என் மலர்tooltip icon

    கரூர்

    • தவுட்டுபாளையத்தில் குழாய் வால்வு பழுதானதால் வீணாகும் குடிநீர்
    • விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    புகளூர், வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வட்டைக் கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு, அதிலிருந்து குடிநீர் தொட்டிக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. அங்கிருந்து குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவுட்டுப்பாளையம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை தார் சாலை ஓரத்தில் செல்லும் குடிநீர் குழாயில் வால்வு பொருத்தப்பட்டுள்ளது. அந்த வாழ்வு பழுதடைந்து தற்பொழுது அந்த வாழ்வு வழியாக ஏராளமான குடிநீர் வெளியேறி நீரோடை போல் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற முறையில் குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் வால்வு பழுதை நீக்கி குடிநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரூர் தோட்டக்கலைத் துறை சார்பாக மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்
    • கரூர் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுக அழைப்பு

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் வட்டாரத்தில் உள்ள பயனாளிகளுக்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட காய்கறி விதைகள் தொகுப்புகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மணிமேகலை தலைமையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத்துறை அலுவலர் செல்வகுமார், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் அருட்செல்வன் மற்றும் மாடித் தோட்ட முன்னோடி பயனாளி உதயபானு ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு மாடித் தோட்ட காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாடித்தோட்ட காய்கறி தொகுப்பில் செடி வளர்ப்பு பைகள் 6-எண்கள், இரண்டு கிலோ தென்னை நார்கழிவு, ஆறு வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம் 200 மில்லி, பாஸ்போ பாக்டீரியா 200 மில்லி, டிரைக்கோடெர்மா 200 கிராம், வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் வளர்ப்பு முறைக்கான கையேடு ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் ரூ.450 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஒரு பயனாளிக்கு இரண்டு தொகுப்புகள் மட்டும் வழங்கப்படும். தேவைப்படுவோர் ஆதார் நகல் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு கரூர் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு கரூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • கரூரில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் மயில்களால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்
    • மயில்களை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினருக்கு கோரிக்கை

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், ஒரம்புப்பாளையம் பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, பழமாபுரம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர்செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளதால் தானியங்கள் பயிர் செய்துள்ள பகுதிகளுக்கு சென்று தானியங்களையும், பயிர் வகைகளையும் மயில்கள் கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் மயில்களின் தொல்லையால் மேலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள மயில்களை பிடித்து வனப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- பரமத்தி வேலூர் செல்லும் சாலை உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கரூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இன பெண்களை பொது வெளியில் நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்து 80 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத, கலவரத்தை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள், கட்சியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

    • வேலாயுதம்பாளையத்தில் நிறுத்தப்பட்ட பைக் திருட்டப்பட்டுள்ளது
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- பரமத்தி வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள யாஸ் பில்டிங்கில் உள்ள முதல் தளத்தில் குடியிருந்து வருவர் அலிபாதுஷா (59).இவரது மகன் முகமது அசாருதீன் (29).இவர் புகளூர் காகித ஆலையில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காயிதா லையில் பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு முன் தனது மோட்டார் பைக்கை நிறுத்தி பூட்டிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.பின்னர் காலை காகித ஆலைக்கு பணிக்கு செல்வதற்காக மோட்டார் பைக் பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை பார்த்தபோது அங்கு மோட்டார் பைக்கைகாணவில்லை. முகமது அசாருதீன்பல்வேறு பகுதிகளுக்கு சென்று மோட்டார் பைக்கை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இது குறித்து முகமது அசாருதீன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • போட்டி தேர்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையுடன் படியுங்கள் - முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு
    • கரூர் அரசு மருத்துவ கல்லூரி நடந்த விழாவில் பேச்சு

