என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
செல்போன் சார்ஜ் போட முயன்ற போது மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
தீபக் தங்கி இருந்த அறையில் தனது செல்போனுக்கு சார்ஜ் போடும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
மங்கலம்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக்( வயது 26). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி சத்யாநகர் பகுதியில் தனியார் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தீபக் தங்கி இருந்த அறையில் தனது செல்போனுக்கு சார்ஜ் போடும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது தீபக்-கின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீபக்-கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி-க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீபக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






