என் மலர்

  செய்திகள்

  காட்டுயானை
  X
  காட்டுயானை

  துடியலூர் அருகே இரவில் மிரட்டும் ஒற்றை காட்டுயானை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒற்றை காட்டு யானை மீண்டும் அதே பகுதிகளில் உலாவியுள்ளது. தெருக்களில் யானை வீதி உலா வருவதால் பொது மக்கள் வீட்டை விட்ட வெளியே வர அச்சம் கொண்டு உள்ளனர்.

  கவுண்டம்பாளையம்:

  கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஆனைக்கட்டி, பொன்னூத்து அம்மன் கோவில், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி மலையடி வாரப்பகுதிகளிலுள்ள கிராமங்களில் புகுந்து விடுகின்றன.

  காட்டு யானைகள் ஊருக்குள்புகுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கணபதி நகர், கிரீன் பீல்டு, லட்சுமி நகர், ரேனுகாபுரம் பகுதிகளில் கடந்த 29-ந் தேதி அதிகாலையில் வந்த ஓற்றை காட்டு யானை அந்த பகுதிகளில் சுற்றி சுற்றி வந்துள்ளது. மேலும் அங்கு புதியதாக கட்டப்பட்டு கிரகபிரவேசம் செய்யப்பட்ட வீட்டின் முன்பு வாழை மரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனையும் அந்த யானை பிடிங்கி தின்றுள்ளது. அங்குள்ள குப்பை மேட்டை ஆய்வு செய்துள்ளது. பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்றுள்ளது.

  இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த ஒற்றை காட்டு யானை மீண்டும் அதே பகுதிகளில் உலாவியுள்ளது. தெருக்களில் யானை வீதி உலா வருவதால் பொது மக்கள் வீட்டை விட்ட வெளியே வர அச்சம் கொண்டு உள்ளனர். தெருக்களில் உலா வந்த யானை அங்குள்ள ஒரு சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2 முறை யானை வந்ததால் அந்த பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  Next Story
  ×