என் மலர்tooltip icon

    மதுரை

    • சோழவந்தான் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • உடற்கல்வி துறை ஆசிரியர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    சோழவந்தான்

    தென்மாநில சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேக் வாண்டோ போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அந்தமான் நிக்கோபார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பங்கு பெற்றன.

    3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மதுரை கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்று தமிழகத்தில் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அர்ஜுன், மிதுழ்செல்வன் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தேக் வாண்டோ பயிற்சியாளர் தேவா, உடற்கல்வி துறை ஆசிரியர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளை ஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஆலோசனையின்படி இன்று மதுரை திருப்பாலை குறிஞ்சி மகாலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக நீட்தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஜனாதிபதிக்கு தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கையெழுத்திட்டனர்

    இந்த கையெழுத்து இயக்கத்திற்கு இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலை மை வகித்தனர். தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் முன்னாள் எம்.பி., கம்பம் செல்வேந்திரன் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் பால சுப்பிர மணி யன், சோம சுந்தரபாண்டியன், நேரு பாண்டி, சசிகுமார், வீரராக வன், வாடிபட்டி பால் பாண்டி, சிறை செல் வன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் வைகை மருது, இளங்கோ, குமரேசன், மற்றும் கவுன் சிலர் ரோகினி பொம்மத் தேவன், பேரூ ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முன்னோட்ட மாநாடு நடந்தது.
    • அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் முத்துராஜா ஆகியோர் நல்லாட்சி குறித்து விளக்கமளித்தனர்.

    மதுரை

    மதுரை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுயநிதிப் பிரிவில் ஆட்சியின் புதிய முன்னு தாரணங்கள் என்னும் தலைப்பில் "முன்னோட்ட மாநாடு" நடைபெற்றது. கல்லூரி தலைவர் ராஜ கோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஐ.ஐ.பி.ஏ. துணை சேர்மன் ஞானபிரபாகரன் வைஸ் வரவேற்றார். கல்லூரி செயலாளர் விஜய ராகவன் தொடக்கவுரை யாற்றினார், கல்லூரித் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசினார். ஐ.ஐ.பி.ஏ. செயலாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தி னர்களை அறிமுகப் படுத்தினார். காந்தி கிராம உதவி பேராசிரியர் சவுந்தர பாண்டியன், அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் முத்துராஜா ஆகியோர் நல்லாட்சி குறித்து விளக்கமளித்தனர்.

    இவ்விழாவினை வணிக வியல் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் நாகசுவாதி ஏற்பாடு செய்தார். உதவிப் பேராசிரியர்கள் இளம் பிறை, சண்முகப் பிரியா, தேன்மொழி ஆகி யோர் விழாவினை ஒருங் கிணைத்தனர்.

    • மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • 250 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் யாதவா மகளிர் கலைக்கல்லூரி மற்றும் இந்திய பல் மருத்துவ சங்க மதுரை கிளை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து சிறப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமை மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் நடைபெற்ற பல் மருத்துவமுகாமில் 250 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • சட்டக்கல்லூரியில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்று கல்லூரி முதல்வரிடம் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மனு கொடுத்தனர்.
    • இந்து முன்ணணி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் பரமசிவம், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மதுரை

    மதுரை அரசு சட்டக் கல்லுரி வளாகத்தில் தி.மு.க. சட்டப்பிரிவு சார்பில் இன்று (21-ந்தேதி) கலைஞர் நூற்றாண்டுவிழா பேச்சுப்போட்டி, கருத்த ரங்கம் நடைபெறுகிறது.

    மதுரை மாநகர மாவட்ட பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு தலைவர் அய்யப்பராஜா தலைமை யில் சட்டக்கல்லூரி முதல்வர் குமரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை அரசு சட்டக்கல்லூரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியிருப்பது மாணவர்க ளிடையே பிரிவினையை ஏற்படுத்தும். இதுவரை சட்ட கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியது கிடையாது. தற்போது தி.மு.க.வுக்கு வழங்கப்பட்ட அனுமதியால் மாணவர்க ளிடையே அரசியல் மோதல் ஏற்பட வாயப்பு உள்ளது.

