என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்தனர்.
    • கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனையிட சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்தனர். இதனால் பிரச்சனை உருவானது. தி.மு.க.வினரின் எதிர்ப்பு காரணமாக முதல் நாளில் கரூரில் வருமான வரி சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது. கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனையிடச் சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    இதனால் அங்கு சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபோல் ராயனூரிலும் அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அந்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும், ராயனூர் சம்பவத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த வழக்கு தொடர்பாக கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    கரூர்:

    குளித்தலை அருகே உள்ள கணேசபுரம், குமாரமங்கலம் மற்றும் சுங்ககேட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் கணேசபுரம் பகுதியில் மது விற்ற மணிவேல் (வயது 48), குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அண்ணாவி (43), சிவகங்கை மாவட்ட பகுதியைச் சேர்ந்த பிரகாசம் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தகுதியுள்ள சமுதாய அமைப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 25-ந்தேதிக்குள் கருத்துருக்களை ஊரகப்பகுதிகளில் வட்டார இயக்க மேலாளர்களிடமும், நகர்ப்புற பகுதிகளில் சமுதாய அமைப்பாளர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    கரூர்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டுக்கான அரசாணை வரப்பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2022-23-ம் ஆண்டு மணிமேகலை விருது வழங்குவதற்கான ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த விருதுக்கு சமுதாய அமைப்புகளிடமிருந்து வரப்பெறும் கருத்துருக்களை வட்டார இயக்க மேலாளர்கள் உரிய ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலித்து ஒவ்வொரு சமுதாய அமைப்புக்கும், இறங்குவரிசைப்படி பட்டியல் தயார் செய்து மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள சமுதாய அமைப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 25-ந்தேதிக்குள் கருத்துருக்களை ஊரகப்பகுதிகளில் வட்டார இயக்க மேலாளர்களிடமும், நகர்ப்புற பகுதிகளில் சமுதாய அமைப்பாளர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    • நொய்யல் பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • இதனால் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமலும், குடியிருப்பு வாசிகள் இரவு தூங்க முடியாமலும் அவதி அடைந்தனர்.

    கரூர்:

    புகழூர் துணை மின் நிலையத்தில் இருந்து முத்தனூர், சேமங்கி, முனிநாதபுரம், நடையனூர், சொட்டையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நொய்யல், மரவாபாளயம், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், புன்னம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது.

    அப்போது அதிக காற்றின் காரணமாக நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியில் இருந்து நேற்று மதியம் 12 மணி வரை சுமார் 18 மணி நேரம் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமலும், குடியிருப்பு வாசிகள் இரவு தூங்க முடியாமலும் அவதி அடைந்தனர்.

    • தாய்ப்பால் குடித்து விட்டு தூங்கிய பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்;

    கரூர் மாவட்டம், குளித்தலை கிரி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 27). இ்ந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிறந்து 29 நாட்களான இவர்களது 3-வது பெண் குழந்தையான மானஷ்வினிக்கு, பவித்ரா தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார்.பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்த போது அந்த குழந்தை எந்த ஒரு அசைவும் இன்றி உடம்பு குளிர்ந்த நிலையில் இருந்துள்ளது.

    இதையடுத்து குழந்தையை அவரது பெற்றோர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் காகிதக்கூழ் பிரிவில் கட்டணமில்லா தொழிற் கல்வி பட்டயப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டது
    • ஜுன்.1 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்

    கரூர்,

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்து, அவர்கள் திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது. மாணாக்கர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும்.

    இந்த கட்டணமில்லாக் கல்வித்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-II ஐ சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் முதன் முறையில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் தகுதியுடையவர்களாவர்.

    ஜுன்.1 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்தம் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிபெற விருப்பமுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1-ன் மனிதவளத் துறையிலும் மற்றும் மொண்டிப்பட்டி அலகு-II-ன் கால அலுவலகத்திலும் பெற்று. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பங்கள் பெறப்பட்ட இடத்திேலயே 15.06.2023 (வியாழக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்குமாறு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சோதனையிடச் சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
    • அதிகாரிகளை திமுகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்தனர். இதனால் பிரச்சனை உருவானது. திமுகவினரின் எதிர்ப்பு காரணமாக முதல் நாளில் கரூரில் வருமான வரி சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது.

    கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனையிடச் சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் பாதுகாப்பு கருதி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல் ராயனூரிலும் அதிகாரிகளை திமுகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 6 பேரும், ராயனூர் சம்பவத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகின்ற 30-ந்ேததி ெதாடங்குகிறது
    • சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் https://dkgacklt.in/ என்ற கல்லூரி இணையதள முகவரியிலும், கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்படும்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கல்லூரியில் நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் உள்ள இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பானை, மாணவர்கள் விண்ணப்பித்த பொழுது வழங்கிய அலைபேசி எண்ணின் வாட்ஸ்-அப், இணைய முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கப்படும்.

    வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். ஜூன் 3-ந் தேதி காலை10 மணிக்கு வணிகவியல் (பி.காம்), வணிக நிர்வாகவியல் (பி.பி.ஏ.), வணிகவியல் கணினி பயன்பாட்டியல் (பி.காம் சி.ஏ) ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    ஜூன் 6-ந் தேதி காலை 10 மணிக்கு இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூன் 7-ந் தேதி காலை 10 மணிக்கு மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்குசேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் உரிய நாட்களில் காலை 10 மணிக்கு இைணய வழி விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ் மற்றும் தங்களுடைய 2 புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 2 படிவம் மற்றும் கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக கல்லூரிக்கு வருகை தரவேண்டும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் https://dkgacklt.in/ என்ற கல்லூரி இணையதள முகவரியிலும், கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • நொய்யல் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருகிறது
    • போலீசார் வாகன சோதனை நடத்தி திருட்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், குட்டக்கடை, காகிதபுரம், வேலாயுதம்பாளையம், புகழூர், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், மேட்டுப்பாளையம் இந்தநிலையில் இப்பகுதியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாலிபர்கள், வெளி மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.அப்போது பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வீடுகளில் தனி நபர்கள் இருப்பது, வெளியூர்களுக்கு சென்றவர் களின் வீடுகள் போன்றவற்றை கண்காணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.

    அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விடுகின்றனர். இதனால் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாக போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

    தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும். எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்த வேண்டும். இதனால் திருட்டு குற்றங்களை தடுக்க முடியும். எனவே போலீசார் வாகன சோதனை நடத்தி திருட்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ெரயிலில் அடிபட்டு கிடந்த முதியவர் மீட்கப்பட்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் கரூர் ெரயில்வே தண்டவாள பாதையில் ஹோம் சிக்னல் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ெரயிலில் அடிபட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக புகளூர் ெரயில்வே நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ெரயில்வே நிலைய அதிகாரிகள் மயங்கி கிடந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து கரூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் ெரயில்வே போலீசார் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் அடையாளம் தெரியாத நபர் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குளித்தலை அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்தார்
    • தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    குளித்தலை அடுத்த பொருந்தலுார் பஞ்., கண்ணல்வடநாயக்கனுாரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் கடந்த 3 ஆண்டுகளாக தெலுங்கப்பட்டியில் உள்ள நாராயணன் என்பவரின் தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் காய்ந்த மட்டைகளை அப்பறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது தென்னை மட்டையில் மறைந்திருந்த பாம்பு ஒன்று பழனிசாமியை கடித்தது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    பின்னர் அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பழனிசாமியை பரிசோதனை செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து பழனிசாமியின் மகன் ராமசாமி கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யபட்டார்
    • தப்பியோடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் பசுபதிபாளையம் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(வயது25). இவர் கரூர் கொளந்தாகவுண்டனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியை காட்டி அருண்குமாரிடம் ரூ.200ஐ பறித்து சென்றனர். பின்னர் இதுகுறித்து அருண்குமார் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் கத்தியை காட்டி பணம் பறித்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், வேல்முருகன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து, சந்தோஷை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும் தப்பியோடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×