என் மலர்
கிருஷ்ணகிரி
நெய்வேலி அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் பலியானார். மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசமானது.
இந்த நிலையில் நெய்வேலி அருகே நேற்று முன்தினம் இரவு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் ஒருவர் பலியானார். அதன் விவரம் வருமாறு:-
நெய்வேலி வடக்குமேலூரை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் சந்தோஷ்குமார் (வயது 47). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார், அவரது மனைவி வளர்மதி, மகள் ஈஸ்வரி, பச்சமுத்து, அவரது மனைவி கல்யாணி ஆகிய 5 பேரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்கனவே மழையால் நனைந்து இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சந்தோஷ்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து அலறினர்.
இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிசிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அறிந்ததும் வடக்குத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பா.ம.க. முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளருமான கோ.ஜெகன் நேரில் சென்று வீட்டை பார்வையிட்டார். பின்னர், லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்ட கோ.ஜெகன், பசுமை வீடு கட்டித்தரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் டவுன் போலீசார் நேதாஜி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு லாட்டரி சீட்டுக்கள் விற்ற வீராசாமி (வயது 56) என்பவரை கைது செய்தனர். அதே போல ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுக்கள் விற்ற சஜ்ஜலப்பட்டி செல்வமணி (47) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சரண்யாவின் முகம் பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டும், கைகள் நூல் கயிறால் கட்டப்பட்டும் இருந்தன.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் அவினாசிலிங்கம் (வயது 44). இவரது மனைவி சரண்யா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அவினாசிலிங்கம் தாராபுரம் பெரியகடை வீதி பூக்கடை கார்னர் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று சரண்யா வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ் பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது சரண்யாவின் முகம் பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டும், கைகள் நூல் கயிறால் கட்டப்பட்டும் இருந்தன. இதனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சரண்யாவின் முகம் பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டு இருந்ததால் யாராவது அவரை கொன்று தூக்கில் தொங்கவிட்டனரா? என்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்குள்ள அறையில் சரண்யா தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது.அதனை போலீசார் மீட்டு பார்த்த போது சரண்யா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
சரண்யாவின் மாமனார் இறந்த பிறகு சொத்துக்களை 3 பிரிவாக பிரித்துள்ளனர். அவினாசிலிங்கம் மற்றும் அவரது தங்கை ரேணுகா, தாய் தனபாக்கியம் ஆகியோருக்கு பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் அவினாசிலிங்கத்திற்கு பிரித்து கொடுக்கப்பட்ட சொத்துக்களை சரண்யாவின் மாமியார் தனபாக்கியம் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின்அருகே உள்ள காலிஇடத்தில் சரண்யாவும், அவினாசிலிங்கமும் வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தனபாக்கியம் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சரண்யா தற்கொலை செய்யமுடிவு செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகத்தை பிளாஸ்டிக் கவரால் கட்டியதுடன், கழுத்தில் சேலையையும், கைகளை நூல் கயிறால் கட்டிக்கொண்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதமும் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனபாக்கியம், ரேணுகா, அவினாசிலிங்கம் ஆகியோரிடம் போலீசார் தொடர் ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் 12 பவுன் நகையை திருடிச்சென்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள நஞ்சானட்டி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 40.) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகையை திருடி சென்றனர்.
அதேபோல அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (48.) இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டாமல் வெளிப்புறமாக தாழிட்டு விட்டு மாடு மேய்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. இது தொடர்பாக அவர்கள் 2 பேரும் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை அருகே உள்ள நல்லராலம்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பா (70). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவருடைய வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் நகை திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெங்கடேஷ், மீனா நடிப்பில் உருவாகி இருக்கும் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்- மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தத் தகவலை நடிகர் வெங்கடேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் டைல்ஸ் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள சுண்டகாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் அழகிரி (வயது 24). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி அருகே உள்ள திரு வயலூர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான அழகிரியின் உடலை போச்சம்பள்ளி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் பஞ்சாபி மொழிதான் முதன்மையானதாக இருக்க வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி கூறியுள்ளார்.
சண்டிகார்:
பஞ்சாபில் 10-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாம் என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உத்தரவிட்டுள்ளார். தாய்மொழியை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபி மொழி தொடர்பாக இரு மசோதாக்கள் நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து சரண் ஜித் சிங் சன்னி கூறியிருப்பதாவது;- பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், அலுவலகங்களிலும் பஞ்சாபி கட்டாய மொழியாக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் பஞ்சாபி மொழிதான் முதன்மையானதாக இருக்க வேண்டும்” எனக்கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...கேரளாவில் சட்டசபைக்கு சைக்கிளில் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.
ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி பால விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு மர்ம நபர்கள் இவரது நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் உள்ளே இருந்த 48 ஆயிரத்து 594 மீட்டர் காப்பர் வயர்கள், 200 கிலோ இரும்பு பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர்.
இந்த நிலையில், நிறுவனத்தில் பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அதில் 5 கைரேகைகளை போலீசார் அங்கிருந்து பதிவு செய்து கொண்டனர்.
எனவே இந்த திருட்டில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள 1,215 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்காக அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்களை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள 1,215 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் நேரில் வந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் NVSP எனும் இணையதளம், Voters Help Line எனும் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பேசலாம், என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்காக அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்களை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள 1,215 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் நேரில் வந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் NVSP எனும் இணையதளம், Voters Help Line எனும் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பேசலாம், என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு செங்கல் சூளை அருகில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சாராயம் விற்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த முனிராஜ் மனைவி ராணி (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம், சூளகிரி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடியாகும் தக்காளி ராயக்கோட்டை தக்காளி மார்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கமிஷன் மண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மழையால் உதிர்ந்து செடிகளில் உள்ள இலைகளும் அழுகி உள்ளது. இதனால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் வரை செலவு செய்து ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிக்கு முற்றிலுமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டிகளில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 800 டன் வரை ஏற்றுமதி செய்யப்பட கூடிய நிலையில், தற்போது தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால் வரத்து குறைந்து சுமார் 50 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடுக்கு தக்காளி ஏற்றுமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், தக்காளியின் விலை உயர்ந்தாலும் தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி சாகுபடி விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
பஸ்சில் ஏற முயன்ற விவசாயியிடம் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள மாதவ அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சீனிவாசரெட்டி (வயது 46). விவசாயி. இவர் நேற்று கெலமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு செல்ல பஸ்சில் ஏற முயன்றார். அப்போது கூட்டத்தை பயன்படுத்தி அவரது பாக்கெட்டில் இருந்த மணி பர்சுடன் பணத்தை 2 வாலிபர்கள் திருடி கொண்டு தப்பியோட முயன்றனர்.
இதை அறிந்த சீனிவாசரெட்டி பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபர்களை பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் லட்சுமிபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக், (19), பென்னிக்கல்லை சேர்ந்த ராமய்யா மகன் மாதேஷ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






