்ளோம் என்றனர்.

    • கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் நாளை (23-ந்தேதி) கூட்டுறவுத்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொட்டாம்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதால், கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, அன்று மாலை 3 மணியளவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

    • ரெயில்வே தண்டவாளத்தை கடக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங் குன்றத்தில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நகரின் இரு பகுதிகளிலும் ரெயில்வே தண்டவாளங்கள் அமைந்திருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதன் அடிப்படையில் இரு பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி அருகே அமைக்க ப்பட்ட மேம்பாலத்தின் அருகே பொதுமக்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை சேர்த்து அமைக்கப்பட்டது.

    அதே சமயத்தில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்ப டவில்லை. இதனால் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் மேம்பாலத்திலும், நடந்து செல்பவர்கள் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்தும் சென்று வந்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பள்ளிகள் பெரும்பா லானவை திருநகரில் இருப்பதால் திருப்பரங் குன்றம், நிலையூர், கைத்தறி நகர் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் தண்டவா ளத்தை கடந்தே சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே தண்டவாளத்தில் இரு பகுதிகளிலும் ரெயில்வே நிர்வாகம் தடுப்பு வேலி அமைத்தது. இதனால் நடந்து செல்ப வர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

    இது முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் சிரமமான சூழ்நிலை ஏற்படுத்தி வருகிறது. எனவே இப்பகுதியில் சுரங்கப்பாதை அல்லது ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் ரெயில்வே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ×