என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஓசூரில் பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

    டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்:

    கேரளா மாநிலம் பெரவார் தாலுகா கோலம்பரா அருகே மாலூரை சேர்ந்தவர் கிஷோர். இவருடைய மகள் அழகுநந்தா (வயது 11). கிஷோர் குடும்பத்துடன் ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளி எழில் நகரில் வசித்து வந்தார். 

    சிறுமி அழகுநந்தா கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வந்த சிறுமி அதிக நேரம் டி.வி. பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×