    எனவே தி.மு.க. சார்பில் நடத்தபட உள்ள பேச்சு போட்டி கருத்தரங்க விழாவுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாஜக வழக்கறிஞர் பிரிவு மதுரை மாநகர் தலைவர் அய்யப்பராஜா வுடன் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை த்தலைவர் ராமராஜ், இந்து முன்ணணி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் பரமசிவம், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) சுசிலா தெரிவித்தார்.

    மதுரை

    காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் வரிச்சியூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநிகா, முதல்பரிசும், தோப்பூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி தீப்தி 2-ம் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிஷிபா 3-ம் பரிசும் வென்றனர். தத்தனேரி, திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன்அழகர்சாமி, பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் கோகுல் ஆகியோர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு வென்றனர்.

    கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் மதுரை பாத்திமா கல்லூரி மாணவி ராஜேஸ்வரி முதல் பரிசும், மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி மங்கையர்க்கரசி 2-ம் பரிசும், கே.கே.நகர் வக்பு வாரியக் கல்லூரி மாணவன் இஸ்ஹாக் அகமது மூன்றாம் பரிசும் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் சங்கீதா வழங்குவார். இந்த தகவலை மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) சுசிலா தெரிவித்தார்.

    • மதுரை ஆட்டோ டிரைவர் படுகொலையில் சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சங்கு கண்ணனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு ஒரு கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    மதுரை

    மதுரை அருகே சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி என்பவரின் மகன் சங்குகண்ணன் (வயது23). இவர் ஆட்டோ டிரைவர் ஆவர். பெற்றோருடன் சிலைமான் சங்கையா கோவில் தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பாதியிலேயே எழுந்து சென்றார். அவர் அங்கிருந்து பொதுப் பணித்துறை கால்வாய் அருகே சென்ற போது அடையாளம் தெரி யாத கும்பல் ஒன்று சங்கு கண்ணனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சங்குக்கண்ணனை அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக 108 ஆம்புலன்சை வரவ ழைத்தனர்.

    ஆம்புலன்சில் இருந்த மருத்துவர்கள் பரிேசாதித்த போது சங்கு கண்ணன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சங்கு கண்ணனின் தந்தை அழகுபாண்டி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சங்குகண்ணனை கொலை செய்த கொலையாளிகளின் உருவங்கள் அதில் பதிவாகி இருந்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கீழடி சோனையார்கோவில்தெரு அய்யாச்சாமி மகன் முத்துபாலகிருஷ்ணன் (19), அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனி பிச்சைமணி மகன் அருண்குமார் (21), சோனையார் கோவில்தெரு முத்துசாமிமகன் சுபாஸ்சந்திரபோஸ் (23), கண்ணன் மகன் சுதாகர் (21), மேலத்தெரு சிதம்பரம் மகன் வீரமணி (20), சின்ன உடைப்பு ராமன்குளம் பாண்டி மகன் சுதன்ராஜ் (24) மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

    • தெற்குவாசல் நாடார் உறவின் முறை தலைவர் தொழிலதிபர் உத்தண்டன் காலமானார்/
    • இறுதி சடங்குகள் நாளை நடக்கிறது

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் உறவின் முறை தலைவரும், காமராஜர் அறப்பணிக்குழு தலைவரும், தொழிலதிபருமான கே.உத்தண்டன் இன்று (21-ந் தேதி) காலமானார். அவருக்கு வயது 84.

    மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல் ராஜ், உறவின் முறை பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், தெற்குவாசல் ஜமாத் நிர்வாகி கமர்தீன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    மறைந்த உத்தண்டன் இறுதிச் சடங்கு நாளை (22-ந் தேதி) நடை பெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • செல்லம்பட்டி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பாண்டி இல்ல விழா நாளை நடக்கிறது.
    • அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி மாயத்தேவர்- சோங்கம்மாள், விராலி மாயன்பட்டி சீனிபேயத் தேவர்- புஷ்பம் ஆசீர்வா தத்துடன் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் நல்லாசியுடன் கூட்டுறவு வங்கி தலைவரும் செல்லம் பட்டி ஒன்றிய அ.தி.மு.க இளைஞர் பாசறை செயலா ளர் வடக்கம்பட்டி பாண்டி-லெட்சுமி கயல்விழி ஆகி யோரின் இல்ல விழா சட்ட மன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மூனாண்டிபட்டி வி.கே.எஸ்.மஹாலில் நாளை நடக்கிறது.

