மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில்கள் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர். கீழக்குயில்குடி சமணர்மலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
Published on

மதுரை

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் கீழக்குயில்குடி சமணர்மலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து சோதனை செய்ததில் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த கீழக்குயில்குடியை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்த 40 மது பாட்டில்கள், விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. முருகனிடம் மதுபாட்டில்களை வாங்கி வருமாறு கூறிய அமிர்த வள்ளி (52) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com