என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு வெகுவாக (பெட்ரோல் ரூ.4, டீசல்- 10) குறைத்துள்ளது. இதனால் நாளையில் இருந்து விலை குறைய இருக்கிறது.
    மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரி விதிக்கிறது. இதுபோக மாநில அரசுகள் வாட் வரி விதிக்கின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எல்லா மாநிலங்களிலும் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால், மத்திய அரசு கலால் வரியை குறைக்க மறுத்து வந்தது.

    இந்த நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரியில் இருந்து 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் இருந்து 10 ரூபாயும் குறைத்துள்ளது. இதனால் நாளையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய இருக்கிறது. கலால் வரியை குறைத்ததற்கு ஏற்றவாறு மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்து, நுகர்வோருக்கு சுமையை குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
    கிருஷ்ணகிரி அருகே உடல் நலக்குறைவு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    திருப்பத்தூர் மாவட்டம் இருனப்பட்டு திரு.வி.க. நகரை சேர்ந்தவர் உமாபதி (வயது 29). இவர் கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய அண்ணன் தளபதிகுமார் கிருஷ்ணகிரியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். 

    சம்பவத்தன்று ஏட்டு தளபதி குமார், தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார். அந்த நேரம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டு சாவியை தம்பி உமாபதி கேட்டார். அவரிடம் சாவியை கொடுத்து விட்டு தளபதிகுமார் சென்றார். இதன்பிறகு உமாபதி வீட்டில் இருந்து தனது நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். 

    பிறகு மீண்டும் காவலர் குடியிருப்பில் உள்ள அண்ணனின் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் அங்கு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக்குறைவு காரணமாக உமாபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமானநிலையத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக டெல்லி சென்று தேசிய விருது பெற்றார். அதன்பின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

    இந்நிலையில் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அங்கு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்க வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


    வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் அதற்து எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை சேதப்படுத்தியதாக கைதானவர்கள் தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரி:

    வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை கண்டித்தும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வற்புறுத்தியும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை சுகுமார் (46) ஒட்டினார்.

    நேற்று இரவு 9 மணியளவில் பஸ், கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் வேட்டையம்பட்டி ஏரிக்கரை அருகே சென்ற போது 2 பேர் திடீரென வழிமறித்து பஸ் முன்பக்க கண்ணாடி மீது கல்லை வீசினர். இதில் கண்ணாடி நொறுங்கி சேதமானது.

    இதுகுறித்து பஸ் டிரைவர் சுகுமார், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் கண்ணாடியை உடைத்தது, ஆலமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த ரவி (33), வேட்டையம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (32) ஆகியோர் என தெரிய வந்தது. 2 பேரும் கட்டிட மேஸ்திரிகள் ஆவர்.

    வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் அதற்து எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை சேதப்படுத்தியதாக தெரிவித்தனர்.

    வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தருமபுரி 4 ரோடு, நல்லம்பள்ளி, ஏரியூர், பொம்மிடி, இண்டூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், மற்றும் சாலைமறியல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ஒற்றை காட்டு யானை மீண்டும் அதே பகுதிகளில் உலாவியுள்ளது. தெருக்களில் யானை வீதி உலா வருவதால் பொது மக்கள் வீட்டை விட்ட வெளியே வர அச்சம் கொண்டு உள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஆனைக்கட்டி, பொன்னூத்து அம்மன் கோவில், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி மலையடி வாரப்பகுதிகளிலுள்ள கிராமங்களில் புகுந்து விடுகின்றன.

    காட்டு யானைகள் ஊருக்குள்புகுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கணபதி நகர், கிரீன் பீல்டு, லட்சுமி நகர், ரேனுகாபுரம் பகுதிகளில் கடந்த 29-ந் தேதி அதிகாலையில் வந்த ஓற்றை காட்டு யானை அந்த பகுதிகளில் சுற்றி சுற்றி வந்துள்ளது. மேலும் அங்கு புதியதாக கட்டப்பட்டு கிரகபிரவேசம் செய்யப்பட்ட வீட்டின் முன்பு வாழை மரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனையும் அந்த யானை பிடிங்கி தின்றுள்ளது. அங்குள்ள குப்பை மேட்டை ஆய்வு செய்துள்ளது. பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்றுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த ஒற்றை காட்டு யானை மீண்டும் அதே பகுதிகளில் உலாவியுள்ளது. தெருக்களில் யானை வீதி உலா வருவதால் பொது மக்கள் வீட்டை விட்ட வெளியே வர அச்சம் கொண்டு உள்ளனர். தெருக்களில் உலா வந்த யானை அங்குள்ள ஒரு சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2 முறை யானை வந்ததால் அந்த பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராயக்கோட்டையில் போலி லாட்டரி சீட்டுகள் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீசார் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையில் ராயக்கோட்டை பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ராயக்கோட்டை கீழ் தெருவை சேர்ந்த சிராஜ் (வயது 37) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரிந்தது.

