என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர்கள் உள்பட 3 பேர் பலியான நிலையில், மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 64 வயது முதியவர், காய்ச்சல், மூச்சு திணறல், இருமலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த 16-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை இறந்தார். அதேபோல கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 32 வயது பெண், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் மூச்சு திணறல் காரணமாக கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 598 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 608 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

ஓசூரில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் பெயிண்டர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பெயிண்டர் குரு (வயது 22) என்பவர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 779 கனஅடி தண்ணீர் வந்தது. இதனிடையே அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரித்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 800 கனஅடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் கால்நடைகளை தென்பெண்ணையாற்றில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூளகிரி, ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் கோபசந்திரம் வனப்பகுதியில் யானைகள் ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் வராத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சானமாவு முதல் பீர்ஜேப்பள்ளி வரையில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.90 லட்சம் மதிப்பில் தொங்கும் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல தளி ஒன்றியம் உனிசேநத்தம் ஊராட்சி தேவர்பெட்டா வனப்பகுதியில் யானைகள் ஊருக்குள் வராத வகையில் தேவர்பெட்டா முதல் கங்கனப்பள்ளி வரை 4 கிலோ மீட்டர் தூரம் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்டள்ள சூரிய மின் வேலி, அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜவளகிரி ஊராட்சி காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் வனப்பகுதியில் சென்னமாளம் முதல் காடு சீவனப்பள்ளி வரை கம்பி வட வேலி, மூங்கில் வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் கலெக்டர் பார்வையிட்டார்.
மேலும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடிக்கும் சின்னையன் ஏரியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தளி ஒன்றியம் தொட்டமஞ்சி ஊராட்சி பிலிகுண்டு கிராமத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறை கேட்டார். அப்போது காவிரி ஆற்றில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். மேலும் அய்யூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் இருளர் இனமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டார். இந்த ஆய்வின் போது உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) ஜெகதீஸ் எஸ்.பகான், துணை கலெக்டர் அபிநயா, வன உயிரின காப்பாளர் சஞ்சீவ்குமார், உதவி கால்நடை டாக்டர் பிரகாஷ், வனச்சரகர்கள் ரவி, நாகராஜ், வனவர் செல்வராஜ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து மத்திகிரி மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, காவேரி வன உயிரின காப்பாளர் பிரபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் கலாவதி காவேரிப்பட்டணம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52). இவர் கல்வித்துறையில் கடந்த 23.08.1999 அன்று பணியில் சேர்ந்தார். அப்போது அவர் போலி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். தற்போது அவர் மிட்டஅள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது சான்றிதழ்களை கல்வி அதிகாரிகள் சரி பார்த்த போது அவை போலி சான்றிதழ்கள் என தெரிய வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மத்தூர் மற்றும் சாமல்பட்டி பகுதியில் 2 கல்லூரி மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் லோகவாணி (வயது 23). இவர் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் கல்பனா மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளை, அதே கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வரும் வெலகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பிதுரை(20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தனது மகளை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சாமல்பட்டி அடுத்த படவானூர்கேட் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஊத்தங்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சாமல்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை, அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்துள்ள குமார்(23) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தனது மகளை மீட்டுத்தர வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருப்பதி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருப்பதி வரவேற்றார்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பின் தலைவர் அமல்ராஜ், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க மாநில தலைவர் ராமர், மாநில ஒருங்கிணைப்பாளர் சர்தார், தூய்மை தொழிலாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், தூய்மை பணியாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தூய்மை காவலர்களுக்கு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட ரூ.1000-த்தை வழங்க வேண்டும். 2013-ம் ஆண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 1,400 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம், பணிகொடை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
கொரோனா காலத்தில் பணி செய்த தூய்மை பணியாளர்களுக்கு வருடத்திற்கு 2 செட் சீருடை, கையுறை, முக கவசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கலந்துகொண்டனர்.
காதல் தோல்வி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூர் கெலவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். காதல் தோல்வி காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
கேரளா மாநிலம் பெரவார் தாலுகா கோலம்பரா அருகே மாலூரை சேர்ந்தவர் கிஷோர். இவருடைய மகள் அழகுநந்தா (வயது 11). கிஷோர் குடும்பத்துடன் ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளி எழில் நகரில் வசித்து வந்தார்.
சிறுமி அழகுநந்தா கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வந்த சிறுமி அதிக நேரம் டி.வி. பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர், சாமல்பட்டி பகுதியில் 2 கல்லூரி மாணவிகள் கடத்தப்பட்டது குறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரைணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் லோகவாணி (வயது 23). இவர் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாயார் கல்பனா மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளை, அதே கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வரும் வெலகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பிதுரை(20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தனது மகளை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சாமல்பட்டி அடுத்த படவானூர்கேட் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஊத்தங்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சாமல்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை, அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்துள்ள குமார்(23) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தனது மகளை மீட்டுத்தர வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி நண்பர்கள் 2 பேர் பலியாகினர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 21). ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சத்தியமூர்த்தி (24). இவர் சில்லி சிக்கன் கடை நடத்தி வந்தார். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து சேலம் நோக்கி சென்றனர்.
அப்போது, ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது. இந்த விபத்தில் ராஜேசும், சத்தியமூர்த்தியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி அருகே கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர்.
ஓசூர்:
சென்னை பூந்தமல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு நேற்று முன்தினம் மதியம் 15 அட்டை பெட்டிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் நிறுவன செல்போன்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக கோவையை சேர்ந்த அருண் (26) என்பவர் உடன் வந்தார்.
இந்த கன்டெய்னர் லாரி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் மற்றொரு லாரியில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை திடீரென வழிமறித்தது. தொடர்ந்து அந்த கும்பல், டிரைவர்கள் சதீஷ்குமார், அருண் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் அவர்களது கை, கால்களை கட்டி சாலையோர புதரில் போட்டு விட்டு கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றது.
இந்த நிலையில் புதரில் கிடந்த டிரைவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டனர். இதையடுத்து டிரைவர்கள் 2 பேரும் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கன்டெய்னர் லாரியில் 15 பெட்டிகளில், 14,576 செல்போன்கள் இருந்ததாகவும், இவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்பதும், 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை வழிமறித்து கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து டிரைவர்கள் 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே செல்போன்களுடன் கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி, சூளகிரியை அடுத்த அழகுபாவி தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது லாரியில் செல்போன்கள் எதுவும் இல்லை என்பதும், அந்த கும்பல் அவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களுடன் சென்ற கன்டெய்னர் லாரியை சென்னையில் இருந்தே ஒரு லாரி பின் தொடர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பின்தொடர்ந்து வந்த லாரி போலியான பதிவு எண் கொண்டது என்பதும், போலி பதிவு எண் கொண்ட லாரி மத்திய பிரதேசத்தில் ஓடுவதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து 9 தனிப்படை போலீசார் செல்போன்களை கொள்ளை அடித்தவர்களை பிடிக்க மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.