என் மலர்
கிருஷ்ணகிரி
ஓசூர், நாகரசம்பட்டியில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியில் உள்ள ஜெய்சக்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் முத்தமிழரசு (வயது 14). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று மாணவன் தனது அத்தை வீட்டிற்கு செல்வதாக கூறி உள்ளான். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த முத்தமிழரசு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், அங்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொைல செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகரசம்பட்டி கந்தசாமி தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 63). கூலித் தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் தணிகாசலம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகலூர் அருகே தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள பெலத்தூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ராதா (வயது 50). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ராதா பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி லட்சுமண ராவ் தெரு மெகந்தர் (வயது 20), பெட்டமுகிலாளம் கணபதி (23), லட்சுமிபுரம் சுசீலா (45), சின்ன எலசகிரி ரோஹித் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கெலமங்கலம் அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் தடிகல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரஞ்சிதா (25). இவர்களுக்கு 1½ வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஞ்சிதா கோபித்துக்கொண்டு அதேபகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சக்திவேல் உடலில் மண்எண்ணெயை ஊற்றி கொண்டு மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
அவர் வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த சக்திவேல் உடலில் தீவைத்து கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து தலைமறைவான சேலம் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் தனது படிப்பை பாதியில் நிறுத்திய அவா் மாற்றுச்சான்றிதழ் வாங்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி கல்லூரிக்கு சென்றார். அப்போது மாற்றுச்சான்றிதழ் வாங்க முடியவில்லை.
இதையடுத்து சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு இளம்பெண் சென்று அன்று இரவு தங்கினார். அப்போது அதே ஊரை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன் (வயது 30) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர் அதே பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் 15 நாட்களுக்கு பின் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் எங்கள் வீட்டில் பிரச்சினை என கூறி, பாலமுருகன் அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் இளம்பெண் கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். பின்னர் பலமுறை தொடர்பு கொண்டும் பாலமுருகன் சரியாக பதில் கூறவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் பாலமுருகன் மீது புகார் செய்தார். அதில் தனக்கு பொய் வாக்குறுதி கொடுத்து திருமணம் செய்து உல்லாசமாக இருந்து விட்டு, பின்னர் சாதி பெயரை கூறி தற்போது ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதன் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே தலைமறைவாக இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் டவுன் போலீசார் அட்கோ பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 35), காளேகுண்டா உசேன் (32), சமத்துவபுரத்தை சேர்ந்த சதீஷ் (38), பழைய வசந்த் நகரை சேர்ந்த குமார் (46) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது 32). தச்சு தொழிலாளி. சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில், ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங்ரோட்டில சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததில் பிரவீன்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரவீன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் விழாவில் தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் பேண்ட், வாத்தியம் இசைக்க அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 20) என்பவர், வெளி ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்தார். திருவிழா முடிந்த பினனர், அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஏகாம்பரம் (37) என்பவர், கோவிந்தராஜிடம், நீ அழைத்து வந்த ஆட்கள் சரியாக பேண்ட், வாத்தியம் வாசிக்கவில்லை என கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்களான சிவராமன் (46), மல்லிகா (26), வள்ளி (45) ஆகிய 4 பேரும் சேர்ந்து, ஏகாம்பரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜ் மற்றும் சிவராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
சூளகிரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கூலியம் கிராமத்தில் தேசன்னசாமி கோவில் உள்ளது. இந்த கோவில், புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கோவில் பூசாரியாக, சீனிவாசன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பூசாரி, கோவிலை திறக்க வந்தார். அப்போது, கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டு சற்று தூரத்தில் உண்டியலை வீசி சென்றது தெரியவந்தது. இது குறித்து, சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
போச்சம்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குண்டுமணி (வயது 56). விவசாயி. இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குண்டுமணி தனது மாமியார் வீடான பர்கூர் சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வேலம்பட்டி அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோதி குண்டுமணி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குண்டுமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து 20 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. ரூ.30 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
ஓசூர்:
நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் இந்த நாளில் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்கள், பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். மேலும் சுற்றுலா தலங்களில் சந்தித்து உற்சாகமாக பொழுதை கழிப்பதும் வழக்கம். ரோஜாப் பூக்களையும், காதலர் தினத்தையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது.
