என் மலர்
கிருஷ்ணகிரி
பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி போலீசார், கொம்மேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த உத்தனப்பள்ளி பங்களா தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 40), இருதாளம் மாதேஷ் (29), கொம்மேபாளையம் மஞ்சுநாத் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர் அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் வசந்த் நகர் காளியம்மன் கோவில் அருகில் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அழுகிய நிலையில் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து அட்கோ போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூக்குப்போட்டு தற்கொலை செய்த மூதாட்டி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 6 பெண் பக்தர்கள் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு டிராக்டரில் பக்தர்கள் சென்றனர். அவர்கள் சென்ற டிராக்டர் தேன்கனிக்கோட்டை அருகே மஞ்சுகொண்டபள்ளி என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இதில் டிராக்டர் அடியில் சிக்கி 6 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ஓசூர் டி.வி.எஸ். சாலையில் உள்ள கொத்தகொண்டபள்ளி, நஞ்சாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி வேலைக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் நஞ்சாபுரத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் சிலர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் 2 வட மாநில தொழிலாளர்கள் கடுமையாக அடித்து தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், ஓசூர் டவுன் மற்றும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையானவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நஞ்சாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி போலீசார் மார்க்கெட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக வடமலம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரையில் நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை நேரு நகரை சேர்ந்தவர் தேவராஜன். இவருடைய மகள் பரமேஸ்வரி (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரமேஸ்வரி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார், சந்தாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரான சீனிவாசன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல், பாகலூர் போலீசார், உஸ்தனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த முருகன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல், சூளகிரி போலீசார், மாதரசனப்பள்ளி பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை வைத்திருந்த சுரேஷ்(45) என்பவர கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூளகிரி அருகே இன்று பட்டப்பகலில் புதினா வியாபாரியை மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தொட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 55). புதினா வியாபாரி.
இவர் இன்று காலை 8 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார்.
அப்போது சூளகிரி - கும்பளம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் வழிமறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜப்பா, மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினார். உடனே மர்ம கும்பல் திடீரென மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவினர். இதில் கண்ணில் எரிச்சல் அடைந்ததால் அவர் கூச்சல் போட்டப்படி, மர்ம கும்பலிடம் இருந்து உயிர் தப்பிக்க ஓடினார்.
ஆனால் மர்ம கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று, கத்தியால் வயிற்றில் குத்தினர். இதில் ராஜப்பா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதைத்தொடர்ந்து ராஜப்பா இறந்ததை உறுதி செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த கொலை குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சூளகிரி டி.எஸ்.பி. முரளி, இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட ராஜப்பா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பிறகு கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, ராஜப்பா உடல் அருகே கிடந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ராஜப்பா, நிலத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
தொட்டூர் கிராமத்தில் ராஜப்பாவுக்கு சொந்தமாக 30 சென்ட் நிலம் இருந்தது. இதுதொடர்பாக அங்கு பக்கத்து நிலத்தை சேர்ந்த சிலருக்கும், ராஜப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக ராஜப்பாவை மர்ம கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
கொலையுண்ட ராஜப்பாவுக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

ஓசூர் ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்:
தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜூஜூவாடி என்ற இடத்தில் போக்குவரத்து சோதனைச்சாவடி உள்ளது. கர்நாடக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த சோதனைச்சாவடியை கடந்தே வரவேண்டும். இந்தநிலையில் வெளிமாநிலங்களில் இருந்து பாரம் ஏற்றி வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்களிடம் பணம் லஞ்சம் வாங்குவதாக கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட குழுவினர் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஓசூர் ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடிக்கு வந்து திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 40 மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி, உதவியாளர்கள் முருகன், ராமலிங்கம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் கடந்த 12-ந் தேதி, ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள அவுட் கோயிங் செக்போஸ்ட் மற்றும் ஓசூரில் இருந்து நல்லூர் செல்லும் வழியில் உள்ள சோதனைச்சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 2 இடங்களிலும் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்தூர் அருகே மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூரை அடுத்த சிவம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு பிரபு மோட்டார்சைக்கிளில் மத்தூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது போச்சம்பள்ளி சமத்துவபுரம் அருகே வந்தபோது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பிரபு ஓட்டிசென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில் தலையில் அடிபட்டு பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒடிசா வாலிபர் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை தர்மராஜா நகரை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிங்காரப்பேட்டையில் இருந்த இளம்பெண் மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
புகாரில், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச தரணி சுனா (24) என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தளியில் உள்ள அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் ஜெகதாப் அடுத்த தாசிகொட்டாய் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பவரும் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் தன்னை காதலிக்குமாறு சக்திவேல், தொடர்ந்து அந்த மாணவியை வலியுறுத்தி வந்தார். ஆனால் அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சக்திவேல், அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து, பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தார்.