என் மலர்tooltip icon

    கரூர்

    • முற்றுகையிட வந்தவர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தகவல்.

    தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். முற்றுகையிட வந்தவர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில், சோதனையின் போது வீட்டின் வெளியே திரண்ட குமார் மற்றும் மேலும் சிலரை அதிகாரிகள் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மீது கையால் தாக்கியது, தகாத வார்த்தையால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர்.
    • தாக்குதலில் காயமுற்ற நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், அதிகாரிகளை தடுத்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கரூர் மாவட்ட காவல் துறை தெரிவித்து இருக்கிறது.

    வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    • துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதேபோல், கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து, அதிகாரிகள் நேற்று இரவு மீண்டும் துணை மேயர் வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

    துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • வேண்டும் வரம் தந்து பக்தர்களின் குறைகளைப் போக்கி ஆனந்தம் அளிப்பவள் கரூர் மாரியம்மன்

    கரூர் :

    பழமையும், வரலாற்று சிறப்பும், வணிகச் சிறப்பும், ஆன்மிக பெருமையும் கொண்ட நகரம் கரூர். இத்தகைய சீரும், சிறப்பும் பெற்ற கரூரின் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, ஏழை, பணக்காரர் பேதமின்றி, சாதி, சமய வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன். அம்மன் திருச்சி சமயபுரத்தில் மகமாயியாகவும், திருவேற்காட்டில் கருமாரியாகவும், கரூரில் மாரியம்மனாகவும் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

    வேண்டும் வரம் தந்து பக்தர்களின் குறைகளைப் போக்கி ஆனந்தம் அளிப்பவள் கரூர் மாரியம்மன். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    அந்தவகையில் இந்த ஆண்டு கடந்த 14-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதன் பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அப்போது கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 47 பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கரூர் மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கு புனிதநீர், பால் ஆகியவற்றை ஊற்றி சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கோவிலில் உள்ள கம்பத்திற்கு புனிதநீர், பால் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மாலை நேரத்தில் புனிதநீர் கொண்டு வந்தவர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது.திருவிழாவை முன்னிட்டு இரவு வெள்ளி அன்னவாகனத்தில் மாரியம்மன் மாவடியான் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து திருவீதியுலா நடைபெற்றது. வருகிற 29-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் 28, 29, 30, 31-ந் தேதிகளில் மாவிளக்கும், பால்குடமும் நடக்கிறது. 29, 30-ந் தேதிகளில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தும் விழாவும் நடைபெறுகிறது. 31-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடக்கிறது.

    • குளித்தலை நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் நியமிக்க கோரிக்கை வைத்தனர்
    • இதற்கு கரூர் மாவட்ட தலைமை கூட்டுறவியல் நீதிபதி இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    குளித்தலை,

    கரூர் மாவட்டம் குளித்தலை நீதிமன்ற ஒருங்கிணைந்த வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தின் வருடாந்திர ஆய்விற்கு வருகை புரிந்த கரூர் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ராஜலிங்கம் நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் நாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் அவர்களின் குறை, நிறைகள் குறித்து கூறினர்.

    தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் இணைச் செயலாளர் மது பேசியது: குளித்தலையில் அமைந்துள்ள இரு குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் 2 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கூடுதல் உரிமையியல் நீதிபதி பொறுப்பு நீதிபதியாக இருந்து வருகிறார். குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு முழு நேரமாக நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு கரூர் மாவட்ட தலைமை கூட்டுறவியல் நீதிபதி இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.இதற்கு வழக்கறிஞர்கள் அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். முடிவில் வழக்கறிஞர்கள் சங்க இணைச் செயலாளர் பிள்ளபாளையம் சரவணன் நன்றி கூறினார். இதில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை அருகே பிளஸ்-1 மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார்
    • மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி பகுதி சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராசு, கலைவாணி. இவர்களுக்கு விக்னேஸ்வரி, தேவிகா(வயது 16) ஆகிய இரண்டு மகள்கள். இதில் இளைய மகள் தேவிகா பிளஸ்-1 படித்து வந்தார். தந்தை தங்கராசு சுமார் 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவாத கூறப்படுகிறது,இந்நிலையில் வீட்டில் இருந்த தேவிகா காணவில்லை. 

    பல இடங்களில் தேடிக் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் தேவிகாவின் தாய் கிருஷ்ணவேணி புகார் செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள விவசாய பாசன கிணற்றில் பிணமாக மிதப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இதனை அடுத்து குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேவிகாவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர், மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தம்.

    தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனன் கூறியதாவது.,

    "கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் அழைத்து வரவில்லை. சோதனைக்கு வந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்."

    "சோதனை நடக்கும் இடங்களில் 150-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும். ," என்று தெரிவித்தார். 

    • சமையல் தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.
    • திருமண மண்டபத்தில் படுத்து இருந்தார்

    கரூர்:

    கரூர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மதுராந்தக நல்லூர் அழகாத்த குலத்தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் என்கிற சதீஸ்(வயது 48). சமையல் தொழிலாளியான இவர், கரூர் மாவட்டம் புகழூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமையல் வேலை செய்வதற்காக வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு சமையல் வேலை செய்துவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சக தொழிலாளர்கள் சக்திவேலை எழுப்ப முயன்றபோது அவர் இறந்துகிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலாயுதம்பாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சப்ளையரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

    கரூர்:

    கரூர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 50). இவர் தற்போது ஆண்டாங்கோவில் புதூரில் வசித்து வருகிறார். இவர் ரெட்டிபாளையம் டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் கவுதம், ஜீவா இருவரும் ரெட்டிபாளையம் டாஸ்மாக் பாருக்கு வந்து பாண்டியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு பாண்டி பணம் இல்லை என கூறியுள்ளார்.

    இதனையடுத்து கவுதம், ஜீவா ஆகியோர் பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பாண்டி கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் கவுதம், ஜீவா ஆகியோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
    • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கரூர்:

    தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் இந்த சோதனையானது நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

    இந்நிலையில் கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இதேபோல் மற்ற இடங்களிலும் அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறுத்தப்பட்டது. 8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு செய்வார்கள்.

    • வாங்கல் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மேலசக்கரபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது61). விவசாயியான இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன் தவறி விழுந்து இவரின் இடது கையில் காயம் ஏற்பட்டு கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கந்தசாமி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். பின்னர் உறவினர்கள் இவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கிருஷ்ணராயபுரம் அருகே மின்கம்பியை மிதித்த முதியவர் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் சடையன் (வயது 73). இவரது மனைவி செல்லம்மாள் (68). இவர்கள் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் காலை வயல் வெளிக்கு செல்வதற்காக இருவரும் நடந்து செல்லும் போது பாதையில் ஏற்கனவே அறுந்து கிடந்துள்ள மின் கம்பியை எதிர்பாராமல் மிதித்துள்ளனர். இதில் சடையன் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மனைவி செல்லம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த லாலாபேட்டை போலீசார் சடையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது மகன் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×