என் மலர்
கிருஷ்ணகிரி
சூளகிரியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூளகிரி:
சூளகிரி ஒன்றியம் தோரிப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொத்தகோட்டா கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கடும் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராமமக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கிராமமக்கள் விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீரை கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கொத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சூளகிரியில், கிருஷ்ணகிரி சாலையில் உள்ள பழைய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, தாசில்தார் பூவிதன் மற்றும் அலுவலர்கள், போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் எங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நீண்ட விவாதத்திற்கு பிறகு, சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து, பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டனர். பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்வியில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த ஆண்டே மருத்துவ கல்வியில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முனிராவ், செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், செம்பட்டி சிவா, ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், அருண், தியாகு, பாக்கியராஜ், முத்துக்குமார், சிறுத்தை ராஜா, பவுன்ராஜ், மாவட்ட பொறுப்பாளர்கள் திராவிடராஜா, அசோகன், குபேந்திரன், வேங்கைவளவன், கிருஷ்ணமூர்த்தி, முரளி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சிங்காரப்பேட்டையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக விவசாயியிடம் ரூ.11 ஆயிரம் அபேஸ் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 56), விவசாயி. சம்பவத்தன்று சிங்காரப்பேட்டையில் உள்ள ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்த செல்வம், அங்கிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து கொடுத்து உதவுமாறு கேட்டார். அந்த நபர் ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகி பின்னர் பணம் இல்லை என்று கூறி விட்டு சென்றார். சிறிது நேரத்தில் செல்வத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 ஆயிரத்து 200-ஐ அந்த மர்ம நபர் அபேஸ் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் (52) என்பவர் விவசாயியிடம் 11 ஆயிரத்து 200-ஐ அபேஸ் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 2017-ல் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் ரு.18 ஆயிரமும், திருப்பதி என்பவரிடம் ரூ.29 ஆயிரமும், சுப்ரமணி என்பவரிடம் ரூ.10 ஆயிரமும் அபேஸ் செய்தது தெரியவந்தது.
இதுபோன்று பல ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வந்த பலரின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் அபேஸ் செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அன்பரசனிடம் ரூ.91 ஆயிரத்து 700-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓசூர் அருகே பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உளிவீரனப்பள்ளி அடுத்துள்ளது கப்பக்கல் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தாசப்பா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி நஞ்சம்மா (வயது 60). ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வழக்கம் போல் ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார்.
பின்னர் வெளியில் சென்ற நஞ்சம்மா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது இரவு 9 மணி அளவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நஞ்சம்மா கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நஞ்சம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிர்வாண நிலையில் உடல் கிடந்ததால் நஞ்சம்மாவை பாலியல் பலாத்காரம் செய்து மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உளிவீரனப்பள்ளி அடுத்துள்ளது கப்பக்கல் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தாசப்பா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி நஞ்சம்மா (வயது 60). ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வழக்கம் போல் ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார்.
பின்னர் வெளியில் சென்ற நஞ்சம்மா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது இரவு 9 மணி அளவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நஞ்சம்மா கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நஞ்சம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிர்வாண நிலையில் உடல் கிடந்ததால் நஞ்சம்மாவை பாலியல் பலாத்காரம் செய்து மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பக்கமுள்ள குறிஞ்சிபாளையம் பக்கமுள்ள ஆசானம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் காண்டிபன் (வயது 29). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று ஓசூர் பகுதிக்கு வேலைக்கு வந்திருந்த அவர், மோட்டார்சைக்கிளில் அத்திமுகம் நரசிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து காண்டிபன் படுகாயம் அடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் தேன்கனிக்கோட்டை-பெட்டமுகிலாளம் இடையே வண்ணேபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற அதே ஊரைச் சேர்ந்த தனசேகரன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மகராஜகடை அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
மகராஜகடை அருகே உள்ள கள்ளக்குறி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மது போதையில் அவர் வீட்டுக்கு வந்ததால், அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு விஷம் குடித்து விட்டு வீட்டு அருகில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டுக்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 49), பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்த பால் செல்வம் (60), புலியூரை சேர்ந்த முகமது (40), அரசம்பட்டியை சேர்ந்த கந்தன் (46), ரகமத் காலனியை சேர்ந்த நாகராஜ் (54), ஊத்தங்கரையை சேர்ந்த முகமது ரபிக் (48) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.1,300 பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22), வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு ஓசூர் வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பத்தலப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து.
பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
சேலம் பேர்லாண்ட்ஸ் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 54). கட்டிட மேஸ்திரி. இவர் பர்கூர் அருகே உள்ள பெரியசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டின் முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் திருடி செல்ல முயன்றனர். இதை பார்த்த வாசுதேவன் மற்றும் உடன் இருந்தவர்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் பாப்பனேரி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன்களான மோகன்வேல்(22), சக்திவேல்(23) என்பதும், இருவரும் அண்ணன், தம்பி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 880 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 1,040 கனஅடி தண்ணீர் வந்தது.
அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், அணையின் நீர் மட்டம் நேற்று 39.96 அடியாக இருந்தது. எனவே, பாதுகாப்பு கருதி கெலவரப்பள்ளி அணைக்கு வரும் 1,040 கனஅடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோரங்களில் வாழும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆயுதபூஜைக்காக வீடுகளில் உள்ள பொருட்களை ஆற்றில் கொண்டு வந்து சுத்தம் செய்ய வேண்டாம் என வருவாய்த்துறையினர், கெலவரப்பள்ளி, சின்னகொள்ளு, பெத்தகொள்ளு, காமன்தொட்டி, உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 49.20 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 1,300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பர்கூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூரை அடுத்த கணமூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மனைவி சத்யா (வயது 25). இவர் மொபட்டில் பர்கூரில் இருந்து கணமூர் நோக்கி சென்றார். வெள்ளங்காமரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சத்யாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