    கரூர், 

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கல்லூரி மாணவ மாணவர்களுக்கான போட்டித் தேர்வு களுக்கான நிகழ்ச்சியில் "படிப்பது சுகமே" என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அப்போது அவர் கூறும் போது,போட்டித் தேர்வு என்பது பல்கலை தேர்வுக்கு மாறுபட்டு இருக்கும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது அதற்கென மனநிலையை உருவாக்கி புரிந்து நன்கு படிக்க வேண்டும். முதலில் போட்டித் தேர்வுகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன அந்த காலியிடங்களுக்கு ஏற்றார் போல் உங்கள் மனநிலையை உருவாக்கி போட்டித் தேர்வுக்கு போட்டியிட வேண்டும்.இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது குறைந்தது 17 மணி நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் பாடத்திட்டங்களை தாண்டி அனைத்து மேற்கோள் புத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும். .ஒன்றைக் குறிப்பிட்டு கொள்கிறேன் வாழ்க்கை என்பது எழுதப்படாத நோட்டு புத்தகங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் ஒவ்வொரு வாரியாக அந்த வாழ்க்கை என்ற புத்தகங்களை நிரப்பும்போதுதான் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.ஒரு மனிதனுக்கு மதிப்பெண் முக்கியமல்ல அவன் சமுதாயத்தில் பெறுகின்ற நன்மதிப்பு தான் அவன் பெரும் மதிப்பெண்ணாகும். ஆகவே சமுதாயத்தில் நீங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியா விட்டாலும் நம்மால் முடிந்த மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.போட்டித் தேர்வுகளில் தயாராகும் பொழுது முதலில் எந்தப் பாடத்தை எடுக்க வேண்டும் முடிவு எடுக்கவும், இரண்டாவதாக அதன் தொடர்பு உள்ள பாடங்களை தேடுங்கள். மூன்றாவதாக அதில் உள்ள கருத்துக்களை குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வில் குறிப்பு எடுத்தால் தான் ஒருவர் வெற்றி பெற முடியும். உங்களுடைய கல்லூரி தேர்வுகளிலேயே மருத்துவம் படித்தாலும் சரி எந்த பாடப்பிரிவுகளும் படித்தாலும் சரி உங்கள் ஆசிரியர் வகுப்பறையில் கற்றுக் கொடுக்கும் குறிப்பு எடுத்து படிக்க வேண்டும்.எனவே படிக்கும் பொழுது தாழ்வு மனப்பான்மையுடன் படிக்காமல் தன்னம்பிக்கையுடன் படியுங்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறலாம்.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன். தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ 21.58 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது

    வேலாயுதம் பாளையம்,

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்நடந்த ஏலத்தில் 59.78½ குவிண்டால் எடை கொண்ட 17 ஆயிரத்து 499 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.36-க்கும், சராசரி விலையாக ரூ.23.50-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து35ஆயிரத்து 831-க்கு விற்பனையானது.அதேபோல் 275.59 ½ குவிண்டால் எடை கொண்ட 575-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.55-க்கும், சராசரி விலையாக ரூ.79.19-க்கும் விற்பனையானது.2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.91-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.30-க்கும், சராசரி விலையாக ரூ.71.60-க்கும் என மொத்தம் ரூ.20லட்சத்து22ஆயிரத்து 250-க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.21லட்சத்து58 ஆயிரத்து 081-க்கு விற்பனையானது.

    • சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்
    • படுகாயம் அடைந்த நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    கரூர்,

    கரூர் மாவட்டம், லிங்கமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சமீர் முகமது (வயது 19), இவர் தனது நண்பர் நவ்ஃபுல் உடன், கரூரில் இருந்து அரவக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மலைக்கோவிலூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனம் சமீர் முகமது தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், பின்னால் அமர்ந்து வந்த நவ்ஃபுல் படுங்காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சமீர் முகமது உடலை போலீசார் கைப்பற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முன் அறிவிப்பு இன்றி திடீர் மின்னிறுத்தம் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்
    • பகல் 10 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை தொடர்ந்து பவர்கட்

     வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பகளூர் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் வேலாயுதம்பாளையம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கந்தம்பாளையம் வரை சாலை விவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள் மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திடீரென மின்னிருத்தம் செய்யப்பட்டது. இதனால் வேலாயுதம்பாளையம், மலை நகர், புகழி நகர், ரவுண்டானா, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 11.00 மணி மாலை 5.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப் பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    • வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
    • 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவி ல், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் ஆகிய கோவில்களில் உள்ள கால பைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் ஆடி மாத வளர்பிறை தேய்பிறையை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • கரூரில் தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி சக்திவேல் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

    கரூர்,

    மத்திய அரசை கண்டித்து கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட தி.மு.க. மற்றும் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி சக்திவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவ காமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு இணை செயலாளர் நெல்லி குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சர் செந்தில்பாலாஜி கரூருக்கு புதிய பஸ் நிலையம், உட்கட்டமைப்பு வசதி உள்பட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். பா.ஜ.க. அரசு வீட்டிற்கு போகக்கூடிய காலம் நெருங்கி விட்டது. மணிப்பூரில் நடைபெற்ற மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்க கூடிய பா.ஜ.க. அரசையும், மத்திய அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்என்றார்.ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர்கள் கரூர் கணேசன், எஸ்.பி.கனகராஜ். சுப்பிரமணியன். கோல்டுஸ்பாட் ராஜா, அன்பரசன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பரவலாக திடீர் மழை பெய்தது
    • குளிர்ச்சியான சீதோஷணம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், கட்டிப்பாளையம், நத்தமேட்டுப்பாளையம், பாலத்துறை, வேலாயுதம்பாளையம், காகித ஆலை, புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், கந்தம்பாளையம், திருக்காடுதுறை, கரைப்பாளையம், முத்தனூர், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டது. கிராமப்புறங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக வாடிய நிலையில் இருந்த பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×