காதலர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பயிரிடப்படும் ரோஜாப்பூக்கள் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வாடிக்கை. ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாக விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்து 1,300 ஏக்கரில் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் 800 ஏக்கரில் தரமான ரோஜாக்களை விவசாயிகள் சாகுபடி செய்து, பெங்களூரு மலர் வர்த்தக மையம் மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். காதலர் தினத்தையொட்டி வெளிநாடுகளில் ரோஜா மலர்களுக்கான தேவை அதிகரிக்கும்.
காதலர் தின வர்த்தகத்தை முன்னிட்டு ஏற்றுமதி செய்வதற்காக ஓசூரில் ரோஜா மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால், ஓசூரில் இருந்து ஏற்றுமதியாகும் ரோஜா மலர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கொரொனா பாதிப்பு காரணமாக ரோஜா சாகுபடி யின் பரப்பளவும், ஏற்றுமதியும் குறைந்துள்ளதாக மலர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
செழிப்பான மண்வளத் தையும், சீரான தட்ப வெப்பநிலையையும் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் கொண்டுள்ளதால் அங்கு, சாகுபடி செய்யப்படும் ரோஜாக்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி மலர்கள் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டுவரை, நிலைமை இப்படி இருந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனாவால் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.
இந்த ஆண்டு காதலர் தின கொண்டாட்டங்களுக்காக சுமார் 2 கோடி அளவில் ரோஜா ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தனர். சீனா, ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா அச்சம் காரணமாக அங்குள்ள ரோஜாக்களுக்கு மவுசு குறைந்தது. இதனால் பன்னாட்டு சந்தையில் ஒசூர் ரோஜாவுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகளவில் வரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர் ரோஜா சாகுபடி விவசாயிகள். ரோஜா விவசாயத்தை நம்பி ஓசூர் பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகளும், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களும் உள்ளனர். இந்த முறை காதலர் தினத்தை முன்னிட்டு 20 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. ரூ.30 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஆர்டர்கள் வராமல் போனதால், ரோஜா விவசாயிகளை, காதலர் தினம் கவலையில் அடைய செய்துள்ளது.

வனப்பகுதி அருகே காட்டுப்பன்றி என நினைத்து சுட்டதில் நண்பர் பலியான சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (வயது 40).
இந்த நிலையில் இவரும், இவரது நண்பரான அஞ்செட்டி அடுத்த சிக்கமஞ்சு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (27) என்பவரும் நேற்று இரவு காட்டுப்பன்றிகளை வேட்டையாட வனப்பகுதிக்கு சென்றனர். இருவரும் ஆளுக்கு ஒரு நாட்டு துப்பாக்கியை வைத்துக் கொண்டு இருட்டான வனப்பகுதியில் காட்டுப் பன்றிகளை தேடி அலைந்தனர்.
நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அஞ்செட்டி அருகே சிக்க மஞ்சு வனப்பகுதியில் பசப்பாவும், நாகராஜிம் வேறு வேறு திசைகளில் சென்று காட்டுப்பன்றிகளை கண்காணித்தப்படி இருந்தனர்.
அப்போது திடீரென ஏதோ ‘சலசல’ சத்தம் கேட்டதால் துப்பாக்கியுடன் இருந்த நாகராஜ் உஷாரானார். காட்டுப்பன்றி தான் வருகிறது என்று நினைத்து சத்தம் வந்த திசையை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டார். அப்போது அய்யோ... என்று கத்தியப்படி பசப்பா கீழே விழுந்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ், ஓடி வந்து பார்த்தார். அப்போது மார்பில் குண்டு பாய்ந்து பசப்பா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து திடுக்கிட்டார்.
காட்டுப்பன்றி என நினைத்து சுட்டதில் பசப்பா பலியானது நாகராஜிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதிக்கு சென்ற சிலர், பசப்பா குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அஞ்செட்டி வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது,
உடனே அவர்கள் வனப்பகுதிக்கு விரைந்து சென்று பசப்பா உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி இருந்து வரும் நாகராஜை வனத்துறையினரும், போலீசாரும் தேடி வருகிறார்கள்.
காட்டுப்பன்றி என நினைத்து சுட்டதில் நண்பர் பலியான சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.