என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த சரண்யா.
    X
    தற்கொலை செய்த சரண்யா.

    திருப்பூர் அருகே சொத்து பிரச்சினையில் நகைக்கடை அதிபரின் மனைவி தற்கொலை - மாமியாரிடம் போலீசார் விசாரணை

    சரண்யாவின் முகம் பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டும், கைகள் நூல் கயிறால் கட்டப்பட்டும் இருந்தன.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் அவினாசிலிங்கம் (வயது 44). இவரது மனைவி சரண்யா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    அவினாசிலிங்கம் தாராபுரம் பெரியகடை வீதி பூக்கடை கார்னர் பகுதியில்  நகைக்கடை வைத்துள்ளார். நேற்று சரண்யா வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.  

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ் பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 

    அப்போது சரண்யாவின் முகம் பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டும், கைகள் நூல் கயிறால் கட்டப்பட்டும் இருந்தன. இதனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சரண்யாவின் முகம் பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டு இருந்ததால் யாராவது அவரை கொன்று தூக்கில் தொங்கவிட்டனரா? என்று  விசாரணை நடத்தினர். 
     
    அப்போது அங்குள்ள அறையில் சரண்யா தனது கைப்பட எழுதி வைத்திருந்த  கடிதம் ஒன்று இருந்தது.அதனை போலீசார் மீட்டு பார்த்த போது சரண்யா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். 

    சரண்யாவின் மாமனார் இறந்த பிறகு சொத்துக்களை 3 பிரிவாக பிரித்துள்ளனர். அவினாசிலிங்கம் மற்றும் அவரது தங்கை ரேணுகா, தாய் தனபாக்கியம் ஆகியோருக்கு பிரிக்கப்பட்டுள்ளது. 

    இதில் அவினாசிலிங்கத்திற்கு பிரித்து கொடுக்கப்பட்ட சொத்துக்களை சரண்யாவின் மாமியார் தனபாக்கியம் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின்அருகே உள்ள காலிஇடத்தில் சரண்யாவும், அவினாசிலிங்கமும்  வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தனபாக்கியம் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

    இதனால் மனமுடைந்த சரண்யா தற்கொலை செய்யமுடிவு செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகத்தை பிளாஸ்டிக் கவரால்  கட்டியதுடன், கழுத்தில் சேலையையும், கைகளை நூல் கயிறால் கட்டிக்கொண்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    முன்னதாக தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதமும் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனபாக்கியம், ரேணுகா, அவினாசிலிங்கம் ஆகியோரிடம் போலீசார் தொடர் ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×