    விழாவில் முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் மதுரை கிழக்கு மாவட்ட செய லாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் நீதிபதி மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர் கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • நீதிபதி மனுதாரர் தெரிவிக்கும் போலீஸ் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.
    • போலீஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யின் கேமரா பதிவு ஹார்ட்டிஸ்க் இல்லை என தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த நூர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் சையது இஸ்மாயில், இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான இவர் மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த எனது மகன் கடந்த மாதம் விடுமுறையில் மதுரை வந்தார்.

    கடந்த மாதம் 4-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மதுரை மாநகர போலீஸ் சிறப்பு பிரிவில் உள்ள சப்- இன்ஸ்பெக்டர் சிவா, போலீஸ்காரர் காமராஜ் உள்ளிட்ட சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து என் மகனை கைது செய்தனர்.

    எனது செல்போனையும் பறித்து சென்றனர். இதையடுத்து எனது மகனின் நண்பர்களான சேக் முகம்மது, விஜய், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசாரின் இந்த செயல், மனித உரிமை மீறலாகும்.

    எனவே எனது மகன் உள்ளிட்டவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது தொடர்பான விசாரணைக்காக, மதுரை மாநகர பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கரிமேடு போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது அலி ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மகன் உள்ளிட்டவர்களை போலீசார் சட்ட விரோதமாக தாக்கி உள்ளனர். அது சம்பந்தமான சாட்சிகளை விசாரிப்பதற்கு வசதியாக போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமராக்கள் பதிவு அவசியமாகிறது. இதை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

    அப்போது நீதிபதி மனுதாரர் தெரிவிக்கும் போலீஸ் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு போலீஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யின் கேமரா பதிவு ஹார்ட்டிஸ்க் இல்லை என தெரிவித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கூறுகையில், முறையாக சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் இருக்க வேண்டும். அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ள நிலையில் எவ்வாறு இது போன்று பதிலளிக்கிறீர்கள். அதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

    இதனைத் தொடர்ந்து, மதுரை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை மனுதாரர் கோரும் சம்பவ நாளன்று பதிவுகளை பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்கும்படியும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்

    • உத்தப்புரத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி அளிக்க கோரி வழக்கு டி.எஸ்.பி. பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உத்தப் புரத்தை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் பேரை யூர் அருகே உள்ள உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் வருகிற 24 முதல் 26-ந்தேதி வரை திருவிழா நடத்த திட்டமிட்டு, விழாக் குழு தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இரு சமூகத்திற்கு இடையே ஏற் பட்ட பிரச்சினை காரண மாக இந்தகோவிலில் திரு விழா நடைபெறவில்லை.

    மேலும் மற்றொரு சமூ கத்தை சேர்ந்த நபர்கள் சிலர், கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு, கோவிலில் திருவிழா நடக்க விடாமல் செய்தனர். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சம ரசம் செய்யப்பட்டது.

    சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு அக் டோபர் 24 முதல் 26-ந்தேதி வரை முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி கோரி உயர் அதிகாரிக ளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி அளித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப் போது வழக்கு குறித்து உசிலம்பட்டி டி.எஸ்.பி. பதி லளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிய சங்கு கண்ணன் சாப்பிட்ட பின்னர் வீட்டு முன்பு அமர்ந்திருந்தார்.
    • கொலை குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சிலை மான் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் சங்கு கண்ணன் (வயது 27). அதே பகுதியில் ஆட்டோ டிரைவாக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகாத சங்கு கண்ணன் தனது பெற்றோருடன் சிலைமான் சங்கையா கோவில் தெருவில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிய சங்கு கண்ணன் சாப்பிட்ட பின்னர் வீட்டு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்களது உடலில் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சங்கு கண்ணனை நோக்கி வந்தனர். உடனே அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள வீட்டிற்குள் ஓட முயன்றார்.

    ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சங்கு கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    உடனே மர்ம நபர்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கு கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த கொலை குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொழில் போட்டியில் சங்கு கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிலைமான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×