என் மலர்
நீங்கள் தேடியது "முன்னோட்ட மாநாடு"
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முன்னோட்ட மாநாடு நடந்தது.
- அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் முத்துராஜா ஆகியோர் நல்லாட்சி குறித்து விளக்கமளித்தனர்.
மதுரை
மதுரை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுயநிதிப் பிரிவில் ஆட்சியின் புதிய முன்னு தாரணங்கள் என்னும் தலைப்பில் "முன்னோட்ட மாநாடு" நடைபெற்றது. கல்லூரி தலைவர் ராஜ கோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐ.ஐ.பி.ஏ. துணை சேர்மன் ஞானபிரபாகரன் வைஸ் வரவேற்றார். கல்லூரி செயலாளர் விஜய ராகவன் தொடக்கவுரை யாற்றினார், கல்லூரித் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசினார். ஐ.ஐ.பி.ஏ. செயலாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தி னர்களை அறிமுகப் படுத்தினார். காந்தி கிராம உதவி பேராசிரியர் சவுந்தர பாண்டியன், அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் முத்துராஜா ஆகியோர் நல்லாட்சி குறித்து விளக்கமளித்தனர்.
இவ்விழாவினை வணிக வியல் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் நாகசுவாதி ஏற்பாடு செய்தார். உதவிப் பேராசிரியர்கள் இளம் பிறை, சண்முகப் பிரியா, தேன்மொழி ஆகி யோர் விழாவினை ஒருங் கிணைத்தனர்.