    அவரை கைது செய்த போலீசார் 69 லாட்டரி சீட்டுகள் மற்றும் 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் ராயக்கோட்டையில் சூளகிரி சாலையில் உள்ள பேன்சி கடையில் சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பது தெரிந்தது.

    இதனால் கடை உரிமையாளரான ராயக்கோட்டை கடைவீதியை சேர்ந்த திவாகர் (32), ரகமத் காலனியை சேர்ந்த லோகநாதன் என்ற மூக்குத்தி (63), கோனேரி அக்ரஹாரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் போலியாக லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒரு கணினி, மடிக்கணினி, பிரிண்டிங் மெஷின் மற்றும் 82 லாட்டரி சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    இலங்கை அகதிகள் என்ற போர்வையில் இருந்து எங்களை மாற்றியிருப்பது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று வேலூர் முகாமை சேர்ந்த பெண் கூறினார்.
    வேலூர்:

    இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்ட தொடக்க விழாவில் மேல்மொணவூர் முகாமை சேர்ந்த லூட்சு மேரி என்பவர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    கடந்த 31 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறோம். நீண்டகாலமாக எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. சொந்த வீடு என்பது எங்களுக்கு பெரும் கனவாக உள்ளது. சரியான வீடு வசதி இல்லாததால் தூங்க முடியாமல் தவிக்கிறோம். 4 அல்லது 5 பேர் உள்ள குடும்பங்களில் படுக்க கூட இடமில்லை.

    சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாததால் விறகு அடுப்பில் சமையல் செய்து பெண்கள் தவிக்கிறார்கள். எங்களுக்கு வீடு, கியாஸ் இணைப்பு போன்றவை கிடைக்க உள்ளது.

    வீடு கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் உங்களில் ஒருவர் என கூறியது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் பாதியில் படிப்பை நிறுத்தியவள். வசதி இல்லாததால் பலர் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    தற்போது பணபலன் அதிகமாக உள்ளதால் கல்வி செலவை அரசே ஏற்கும் என்பதால் இலங்கைத் தமிழர்கள் பலர் படிக்க முடியும். வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறியிருக்கிறார்கள்.

    இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். இலங்கை அகதிகள் என்ற போர்வையில் இருந்து எங்களை மாற்றியிருப்பது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

    தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா பாலதொட்டனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 25). விவசாயி. இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் மது போதையில் அடிக்கடி தாயிடம் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மது போதையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆனந்த் ஊருக்கு வெளியே உள்ள மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேன்கனிக்கோட்டை போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தீபக் தங்கி இருந்த அறையில் தனது செல்போனுக்கு சார்ஜ் போடும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
    மங்கலம்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக்( வயது 26). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி சத்யாநகர் பகுதியில் தனியார் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று தீபக் தங்கி இருந்த  அறையில் தனது  செல்போனுக்கு சார்ஜ் போடும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது தீபக்-கின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீபக்-கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி-க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீபக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகரசம்பட்டி அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    நாகரசம்பட்டி போலீசார் தட்டக்கல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வீரமலை அங்கமுத்து (வயது 47), முருகன் (43), சிவராஜ் (53), என்.தட்டக்கல் வைரமணி (49), முத்து (31), செல்வம் (61) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
    அரிசி குடோனில் பட்டாசுகள் பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொம்மிடி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோழிமேக்கனூரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 38). இவரது நண்பர் பிரபு (38). இவர்கள் 2 பேரும் அங்குள்ள குடோனில் அனுமதி இல்லாமல் பட்டாசு பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அரிசி குடோனில் சோதனை செய்தபோது 348 பெட்டி பட்டாசுகள் அனுமதியின்றி பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    சூளகிரி அருகே விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சேட்டு (40). 2 பேரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று சீனிவாசனை, சேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேட்டுவை கைது செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ×