search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Redressal day meeting"

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் நடைபெறுகிறது.
    • கூட்டமானது 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்,செப்.24-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி ( புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்காக குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.இதில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக வழங்கலாம்.

    எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் நாளை (23-ந்தேதி) கூட்டுறவுத்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொட்டாம்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதால், கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, அன்று மாலை 3 மணியளவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 484 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 484 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் ஒருவருக்கு நாடக உபகரணங்கள் வாங்குவதற்காக மாவட்ட கலெக்டர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.10,000- க்கான காசோலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,000 மதிப்புள்ள ஆன்ட்ராய்டு செல்போன்களையும் ஒரு காது கோளாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் காதொலி கருவி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி ஷெர்லி ஏஞ்சலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×