என் மலர்
செய்திகள்

கொலை
ஓசூரில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் படுகொலை
ஓசூரில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ஓசூர் டி.வி.எஸ். சாலையில் உள்ள கொத்தகொண்டபள்ளி, நஞ்சாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி வேலைக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் நஞ்சாபுரத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் சிலர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் 2 வட மாநில தொழிலாளர்கள் கடுமையாக அடித்து தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், ஓசூர் டவுன் மற்றும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையானவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நஞ்சாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






